இந்தியாவின் முதல் வெளிநாட்டு சிகிச்சைக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்..!

பொதுத்துறை காப்பீடு நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், சர்வதேச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதய அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, நரம்பு சம்பந்தமான சிகிச்சைகள், கேன்சர், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை போன்ற அதிதீவிர நோய்களின் மருத்துவக்

கட்டணங்களை இக்காப்பீட்டில் பெற இயலும்.

நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம், பெறப்படும் பீரிமியம் தொகையின் அடிப்படையில் இந்தியாவின் பெரிய மருத்துவக் காப்பீட்டு நிறுவனமாகும்.

காப்பீட்டுத் திட்டங்கள்

ஆசிய நாடுகளில் உள்ள மருத்துவமனைகளுக்குத் தனி மருத்துவக் காப்பீடு திட்டமும், ஆசிய நாடுகளுக்கு வெளியே உள்ள மருத்துவமனைகளுக்கு வேறு மருத்துவகாப்பீடு திட்டமும் உள்ளது.

ஆசிய மருத்துவமனைகளுக்கு ஆயுள் முழுவதற்குமான 1 மில்லியன் டாலர் மருத்துவக் காப்பீடும், உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆயுள் முழுவதற்குமான 2 மில்லியன் டாலர் மருத்துவக் காப்பீடும் தரப்படுகிறது. அனைத்து வகைச் சிகிச்சைகளுக்கும் 90 நாட்கள் காத்திருப்புக் காலம் உண்டு.

ஆயுள் முழுவதற்கும்

இது ஆயுள் முழுவதற்குமான காப்பீடு என்பதால் இடையில் எவ்வித இடைஞ்சல்களும் இல்லை. வெளிநாட்டுச் சிகிச்சைக்கான இவ்வகைக் காப்பீட்டை அளிக்கும் முன்பு, இரண்டாவது முறை மருத்துவ ஆலோசனையும் கேட்கப்படும்.

பிரீமியம்

காப்பீடு பெறும் நபரின் மருத்துவ வரலாறு மற்றும் வயதைப் பொறுத்துப் பிரீமியம் அமையும். பிரீமியம் 25 லிருந்து 100% வரை அதிகரிக்கப்படும். இது அதிக ஆபத்து நிறைந்த காப்பீட்டாளர்களுக்காகப் பிரீமியத்தைக் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை உயர்த்தும் காப்பீடு நிறுவனங்கள் பின்பற்றும் முறையாகும்.

30 வயது உள்ள ஒருவருக்கான அதிகரிக்காத ஆண்டுப் பிரீமியம், ஆசிய மருத்துவமனைகளுக்கான காப்பீட்டுக்கு ரூ9,003 ம், ஆசியாவிற்கு வெளியே உள்ள மருத்துவக் காப்பீட்டிற்கு ரூ. 11,453 ஆகவும் இருக்கும்.

நியூ இந்தியா சர்வதேச மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் அம்சங்கள்

ஜான் ஹாப்கின்ஸ், சிடர்-சினய் மெடிக்கல் சென்டர், கிங்க்ஸ் காலேஜ் ஹாஸ்பிட்டல் போன்ற சிறந்த மருத்துவமனைகள் உள்பட மொத்தம் 99 சர்வதேச மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்குக் காப்பீடு வழங்குகிறது.

இந்தக் காப்பீட்டில் இணைய வயது வரம்பு 18 முதல் 65 ஆண்டுகள்.

ஏற்கனவே ரூ.8 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மருத்துவக் காப்பீடு எடுத்தவர்களுக்கு இந்தக் காப்பீடு கிடைக்கும்.

இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே இந்தக் காப்பீடு பொருந்தும்.

இந்தியாவில் செய்யப்படும் ஹீமோத்தெரபி போன்ற சிகிச்சைகளுக்குக் காப்பீடு கிடையாது.

இது ஒரு முற்றிலும் பணமில்லா காப்பீட்டுத் திட்டம்.

One response

  1. இந்தியாவிலேயே மேலை நாட்டு முறைகள் கிடைக்கும்போது, இது எதற்கு?

%d bloggers like this: