எடை குறைந்ததும் சீராக சாப்பிடணும்!
பேலியோ டயட்டில், 17 – 20 கிலோ வரை எடை குறைகிறது; எடை குறையும் போது, சர்க்கரை, ரத்தக் கொழுப்பு குறையும். வெறும் அசைவம் மட்டும் எடுத்து, கார்போ ஹைட்ரேட்டை முழுமையாக அல்லது பாதியாக குறைத்தால், ‘கீடோன்’ என்ற உப்பு உடலில் சேரும். அது, ஆபத்தை உண்டு பண்ணலாம் என்ற பயமும், கேள்வியும், நவீன அறிவியல் படித்த எல்லோருக்கும் இருக்கிறது.
பி.எஃப் கணக்கில் திருத்தம் செய்வது எப்படி?
இந்தியாவில் பி.எஃப் கணக்கு உள்ள தொழிலாளர்களில் எட்டுக் கோடிப் பேருக்கு பிறந்ததேதி தவறாக உள்ளதாகவும், 11 கோடி பேருக்கு தந்தையின் பெயர் தவறாக உள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பணியாளர்கள் தங்களின் பி.எஃப் பணத்தைத் திரும்பப் பெறும்போது சில சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க…
தினமும் காலையில் கண்விழித்ததும் பரபரப்பாகக் கிளம்பி வேலைக்குச் செல்வது, வேலை முடிந்ததும் வீடு திரும்பி டி.வி முன்னால் உட்கார்ந்து மீதமுள்ள பொழுதைக் கழிப்பது என இன்னும் எத்தனை ஆண்டுகள் இப்படியே கடக்கப்போகிறோம்? கொஞ்சம் மாற்றி யோசித்து மூளைக்கும் வேலை கொடுக்கலாம்.
சக்கரத்தில் சிக்கலாம்; கழுத்தெலும்புகூட உடையலாம்…” டுவீலரில் சிக்கும் துப்பட்டாவும், ஆபத்தும்!
முந்தானையை இழுத்து இடுப்பில் செருகிக்கொண்டு வேலைப் பாருங்கள் என அந்தக் காலத்தில் பெரியவர்கள் சொன்னதன் அர்த்தம், இந்த அதிர்ச்சி சம்பவத்தை படித்த பிறகுதான் புரிகிறது. புனேவைச் சேர்ந்த சுப்ரியாவுக்கு வயது 40. சப்பாத்திக்கு மாவு பிசையும் மெஷின்
சக்தி தரிசனம் – கரு காக்கும் நாயகி!
இறைவன் முல்லைவனநாதருடன், திருக்கருகாவூரில் கருகாக்கும் நாயகியாய் அருள்பாலிப்பவள் கர்ப்பரட்சாம்பிகை. மேலிரு கரங்களில் தாமரையும் அக்ஷமாலையும்; கீழ்க் கரங்களில் வலக்கரம் அபயம் அருள; இடக்கரம் ஊரு ஹஸ்தமாகத் தொடையில் ஊன்றப்பட்டிருக்க, புன்னகையோடு அருளும் இந்த அம்பிகையை கரும்பணையாள் என்றும் போற்றுவார்கள். கரும்பைப்போல் இனிமையானவள் என்று பொருள்.
கருவைக் காத்த கதை
நித்திருவ முனிவரின் மனைவியான வேதிகை கர்ப்பவதியாய் இருந்தாள். பசிக்கு அன்னமிட இயலாத அவளை, அவளின் நிலை அறியாமல் சபித்துவிட்டார் ஊர்த்துவபாதர் என்ற முனிவர். இதனால் வேதிகையின் வயிற்றுக் கருவுக்கு ஊனம் வர, அவள் திருக்கருகாவூர் பெருமானையும் பெருமாட்டியையும் வேண்டித் துதித்தாள். அம்பிகை கர்ப்பரட்சகியாகத் தோன்றி, கலைந்த கருவை ஒரு குடத்துக்குள் ஆவாஹனம் செய்து, குழந்தை உருவாகும் நாள் வரையிலும் வைத்துக் காப்பாற்றி, ‘நைந்துருவன்’ என்னும் குழந்தையாகக் கொடுத்தாள் என்கிறது தலபுராணம்.
பின்னர் நித்திருவர் – வேதிகை தம்பதி, ‘இனிமேல் இத்தலத்தில் கருவுற்ற பெண்களுக்கு எந்த இன்னலும் வராமல் காக்க வேண்டும்’ என்று மனமுருகி வேண்டிக்கொள்ள, அதன்படியே இன்றைக்கும் கருகாத்து அருள்பாலித்து வருகிறாள் கர்ப்பரட்சாம்பிகை.
பிரார்த்தனைகள் பலிக்கும்
மகப்பேறு வாய்க்காத பெண்கள், இங்கே கோயில் கொண்டிருக்கும் அன்னை கருக்காத்த நாயகியை பக்தியோடு மனமொப்பி வேண்டி, நெய்யினால் படி மெழுகி, கோலமிட்டு, அர்ச்சனை செய்ய வேண்டும். அம்மன் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட நெய்யினை 45 நாள்கள் உண்டு வந்தால், குழந்தைப் பேறு கிட்டும்.
கருவைக் கொடுப்பது மட்டுமல்ல; கருத்தரித்த பெண்கள், இந்தத் தலத்து நாயகியை வேண்டி, விளக்கெண்ணெய் மந்திரித்து வயிற்றில் தடவினால், அவர்களின் கருவுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் காக்கப்படுவதுடன் சுகப்பிரசவம் நிகழும்.
பிரார்த்தனை ஸ்லோகம்
‘ஸ்ரீமாதவி கானனஸ்தே – கர்ப்பரக்ஷாம்பிகே பாஹிபக்தம் ஸ்துவந்தம்…’ என்று தொடங்கும் ஸ்லோகத்தைத் தொடர்ந்து ஓதி வந்தால், சுகப் பிரசவம் நடைபெறும்.