ரெஸ்யூம்’ல இந்த 10 விஷயம் சரியா இருந்தா… வேலை கேரண்டி!

10. கவனத்தை ஈர்த்தல்:

ஒரு ரெஸ்யூம் அதிகபட்சமாக 6 வினாடிகள் மட்டுமே பார்க்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. 6 வினாடிக்குள் நம் திறமையை முழுமையாக காட்ட முடியும் என்றால் வேலை நமக்குதான்.

வேலைக்கு என்ன தேவையே அதுமட்டும் முதல் பக்கத்தில் கண்ணில் படும் படியாக தெளிவாக சுட்டிக்காட்டுங்கள்.

9. பார்முலா:

என்னுடைய முந்தைய நிறுவனத்தில் இதை செய்தேன் அதை செய்தேன் என்று பரீட்சையில் எழுதுவதுபோல் எழுதாமல், பணம் ஈட்டுவது, சேமிப்பது

நேரத்தை மிச்சப்படுத்துவது, வேலை எளிதாக்கும் யுக்தி, சிக்கலை தீர்க்கும் ரகசியம், உறவுகளை மேம்படுத்தும் கலை, புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் மந்திரம், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளும் சாமர்த்தியம் போன்ற அம்சங்கள் மறைமுகமாக எடுத்துக்காட்ட முற்படுங்கள்.

8.வரிசைப்படுத்துதல்:

வரிசைப்படுத்துதல் மிக முக்கியமான அம்சம், நாம் இன்று பார்க்கும் அதிகமான ரெஸ்யூம்களில் தேதி முதல் ஆளாக வந்து நிற்பது வழக்கமாக உள்ளது. தேதியை விட என்ன வேலைக்கு விண்ணபிக்கிறோம் என்பது மிக முக்கியம். டைட்டில், விண்ணப்பிக்கும் வேலையின் பெயர், சிட்டி, ஸ்டேட், டேட் என்ற வரிசையில் அமைவது சிறப்பான தோற்றத்தை தரும்.

இதே போல படிப்பையும் வரிசை படுத்துவது இன்றியமையாதது. குறிப்பாக கடைசியாக முடித்த படிப்பை முதல் வரிசையில் குறிப்பிட்டு கீழ் நோக்கி கொண்டு செல்வது நன்மை பயக்கும். நிறுவனம் எதிர்பார்க்கும் உயர் கல்வித்தகுதியை முதலில் கண்ணில் காட்டும்.

புதிதாக படிப்பை முடித்தவர்கள் படிப்பை முதலிலும், அனுபவம் உள்ளவர்கள் அனுபவத்தை முன்னே காட்டுவதும் சிறப்பு.

7. அனுபவம்:

15 வருட பணி அனுபவத்தை முதல்பக்கத்தில் புல்லட் கொடுத்து வரிசையாக கொடுத்தால் அதற்கு மட்டுமே ஒரு புத்தகம் போட வேண்டியது வரும் எனவே, இதில் ரெண்டு புல்லட் குறைத்தால் உபயோகமான தகவல்களை அதில் பட்டியலிட வாய்ப்பாக அமையும்.

எனவே விண்ணப்பிக்கும் பணிக்கு என்ன தேவையோ அதை சார்ந்தவைகளை மட்டும் கொடுப்பது பயன்கொடுக்கும்.

6. தனித்திறமை:

விண்ணப்பித்த வேலைக்கு தொடர்புடைய தனித்திறமைகள் உங்கள் ரெஸ்யூமில் மூன்றில் ஒரு பகுதியை அலங்கரிக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.

இது உங்களுக்கான வேலையை உங்களுக்கு உறுதிபடுத்த உதவும்.

5. புல்லட் பாய்ண்ட்:

கூடுமான வரை தனித்திறமைகளை புல்லட் பாய்ண்ட் கொடுத்து குறிப்பிடுங்கள் இது எளிதாக உங்கள் திறமைகளை சுட்டிக்காட்டும்.

4. வார்த்தைகள்:

விண்ணப்பிக்கும் வேலைக்கு தொடர்புடைய கீவேர்ட் உங்கள் ரெஸ்யூமில் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள்.

அது உங்களுக்கு சரியான நிறுவனத்தையும், வேலையையும் அடையாளம் காட்டும். பெரும்பாலான நிறுவனங்கள் கீவேர்ட் கொண்டு தங்களுக்கு தேவையான ரெஸ்யூமை பெறுகின்றன.

3.ரெபரென்ஸ்:

ரெபரென்ஸ் முக்கியம் என்றாலும் கூட விண்ணப்பிக்கும் நிறுவனம் குறிப்பிட்டால் மட்டுமே ரெபரென்ஸ் யார் என்பதை குறிப்பிடுங்கள் இல்லாத பட்சத்தில் அது உங்களுக்கான இடத்தை அடைக்கும் என்பதை மறக்காதீர்கள். அல்லது அடுத்த பக்கத்தில் கொடுக்கலாம்.

2. அளவு:

15 வருட அனுபவம் என்றாலும் கூட எது முக்கியமோ அதை மட்டும் கொடுக்க முற்படுங்கள்.

நமது அனுபவத்தை அதன் சாரம் குறையாமல் எப்படி கொடுக்க முடியுமோ அப்படி கொடுக்க முற்படுங்கள். பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் முதற்பக்கத்திலே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அது நம் கையில்தான் உள்ளது.

1. வடிவமைப்பு:

ரெஸ்யூமுக்கு நாம் எந்த ஃபான்ட்டைப் பயன்படுத்துகிறோம் என்பது மிக மிக முக்கியமானது. பான்ட் முதல் எழுத்துப்பிழை, இடைவெளி போன்ற அம்சங்கள் புரஃபஷனலாக இருக்கிறதா என்பதைக் கவனமாகப் பாருங்கள்.

%d bloggers like this: