இந்த பொருட்களை எல்லாம் பிரிட்ஜ்-ல் வைக்காதீர்கள் -காரணம் உள்ளே!

தற்போது கோடைகாலம் ஆரம்பமாகி விட்டது. அப்போ நாம் சொல்லவே தேவை இல்லை நம்ம அறிவாளி மக்கள் எல்லாரும் எதை பிரிட்ஜ்-ல் வைக்கலாம் எதை பிரிட்ஜ் வைக்க கூடாது என பகுப்பாடே பார்க்காமல் கையில் கிடைத்த அனைத்தையும் பிரிட்ஜ்-ல் அடைத்து வைத்து விடுவோம்.

உங்களுக்கு தெரியுமா?, பிரிட்ஜ்-ல் வைக்க கூடாத பொருட்களும் உள்ளது என்று. நாம் பிரிட்ஜ்-ல் வைத்த உணவுகளை சாபிட்டால் உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி பக்க விளைவுகளும் வருமாம். அதுமட்டும் இல்லை, பிரிட்ஜில் வைத்த உணவு சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் ஏற்படும் என்கிறார்கள் வல்லுனர்கள்.

பிரிட்ஜில் வைக்க கூடாத பொருட்கள்….! 

1. வெள்ளை ப்ரெட்: வெள்ளை ப்ரெட் ஊட்டசத்து இல்லாத பொருள் ஆகும் அதில் நார்சத்து சுத்தமாக இல்லை. அதை நாம் சாப்பிடுவதே தவறு அதை நாம் பிரிட்ஜில் வைத்து சாபிட்டால் என்ன நடக்கும் நினைத்து பாருங்கள். முடிந்த அளவு நவதானிய ப்ரெட் அல்லது கோதுமை ப்ரெட் ஆகியவற்றை பயன்படுத்துங்கள். 

2. தயிர்: கொழுப்புசத்து குறைவான அதாவது பாகெட் பால், தயிர் ஆகியை உடலுக்கு கேடு விளைவிக்கும். அவற்றில் கொழுப்பு சத்துக்கள் நீக்கப்படுவதால் அதற்கான பயனும் ஊட்ட சத்தும் குறைந்து விடுகிறது. எனவே, நாம் முடிந்தவரை இவற்றை பிரிட்ஜில் வைத்து உபயோகிப்பது தவறு. பசும்பால் மற்றும் பசு தயிர்களை உபயோகிப்பது நல்லது.

3. சோடா: அனைவரின் வீட்டு பிரிட்ஜிலும் சோடா குளிர்பான பாட்டில்கள் இருக்கும். அவை பொதுவாகவே ஆரோக்கியம் அற்றது. நாம் அதை  பிரிட்ஜில் வைத்து உபயோகித்தால் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். 

4. இறைச்சி: உங்கள் வீட்டு பிரிட்ஜில் நீங்கள் இறைச்சியை வைத்திருந்தாள் அதை உடனே எடுத்து விடுங்கள். இந்த உணவுகளில் புற்றுநோயை உண்டாக்கும் மூலக்கூறுகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

5. பழங்கள்: வெட்டிய நிலையில் பழங்களை நாம் பிரிட்ஜில் எப்போதும் வைத்து உபயோகிக்க கூடாது. ஒரு முறை நீங்கள் பழத்தை வெட்டிவிட்டால் அதை பிரிட்ஜில் வைத்து மீண்டும் உபயோகிக்க கூடாது. 

6. காப்பி: நாம் எப்போதும் காப்பியையோ அல்லது காப்பி கோட்டையையோ பிரிட்ஜில் வைத்து உபயோகிப்பது உடல் நலகுறைவை உண்டாக்கும்.

7. தேன்: குறைந்த வெப்பநிலையில் தேன் படிகமாக துவங்கிவிடும். எனவே, நாம் அதை குளிர்சாதனபெட்டியில் வைப்பது உபயோகமற்றது.

8. சமையல் எண்ணெய்: நாம் சமையலுக்கு உபயோகித்த எண்ணையை அடுத்தநாள் பயன்படுத்த வேண்டுமே? என்ற நல்ல எண்ணத்தில் அதை நாம் பிரிட்ஜில் வைத்து பாதுகாப்பது தவறானது.  

9. சாதம்: நாம் காலையில் சமைத்த உணவு மிச்சமாகிவிட்டது என நாம் அதையும் தூக்கி பிரிட்ஜில் வைப்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு பழக்கம். சமைக்காமல் அரிசியாக இருப்பதை நாம் பிரிட்ஜில் சேமிக்கலாம்.  இது காற்று போகாதபடி இறுக்கமான கட்டி சேமிக்கப்பட்டால், வெள்ளை அரிசி 8 முதல் 10 ஆண்டுகள் வரை நீடிக்கலாம். பிரவுன் அரிசி 1 முதல் 2 ஆண்டுகள் நீடிக்கும்.

<span>%d</span> bloggers like this: