Advertisements

பாதுகாப்பான செல்போன் பயன்பாடு

1. செல்போனை நீண்ட நேரம் கையில் வைத்திருப்பதால் கைகளின் வழியே கதிர்வீச்சு பாதிப்புக்கு நாம் உள்ளாகலாம். கையிலேயே வைத்திருப்பதற்குப் பதிலாக பலகை, மேசை போன்ற கடினமான மேற்பரப்பின் மீது வைத்து ஒரு கையாலேயே ‘டைப்பிங்’, ‘சாட்டிங்’ செய்யலாம்.

2. பயணங்களின் போது மொபைல் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், பயணங்களின் போது சிக்னல் கிடைப்பது சிரமம். இதனால் கதீர்வீச்சு அபாயமும் அதிகம்.
3. உங்களுக்கு மொபைல்போன் தேவைப்படாத போதெல்லாம் ‘ஏர்ப்ளேன் மோட்’ ஆப்ஷனில் வைத்துவிடுங்கள். குறிப்பாக, நீங்கள் தூங்கும்போது. இது எல்லாவிதக் கதிர்வீச்சு அபாயங்களுக்கும் ‘குட் பை’ சொல்லிவிடும்.

4. எப்போதும் உங்கள் மொபைல்போனை உங்கள் உடலிலிருந்து 7 முதல் 10 இன்ச் வரை தள்ளியே வைத்திருங்கள். மொபைலில் சிக்னல் இருக்கும்போது எல்லாம் கதீர்வீச்சு அபாயம் இருந்துகொண்டேதான் இருக்கும். அதனால், கைகளிலும், உங்களது சட்டைப் பையிலும் மொபைல் போனை வைப்பதற்குப் பதிலாக உங்களது பர்ஸ், கைப்பை என மொபைலுக்கான இடத்தை மாற்றுங்கள்.
5. மொபைல் போனை நேரடியாகக் காதில் வைத்துப் பேசுவதைவிட  நல்ல தரமான ஹெட்செட் மூலம் பேசலாம். ஹெட்போன் மூலம் பேசும்போதும் மொபைல் போனை கையில் பிடித்திருக்காமல் பக்கத்திலிருக்கும் நாற்காலியிலோ, எதிரில் இருக்கும் மேசையிலோ வைத்துப் பேசுவது நல்லது.

Advertisements
%d bloggers like this: