ரெய்கி என்னும் தொடுமுறை சிகிச்சை

னித உடல் என்பது ஒரு தானியங்கி எந்திரமாகும். கண்களுக்குப் புலப்படாத, ஆரா என்னும் ஒளிவட்டம் நம் உடலில் இருக்கிறது. அந்த ஒளிவட்டமே நம்மையும் நம்மைச் சுற்றியும் உள்ள இயற்கையைப் பிணைக்கும் பாலமாக இருக்கிறது. கண்களுக்குப் புலப்படாத ஒளிவட்டத்தில் ஏழு முக்கிய சக்கரங்கள் உள்ளன. இந்தச் சக்கரங்கள் மூலம் உலகத்தில் உள்ள பிரபஞ்ச சக்தி, நம் உடலில் உள்ள உயிர்

சக்தியுடன் இணைகிறது. இந்த ஓட்டம் தடையில்லாமல் இருந்தால் உடலானது இயற்கையுடன் ஒன்றி ஆரோக்கியமாக இருக்கும். தடைபட்டால் ஆரோக்கியம் பாதிக்கும். எந்தச் சக்கரத்தில் தடை ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து அந்தத் தடையை விலக்கி  எல்லாச் சக்கரங்களையும் சமநிலையில் இயங்கச் செய்வதே `ரெய்கி’ சிகிச்சை.
மனித உடலில் நூற்றுக்கணக்கான சக்கரங்கள் இருந்தாலும், நாடிகள் சந்திக்கும் மையங்களாக ஏழு சக்கரங் கள் உள்ளன. அவையே மனிதனின் சக்தி நிலைக்கான ஊற்றுக்கண்கள். இந்த ஏழு சக்கரங்களுக்கெனத் தனித்தனியாக இடங்கள் குறிக்கப் பட்டாலும் அவை ஒரே இடத்தில் இருக்குமென்று சொல்ல முடியாது. சக்தி நிலையில் ஏற்படும் வளர்ச்சிக்கேற்ப அவை நகர்ந்து செல்கின்றன. இதேபோல் அக்குபஞ்சர் புள்ளிகள், மெரிடியன்கள், சூட்சும நாடிகள் போன்றவை மனித உடலில் உள்ளன. அவற்றைத் தூண்டுவதன் மூலம் உடலுக்குத் தேவையான சக்திகளைப் பெறமுடியும். சுவாசத்தை முறைப்படுத்தி,  ஆக்சிஜன் குறைபாட்டையும் சரிசெய்யமுடியும்.

‘ரெய்’ என்றால் அதிக சக்தி, ‘கி’ என்றால் அதிவேக ஆற்றல் என்று பொருள். மனிதனின் ஆற்றலை அதிகரிக்கும் சிகிச்சையே ரெய்கி. இதை `எனர்ஜி ஹீலிங்’ என்றும் சொல்லலாம். பொதுவாக உடல்ரீதியான சிகிச்சை, வேதிப்பொருள்களைக் கொண்டு அளிக்கப்படும் சிகிச்சை, எனர்ஜி சிகிச்சை என மூன்றுவிதமான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அந்தவகையில் எனர்ஜி சிகிச்சையானது ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் ஒரு சிகிச்சையாகும். இந்தச் சிகிச்சை பாதுகாப்பானது. எந்தவிதப் பக்கவிளைவையும் ஏற்படுத்தாது. நேர்மறையான சிந்தனையை ஏற்படுத்தக்கூடியது.

மனஅழுத்தம், கோபம், பொறாமை, தாழ்வு மனப்பான்மை போன்ற எதிர்மறை சிந்தனைகளை  எனர்ஜி ஹீலிங் மூலம் சரிசெய்யலாம். தேர்ச்சிபெற்ற ஒருவர் ரெய்கி சிகிச்சை அளிப்பதன்மூலம் பாதிக்கப்பட்டவரின் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நேர்மறையாக மாறும். ரெய்கி சிகிச்சை மூலம், எனர்ஜியானது ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு மாறிச்செல்லும். இதன்மூலம் அடைபட்ட எனர்ஜி சரி செய்யப்படும்.
வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல்ரீதியான பாதிப்புகளும், தூக்கமின்மை, எரிச்சல், மனச்சோர்வு போன்ற மனரீதியான பாதிப்புகளும் `ரெய்கி’ தெரபி மூலம் சரிசெய்யப்படுகின்றன. மன அழுத்தத்தைப் போக்கி ஓய்வு தருவதுடன் எதிர்ப்புசக்தியை அதிகரித்து ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும். தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

சாதாரணத் தலைவலியில் தொடங்கி ஒற்றைத் தலைவலி, கழுத்து வலி, இடுப்பு வலி, மூட்டு வலி, ஆஸ்துமா, சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், மெனோபாஸ் காலத்தில் வரக்கூடிய மனரீதியான பாதிப்புகள் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு `ரெய்கி’ சிறப்பான தீர்வு தரும். அறுவை சிகிச்சைக்குப் பிறகான காலகட்டங்களில் `ரெய்கி’ சிகிச்சை அளித்தால்,   உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அறுவை சிகிச்சைக்குமுன் ஏற்படக்கூடிய படபடப்பு, பயம் போன்றவற்றைக் குறைத்து மனதை இலகுவாக்க உதவும். புற்றுநோயாளி களுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கும்போது அவர்கள் அதை மனரீதியாக எதிர்கொள்ளும் மனோபலத்தைத் தரும்.
`ரெய்கி’ சிகிச்சையைப் போன்றதொரு சிகிச்சை `பிராணிக் ஹீலிங்’. இதில் கூறப்பட்டிருக்கும் பிராணன் என்பது உயிரையும் ஹீலிங் என்பது குணப்படுத்துதல் என்பதையும் குறிக்கும். ஏழு சக்கரங்களின் துணையுடன் சக்தி தூண்டப்படுவதே `பிராணிக் ஹீலிங்’. தொப்புளுக்குக் கொஞ்சம் கீழே கல்லீரல், மண்ணீரல் மற்றும் வயிற்றுப்பகுதியில் உள்ள மணிப்பூர சக்கரம் தூண்டப்படுவதால் வயிற்றுப்புண் உள்ளிட்ட வயிற்று நோய்கள், சர்க்கரைநோய், கல்லீரல், கணைய அழற்சி, பித்தப்பை நோய்கள் குணப்படுத்தப்படும்.

ஆசனவாய், பிறப்புறுப்பின் இடையே உள்ளது மூலாதாரச் சக்கரம். பிறப்புறுப்பிலிருந்து கொஞ்சம் மேலே காணப்படுவது ஸ்வாதிஷ்டான சக்கரம். விலா எலும்புகள் சேரக்கூடிய இடத்துக்குக் கொஞ்சம் கீழே இருப்பது அனாஹத சக்கரம். தொண்டைக்குழியில் காணப்படுவது விஷுத்தி சக்கரம். புருவங்களின் மத்தியில் உள்ளது ஆக்னா சக்கரம். உச்சந்தலையில் காணப்படுவது சகஸ்ராரம் அல்லது பிரம்மாரந்திர சக்கரம். இவை ஒவ்வொன்றும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள உறுப்புகளுக்கு ஆற்றல் தரக்கூடியவை.

%d bloggers like this: