Advertisements

பற்களை உறுதியாக்கும் கருப்பட்டி

னை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீரில் இருந்து தயாரிக்கப்படுவதே கருப்பட்டி. இதை, பனைவெல்லம் என்றும் சொல்வார்கள். வெறும் இனிப்புச்சுவை மட்டுமின்றி, மருத்துவக் குணமும் நிறைந்தது கருப்பட்டி.

* கால்சியம் மிகுந்திருப்பதால் பற்களும் எலும்புகளும் உறுதியாகும்.

பருவமடைந்த பெண்களுக்குக் கருப்பட்டி சேர்த்து உளுந்தங்களியும் வெந்தயக்களியும் செய்து தருவார்கள். இந்தக் களிகள், இடுப்பு வலுப்பெற உதவுவதுடன் கருப்பைக்கும் ஆரோக்கியம் தரும். கருப்பட்டியுடன் எள் சேர்த்து இடித்து அவ்வப்போது சாப்பிடுவதாலும் கருப்பை வலுப்பெறும்.

கருப்பட்டி, ரத்தத்தைச் சுத்திகரித்து விருத்தியாக்குவதால் மனமும் உடலும் உற்சாகமாக இருக்கும்.

சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவில் கருப்பட்டியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

அம்மை நோய்க்கு கருப்பட்டி மிகச்சிறந்த மருந்து. நோய் எதிர்ப்பானாகவும் தடுப்பானாகவும் செயல்படும்.

சீரகத்தை வறுத்து, சுக்கு, மிளகு, ஓமம், கொத்தமல்லி, கருப்பட்டி சேர்த்து, சுக்குக்காபி செய்து குடித்தால் உடல் புத்துணர்ச்சி பெறும். வாய்வுத்தொல்லை நீங்கி நன்றாகப் பசியெடுக்கும்.

கருப்பட்டியில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. சோர்வு, முடி உதிர்தல், ரத்தச்சோகை போன்றவற்றுக்கு கருப்பட்டி நல்லது.

இருமல், சளித்தொல்லையால் தவிப்பவர்கள், குப்பைமேனி, துளசி, ஆடாதொடை சாற்றுடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.

பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி குணமாக, பீட்ரூட் மற்றும் மாதுளை ஜூஸில் கருப்பட்டி சேர்த்துப் பருகலாம்.

உலர்திராட்சை, நிலக்கடலை, செவ்வாழைப்பழம், பசும்பால், கருப்பட்டி கலந்த சாற்றைக் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் நிலக்கடலையுடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டால் பால் சுரப்பு பெருகும்.

Advertisements
%d bloggers like this: