பிரசவ பயம் (Tokophobia)

ருவுறுதல் என்பது எல்லாப் பெண்களுக்குமே சந்தோஷ நிகழ்வாக அமைவதில்லை. சிலருக்கு வேறுவிதமான அனுபவமாகவும் அமைந்துவிடுகிறது. சில பெண்களுக்குப்  பிரசவத்தைப்பற்றி நினைத்தாலே பயம் பற்றிக்கொள்ளும். இதுவும் ஒரு வகை போபியாதான். ‘டோக்கோபோபியா’. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பிரசவிக்கவே பயப்படுவார்கள். இந்த பயத்திற்கான காரணம் இரண்டு

விதமாகப் பார்க்கப்படுகிறது. முதல்முறையாகப் பிரசவ அனுபவத்தைச் சந்திக்கிற பெண்களுக்கு ஏற்படுகிற பயம் ஒருவகை. ஏற்கெனவே கருக்கலைப்பு போன்ற எதிர்மறையான நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்படுகிற பயம் இன்னொரு வகை. 70 சதவிகிதம் பேர் இரண்டாம் வகை காரணத்தினாலேயே பீதிக்குள்ளாகின்றனர்.

அறிகுறிகள்: டோக்கோபோபியாவால் உலகம் முழுவதும் 6-7 சதவிகிதப் பெண்கள்  பாதிப்படைகின்றனர். சமூகம் என்ன சொல்லுமோ என்கிற பயத்தில் அவர்களில் பலரும் இந்தப் பாதிப்பைப்பற்றி வெளியே பேசுவதில்லை. பயத்தின் காரணமாக இவர்கள் அறுவைசிகிச்சையைத் தேர்வு செய்கின்றனர். உடல் மற்றும் உளவியல் பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். இரவில் மோசமான கனவுகள், அதிகப்படியான வியர்வை, இறக்கும் எண்ணம் போன்ற அறிகுறிகளையும் எதிர்கொள்கின்றனர்.
சிகிச்சைகள்: பிரசவம் பற்றிய போதுமான விழிப்பு உணர்வு இல்லாததே இந்த பயத்துக்கு அடிப்படை. எனவே, இந்தப் பெண்களுக்கு உளவியல் ஆலோசனையும், மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. சமூகம் இவர்களின் பயத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். குடும்ப உறுப்பினர்களும் அவர்களின் பயத்தைப் போக்க உதவ வேண்டும். கடுஞ்சொற்களால் அவர்கள் பயத்தை அதிகமாக்கிவிடக் கூடாது.

%d bloggers like this: