காலையில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்

காலையில் சாப்பிடும் உணவு தான் அந்த நாள் முழுவதும் ஆற்றல் தருகிறது. காலை உணவுகளை ஒருபோதும் தவிர்க்க கூடாது.

சரியான உணவு முறை பின்பற்றினால் மட்டுமே போதும், பல்வேறு வகையான நோய்களை வராமல் தடுக்க முடியும். காலையில்

சாப்பிடும் சில உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

பழச்சாறு சத்துக்கள் நிறைந்துள்ள பானமாக இருந்தாலும் காலையில் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். பழச்சாற்றில் சர்க்கரை பயன்படுத்துவது உடலில் சர்க்கரை அளவை ஒரேயடியாக அதிகரிக்கும். எனவே சர்க்கரை அளவை குறைத்துக் கொள்ளுங்கள். ஆரஞ்சு, எலுமிச்சை, மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ள அனைத்து பழங்களும் அசிடிட்டியை ஏற்படுத்துகிறது. அளவாக சாப்பிடுவது நல்லதுதான், இருந்தாலும் எச்சரிக்கை அவசியம்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிடுவது எப்போதும் நல்லதல்ல, காலையில் சாப்பிடுவதால் இதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. இவை புற்றுநோயை ஏற்படுத்த கூடியது என்று அமெரிக்க பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தயிர் ஆரோக்கியமான உணவு தான், ஆனால் காலையில் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும். அளவாக சாப்பிடுவது நல்லதுதான்.

காஃபி உடலை சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது. ஆனால் வெறும் வயிற்றில் காஃபி குடிப்பது சோர்வை ஏற்படுத்துகிறது.

காலையில் உணவை தவிர்ப்பது உடலுக்கு நல்லதல்ல. மதியம் 10 மடங்கு சாப்பிடுவதை விட காலையில் 1 மடங்கு சாப்பிடுவது ஒரு நாளுக்கு தேவையான 50% ஆற்றலை தருகிறது. தயவுசெய்து காலை உணவை தவிர்க்க வேண்டாம்.

%d bloggers like this: