ரிலையன்ஸ் ஜியோ குறைந்த விலையில் வழங்க புதிய சேவை அடுத்த திட்டம்

இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வரவு பல்வேறு அதிரடி மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது. விலை குறைப்பு, கூடுதல் சலுகை என டெலிகாம் சந்தையில் ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இவை அனைத்திற்கும் காரணமான ரிலையன்ஸ் ஜியோ அடுத்த அதிரடிக்கு தயாராகி விட்டது.

ஜியோ ஹோம் என்ற பெயரில் ஜியோ வழங்க இருப்பதாக கூறப்படும் புதிய சேவை அந்நிறுவனத்தின் அடுத்த பெரிய திட்டம் என்றும் கூறப்படுகிறது. இந்திய டிடிஹெச் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சேவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ ஹோம் டிவி சேவையில் எஸ்டி (ஸ்டான்டர்டு டெஃபனிஷன்) சேனல்களுக்கு மாதம் ரூ.200 மற்றும் எஸ்டி மற்றும் ஹெச்டி சேனல்களுக்கு மாதம் ரூ.400 என கட்டணம் நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த சேவை என்ஹான்ஸ்டு மல்டிமீடியா பிராட்கேஸ்ட் மல்டிகேஸ்ட் சர்வீஸ் (Enhanced Multimedia Broadcast Multicast Service) என கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்த சேவையானது விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படும் ஜியோ டிடிஹெச் சேவை கிடையாது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ரிலையன்ஸ் ஜியோ விரைவில் ஜியோ ஹோம் டிவி சேவையை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சேவை ஜியோ பிராட்கேஸ்ட் ப்ரோசெசர் அப்டேட் செய்ய பட்ட பதிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த செயலியில் தேர்வு செய்யப்பட்ட சாதனங்களில் ஹெச்டி டேட்டாக்களின் சோதனை சமீபத்தில் நடைபெற்றது. ரிலையன்ஸ் ஜியோவின் புதிய சேவை அனைத்து ஜியோ பயனர்களுக்கும் வழங்கப்படும் என்றும் இந்த சேவை ஜியோ ஹோம் டிவி என்ற பெயரில் பிரான்டிங் செய்யப்படும் என கூறப்படுகிறது.

%d bloggers like this: