அடிக்கடி தொண்டை வலிக்குதா?… சும்மா இருந்தா இது இவ்ளோ பெரிய பிரச்னைல போய் முடியும்…

தொண்டையில் ஏற்ப்படும் புண் பொதுவாக உணவை விழுங்கும்போது வலியை கொடுக்கும். இதுபோன்ற வலியை உணரும்போது நமக்கு ஏதோ பிரச்சனை உள்ளது என்று தெரிந்தாலும், அது எந்த அளவு மோசமானது? மருந்து ஏதும் இல்லாமலே அது குணமாகுமா? இல்லை மருத்துவரை அணுகி அலோசனை பெற வேண்டுமா? இது போன்ற கேள்விகள் எழும். health இந்த கட்டுரை எப்படி உங்களுக்கு தொண்டைப்புணில் இருந்து நிவாரணம் பெற முடியும், மற்றும் உங்களுக்கு தொண்டை அழற்சிக்கான அறிகுறிகள் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள உதவும். மேலும் தொண்டைப்புண் மற்றும் அழற்சி பதிப்புக்கான அறிகுறிகள், அவற்றிற்கான சிகிச்சை முறைகளை அறிய உதவும்.

தொண்டை அழற்சி (Strep Throat) என்றால் என்ன?

 

பொதுவான தொண்டைபுண் போலல்லாமல், ஸ்ட்ரீப் தொண்டை ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (Streptococcus ) பாக்டீரியா (இது தொகுதி A ஸ்ட்ரீப் என்று அழைக்கபடுகிறது) என்னும் ஒரு கிருமி, தொண்டை மற்றும் தொண்டை சுற்றிய பகுதிகளில் தொற்றுவதால் ஏற்படுகிறது. இத்தொற்று மிக வேகமாக மருந்துகளுக்கு கட்டுப்படும். முக்கியமாக நாம் அறிந்துகொள்ள வேண்டியது அது வெறும் தொண்டைப்புண் தான அல்லது அழற்சியா என்பது, ஏனெனில் இவ்விரண்டுக்கும் சிகிச்சை முறைகள் மாறுபடும்.

தொண்டைப்புண் என்றல் என்ன?

தொண்டைப்புண் என்றல் என்ன?
தொண்டை புண் வேதனைக்குரியதாக இருந்தாலும் வலியின் அளவானது அழற்சி வலியை விட குறைவாகும். இது தொண்டை அழற்சி போலல்லாமல் ஒரு வைரஸ் தொற்று ஆகும். எனவே இது நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாது எனவே மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது. கீழ்க்கண்ட அறிகுறிகள் காணப்பட்டால் தொண்டை புண்ணுக்கும் மருத்துவரை காண வேண்டியது அவசியம்
• ஒரு வாரத்திற்கு மேல் பாதிப்பு
• மீண்டும் மீண்டும் தொண்டை புண் வருவது
• இரண்டு வாரங்களுக்கு மேல் குரலில் கரகரப்பு
• உடலில் நீர்ச்சத்து குறைபாடு
• அல்லது வேறு சில வகை பாதிப்புகள் மேற்கொண்டு இக்கட்டுரை தொண்டை புண் மற்றும் ஸ்ட்ரெப் தொண்டை பதிப்பை வேறுபடுத்தி கண்டுபிடிக்க உங்களுக்கு உதவி செய்யும்.

தொண்டை அழற்சி (Strep Throat) என்ன அறிகுறிகளுடன் காணப்படும்?
 
தொண்டை அழற்சி (Strep Throat) என்ன அறிகுறிகளுடன் காணப்படும்? தொண்டை அழற்சி பொதுவாக கீழ் கண்ட சில கண்ணுக்கு புலப்படும் அறிகுறிகளுடன் காணப்படும்,
• தொண்டை மற்றும் தொண்டை பகுதிகளை சுற்றி வெள்ளை திட்டுகள்
• மேல் வாய் பகுதியில் அடர் சிவப்பு நிற திட்டுகள்
• தோல் சொறிச்சல் மேல் கூறியவாறு காணப்படும் வெள்ளை திட்டுக்களில் சீழ் காணப்படும்.
கூடுதலாக, சில நோயாளிகள் கழுத்தில் வீக்கம், மென்மையான நிணநீர் கட்டிகள் மற்றும் சில பேருக்கு 101-102 F வரை காய்ச்சல் ஆகியவை காணப்படலாம். இந்த அறிகுறிகள் குழந்தைகள் மட்டும் பெரியவர்களுக்கு பொதுவானதாகும். இவை தொண்டை அழற்சியின் அறிகுறிகள் என்றாலும் மருத்துவரை அணுகி உருதி செய்து கொள்வது நல்லது ஏனெனில் கண்ணுக்கு புலப்படும் அறிகுறிகளை மட்டும் கொண்டு இந்த பாதிப்பை உறுதி செய்ய முடியாது.
 
வயது,
 
இந்த ஸ்ட்ரீப் தொண்டை பாதிப்பு வயதானவர்களை விட குழந்தைகளுக்கு அதிகம் வரலாம். குழந்தைகளுக்கு ஸ்ட்ரீப் தொண்டை பாதிப்பு என்பது தொண்டை புண் பாதிப்பை விட 20% முதல் 30% கூடுதல் இதுக்கும் ஆனால் பெரியவர்களுக்கு இது 5% முதல் 15% வரை மட்டுமே இருக்கும். தொண்டைப்புண்கள் பெரும்பாலும் வைரஸால் ஏற்படுகின்றன, இதனால் அவற்றை குணப்படுத்துவது கடினம். இவை கீழ்க்கண்ட காரணங்களினாலும் உண்டாகலாம்,
• உலர்ந்த காற்று மட்டும் சுற்றுப்புறம்
• மோசமான சுற்றுப்புற மாசுபாடு
• (புகைபிடித்தல் உள்ளடக்கிய) புகை
• மற்றும் ஒவ்வாமை
 
காரணம்
 ஸ்ட்ரீப் தொண்டை பதிப்பு போலில்லாமல், தொண்டை புண்கள் பொதுவாக எந்த ஆண்டிபயாடிக் சிகிச்சையும் இல்லாமல் தானாகவே குணமாகும். உண்மையில், ஆண்டிபயாடிக்குகள் சளி மற்றும் காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக பயனற்றவை. வைரஸ் தொற்றே தொண்டைப்புண்ணுக்கான பொதுவான காரணமாகும். தொண்டை பாகத்தை தவிர மற்ற சில உடல் பாகங்களிலும் தொண்டை புண்ணின் அறிகுறிகளை காண முடியும் அவை,
• மூக்கில் திரவம் வடிதல்
• கண்களில் நீர் வடிதல்
• சளி
• தும்மல்
• லேசான காய்ச்சல் (1௦1 F க்கும் குறைவான அளவு) கழுத்து பகுதி மற்றும் தாடைக்கு கீழுள்ள நிணநீர் சுரப்பிகளின் வீக்கம் ஒரு பொதுவான அழற்சியின் அறிகுறியாகும் இது ஸ்ட்ரீப் தொண்டை பதிப்பின் அறிகுறி மட்டும் அல்ல. இந்த அறிகுறி காதில் அழற்சி ஏற்ப்பட்டாலும் மூக்கில் (சைனஸ்) அழற்சி ஏற்ப்பட்டாலும் வரலாம்.

காய்ச்சல்

ஸ்ட்ரீப் தொண்டை தொற்று பாதிப்பு உள்ள போது 101 F க்கும் அதிகமாக காய்ச்சல் இருக்கும். சில நேரங்களில் குறைந்த அளவு காய்ச்சல் கூட இதன் அறிகுறியாக இருக்கலாம், அதனால் குறைந்த காய்ச்சல் இருந்தால் ஸ்ட்ரீப் தொண்டை இல்லை என்று கருதக்கூடாது. ஸ்ட்ரீப் தொண்டை அழற்சி மற்றும் வாதக்காய்ச்சல் (Rheumatic Fever) ஸ்ட்ரீப் தொண்டை அழற்சி இருக்கும் போது கடுமையான மற்றும் மிக கடுமையான காய்ச்சல் வரலாம் இதனால் ஆண்டிபயாடிக் சிகிச்சை மிகவும் அவசியம். 2 வாரம் முதல் 1 மாதம் வரை சிகிச்சை எடுக்கவில்லை என்றால், ஸ்ட்ரீப் தொண்டை பாதிப்பு ருமாட்டிக் காய்ச்சலை உண்டாகலாம். ருமேடிக் காய்ச்சல் சாதாரண காய்ச்சலைக் காட்டிலும் மிக கடுமையானதாகும். இது கடுமையான மூட்டு, இதயம், தோல் மற்றும் மூளை பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது சில சமயங்களில் இதய வால்வுகளையும் சேதப்படுத்தும். ருமேடிக் காய்ச்சல் வளரும் நாடுகளில் ஒரு பிரச்சனையாக இருந்தாலும், வளர்ந்த அமெரிக்கா போன்ற நாடுகளில் மிகவும் அரிதான நோயாகும்.

வீங்கிய நிணநீர் முனைகள் உள்ளனவா?

ஸ்ட்ரீப் தொண்டை பாதிப்பு ஒரு தொற்று நோயாகும். நாம் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்தால் (முத்தமிடுதல் போன்றவற்றை தவிக்க வேண்டும்), வாயில் உள்ள எச்சில் வழியாக பரவும். இது கப், முட்கரண்டி மற்றும் கரண்டி போன்றவற்றை பகிர்ந்து கொள்வதன் மூலம் மறைமுகமாகவும் பரவலாம். பாதிக்கப்பட்டவர்கள் ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுக்கவில்லை என்றால், ஸ்ட்ரீப் தொண்டைத்தொற்று இரண்டு முதல் மூன்று வாரங்களில் மிகக்கடுமையான தொற்றாக தீவிரமடையும் மாறாக நீங்கள் மருந்து எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால், 24 மணி நேரம் கழித்து தொற்றின் தீவிரமும், பரவும் தன்மையும் குறையும். இந்த காரணத்திற்காக, நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (CDC) , நோய் பாதிப்பு உள்ளவர்களை வேலை, பள்ளி மற்றும் மழலை பள்ளிகள் ஆகியவற்றிற்கு நோய் மாறும் வரை அல்லது மருந்து சாப்பிட்டு 24 மணி நேரம் வரை செல்ல வேண்டாம் என்று பரிந்துரைக்கிறது.

எவ்வளவு காலம்
ஸ்ட்ரீப் ஆரம்பித்து உடலை பாதிக்க 2 முதல் 5 நாள் வரை எடுக்கும். • ஆண்டிபயாட்டிக் மருந்து எடுக்காமல் இருந்தால் இது சுமார் 1௦-12 நாள் வரை நீடிக்கலாம்
• மருந்து உட்கொள்ளும் நிலையில் நோயின் தாக்கம் 2-5 நாட்களுக்கு பிறகு குறையும் தொடக்க நிலையிலேயே இதை கண்டுபிடித்து மருத்துவம் மேற்கொண்டால் கடுமையான ருமாட்டிக் காய்ச்சல் போன்றவற்றை தவிர்க்கலாம். ஸ்ட்ரீப் தொண்டை தொற்று: ஸ்கார்லெட் காய்ச்சல் (Scarlet Fever) உங்கள் தொண்டைப்புண்ணுடன், தோலில் நன்றாக, மணர்த்துகள்கள் போன்ற இளஞ்சிவப்பு நிறத்தில் படை போன்று இருந்தால், அது ஸ்கார்லெட் காய்ச்சலாக இருக்கலாம், இது ஸ்ட்ரீப் தொண்டை பாதிப்பை ஏற்படுத்தும் பாக்டீரியாவின் தாக்கத்தினால் உண்டாகிறது. இது ஏற்படுமானால், உடனடியாக மருத்துவரைப் பார்க்கவும்.
 
ஸ்கார்லெட் காய்ச்சல் – அறிகுறிகள்
• அடர் சிவப்பான தொண்டைப்புண்
• கைகளுக்கு கீழ், முழங்கைகள் மற்றும் இடுப்பு இணைப்பு பகுதிகளில் தோல் நல்ல சிவப்பு நிறமாக மாறுதல்
• வெளிப்புற தொண்டை பகுதியில் வீக்கம் மற்றும் சிவந்த தோற்றம்
• குமட்டல்
• வாந்தி
• வயிற்று வலி நாள் பட்ட ஸ்கார்லெட் காய்ச்சல் கீழ் கண்ட கடுமையான உடல் பிரச்சினைகளை உண்டாக்கும்
• ருமேடிக் காய்ச்சல்
• சிறுநீரகம் சம்பந்தமான வியாதிகள்
• காதில் ஒவ்வாமை
• கீழ்வாதம்
• நிமோனியா
• மற்றும் தோல் பாதிப்புகள் ஸ்கார்லெட் காய்ச்சலை ஆண்டிபயாடிக் மருந்துகளை கொண்டு கட்டுப்படுத்தலாம். ஸ்ட்ரீப் தொண்டை ஒரு பாக்டீரியா பாதிப்பு, ஆனால் பெரும்பாலான தொண்டைப்புண் பாதிப்புகள் வைரஸால் ஏற்படுகின்றது அல்லது மற்ற பாகங்களான மூக்கு (அ) சைனஸ் பகுதிகளில் ஏற்ப்படும் தொற்றுநோய்களின் பக்க விளைவுகளாகும். இருப்பினும், ஸ்ட்ரீப் தொண்டை பாதிப்பானது பொதுவான ஸ்ட்ரெப்டோகோகஸ்-ஏ வகை பாக்டீரியா பாதிப்பால் உண்டாகிறது இதனை ஸ்ட்ரெபோகோக்கஸ் பியோஜெனெஸ் என்றும் அழைக்கலாம்.

வகைகள்

குரூப் A வகை ஸ்ட்ரெப் என்பது மனிதர்களில் மிகவும் பொதுவான பாக்டீரியாவால் உண்டாகும் நோயாகும். பாக்டீரியா அளவு சுமார் 5% முதல் 15% இருக்கும் வரை இது நோயின் அறிகுறிகளை வெளி காண்பிப்பதில்லை, மனித உண்டம்பில் பாக்டீரியா தங்கி இருக்கும் அவ்வளவுதான். குரூப் A வகை ஸ்ட்ரெப் மனிதர்களுக்கு ஸ்ட்ரீப் தொண்டை பாதிப்பு, ஸ்கார்லெட் காய்ச்சல், இம்பெட்டிகோ (impetigo) மற்றும் செல்லுலிடிஸ் (cellulitis) போன்ற தோல் வியாதிகள் என பல்வேறு வகையான உடல்நலக் குறைபாடுகளை எற்ப்படுத்தும். இவை சதைப்பகுதிகளை அரித்து கடுமையான விளைவுகளை உண்டாக்கும் நெக்ரோடைஸிங் ஃபேஸ்சிடிஸை (necrotizing fasciitis) என்ற நோயை ஏற்படுத்தும், இது பாதிக்கப்பட்டவர்களின் கால் பகுதி பேரை கொன்றுவிடும். உங்களுடைய தொற்றுநோய் ஸ்ட்ரீப் பாதிப்பால் ஏற்படுகிறது என்றால் கண்டிப்பாக தகுந்த ஆண்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரையின் பேரில் சாப்பிட்டு நோயின் தீவிரமான விளைவுகளை தடுக்கலாம். ஆண்டிபயாடிக் மருந்துகள் தொண்டை புண் நோயை தடுக்கவோ, குணமக்குவதோ கிடையாது ஏனெனில் அது ஒரு பாக்டீரியாவினால் உண்டாகும் பாதிப்பாகும் எனவே நம் பாக்டீரியா-எதிர்ப்பு மருத்துகளை உபயோகித்து பயன் பெறுவது நல்லது. ஸ்ட்ரீப் நோய் பதிப்பு மற்றும் அதன் தீவிரத்தை சரியான ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்வதன் மூலம் வியக்கத்தக்க ரீதியில் குறைக்கலாம். இருப்பினும் ஆண்டிபயாடிக் மருந்துகளை அதிகமாக உபயோகிப்பது நல்லது அல்ல. ஆண்டிபயாடிக் மருந்துகளின் அதிகப்பயன்பாடு இம்மருந்துகளுக்கு கட்டுப்படாத இதர நுண்ணுயிர்ககளை உண்டாக்கும். ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில், குறைந்தது 2 மில்லியன் மக்கள் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு பாக்டீரியா நோயால் பாதிக்கப்பட்டுகின்றனர். இது போன்ற உடல் பாதிப்புகளை தவிர்க்க எப்பொழுதும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவினால் வரும் நோய்களுக்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் உபயோகிப்பதை தவிர்க்கலாம். ஆண்டிபயாடிக்குகள் பொதுவான ஜலதோஷம் மற்றும் சளியினால் வரும் தொண்டை பாதிப்புகளை சரி செய்வதில்லை. இது ஒரு வைரஸ் பாதிப்பின் விளைவு எனவே ஆண்டிபயாடிக்குகள் மருத்துகள் பயனளிப்பதில்லை.

 

ஓரல் கல்ச்சர்
சாதரணமாக ஒரு நோயாளியின் தொண்டையைப் பார்த்து மட்டும் ஸ்ட்ரீப் தொண்டை நோயைக் கண்டறிவது சாத்தியமானது அல்ல, எனவே உங்கள் மருத்துவர் முதலில் நிச்சயம் ஒரு வேகமான ஸ்ட்ரீப் டெஸ்ட் செய்யது ஸ்ட்ரீப்க்கு காரணமாக பாக்டீரியா உள்ளதா என்பதை உறுதி செய்யவார். விரைவான ஸ்ட்ரீப் சோதனை செய்ய, மருத்துவர் தொண்டையின் உள் பாகத்தில் இருபுறமும் உள்ள கட்டிகளை (tonsils) ஒரு சிறிய மருந்து குச்சியால் நெருடி விடுவார், பெயருக்கு ஏற்றார் போல் ஸ்ட்ரீப் சோதனை 10-15 நிமிடங்களில் விரைவான முடிவுகளை கொடுக்கும். அதிவேக ஸ்ட்ரீப் சோதனையானது, ஸ்ட்ரீப் பாதிப்பு இருந்தாலும் சுமார் 5% வரை தவறான முடிவையே தரும், ஒரு மருத்துவர் ஸ்ட்ரீப் சோதனை முடிவை சந்தேகிக்கிறார் என்றால் அவர் தொண்டைப்பகுதிகளில் இருந்து சில மாதிரிகளை முன் மாதிரியே ஒரு குச்சி கொண்டு சேகரித்து சோதனைக்கு அனுப்புவார். இம்முறையில் முடிவுகள் தெரிய ஒரிரு நாட்கள் ஆகலாம். ஸ்ட்ரீப் தொண்டை பதிப்புக்கான – ஆண்டிபயாடிக் மருந்துகள் உங்களுக்கு ஸ்ட்ரீப் தொண்டை பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் ஆண்டிபயாடிக் மருந்தானது மாத்திரை (அ) ஊசி மூலம் கொடுக்கப்படும். மருந்து உட்கொள்ளும்போது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் மருத்துவர் கொடுத்த மருந்துகள் எல்லவற்றையும் தகுந்த வேளைகளில் முழுவதுமாக எடுத்துக்கொள்ள வேண்டும் இது மீண்டும் பாக்டீரியா பாதிப்பில் இருந்து தடுக்க வழிவகை செய்யும். மருந்து சாப்பிடுவதுடன் கீழ்க்கண்ட சுகாதரமான பழக்கங்களை மேற்கொள்வதன் மூலன் பிற வகையான பாதிப்புகளை தவிர்க்கலாம்,
• கைகளை அடிக்கடி சுத்தமாக கழுகவும்
• உங்களுடைய உணவு உண்ணும் பத்திரங்களை பகிர்ந்துகொள்ள கூடாது
• பாதிப்பு மாறிய உடன் உங்களுடைய பல் துலக்கியை மாற்றவும்
 
தொண்டைப்புண் மற்றும் ஸ்ட்ரீப் தொண்டை பாதிப்பு – வீட்டு வைத்தியம்:
 
சில நேரங்களில், சளியினால் ஏற்படும் தொண்டைப்புண் மற்றும் ஸ்ட்ரீப் பாதிப்புக்கு வீட்டு வைத்தியம், தொண்டை வலி மற்றும் அசௌகரியத்தை குறைக்கும் ஒரு நல்ல வழியாகும். எனினும் பாதிப்பின் அறிகுறிகள் தொடர்ந்தால் (அ) மோசமாகிவிட்டால், நீங்கள் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம் ஆகும்.
 
சில எளிய வீட்டு மருத்துவ வழி
 
• ½ தேக்கரண்டி உப்பை 1 கப் மிதமான சூடுள்ள தண்ணீரில் கலந்து ஒரு நாளைக்கு பல முறை வாயை நன்றாக கொப்பளிக்கவும். இது சளியை இலக்கி பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள திரவத்தை வெளியேற்றும்
• மருந்து கடைகளில் கிடைக்கும் சர்க்கரை மற்றும் உப்பு கலந்த மிட்டாய்களை சாப்பிடுவதன் மூலம் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்
• சில தொண்டை தெளிப்பான் மருந்துகளை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தெளிப்பதன் மூலம் அந்த இடத்தை உணர்சியிழக்க செய்வதன் மூலம் வழியில் இருந்து நிவாரணம் பெறலாம்
• வெதுவெதுப்பான தேயிலை நீர் அருந்துவது (அ) தேன் குடிப்பது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் எரிச்சலை குறைக்கும் இம்முறைகள் எல்லாம் பதிக்கப்பட்ட பகுதிகளை ஈரப்பதத்துடன் வைத்து நிவாரணத்தை கொடுக்கும்.
 
தொண்டை புண் – வீட்டு வைத்தியம்: ஈரப்பதமூட்டி (Humidifier) அல்லது

நீர் ஆவியாக்கி (Vaporizer):

தொண்டைப்புண் பாதிப்பால் வரும் தொண்டை வலி மற்றும் எரிச்சல் ஆகியவற்றிற்கு முக்கிய காரணம் உலர்ந்த தொண்டை. எனவே நீங்கள் இருக்கும் அறையில் ஈரப்பதத்தை அதிகரிக்க ஒரு ஈரப்பதமூட்டி (Humidifier) அல்லது நீர் ஆவியாக்கி (Vaporizer), இது போன்ற ஏத்துவது ஒன்றை அமைத்தால் அறையின் ஈரப்பதம் அதிகரித்து பாதிப்பு குறையும். உங்களிடம் ஈரப்பதமூட்டி (Humidifier) அல்லது நீர் ஆவியாக்கி (Vaporizer) இல்லை என்றால், மாற்றாக தண்ணீரை கொதிக்க வைத்து முகத்தின் மீது ஆவி பிடிக்கலாம், அவ்வாறு ஆவி பிடிக்கும்போது தலையை ஒரு துண்டு போட்டு மூடி, ஆழமாக மூச்சை இழுத்து விடுங்கள். இது உங்களை வலியை குறைத்து நல்ல நிலையில் உணர வைக்கும். தொண்டை புண் – வீட்டு வைத்தியம்: சூடான ஓத்தடம் வலி நிவாரணமளிக்கும் சிறந்த வழிமுறைகளில் ஒன்று சூடாக தொண்டைப்பகுதியில் ஓத்தடம் கொடுப்பது. இவ்வாறு தொண்டைப்பகுதியை சூடாக வைத்திருப்பது நிணநீர் சுரப்பிகள் உள்ள பகுதிகளை இலக்கி வலி நிவாரணம் பெற உதவும். இதற்க்கு உங்கள் கழுத்தில் ஒரு சூடான அழுத்தத்தை உண்டாக்கலாம். இதை செய்யும் முறை கிழே,

• ஒரு துண்டை சூடான நீரில் நனைக்கவும்

• பின்னர் அத்துண்டை சூடான ஒரு தட்டில்

• (அ) சூடான தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தின் மேலே சிறிது நேரம் வைக்கவும் பின்னர் தொண்டைபகுதியில் இத்துணி கொண்டு சூடான அழுத்தத்தை உண்டாக்கலாம்.

குளிச்சியான உணவுகள்
உங்கள் தொண்டையை சூடாக வைத்துக்கொள்வது தொண்டைத் தசைகளை ஓய்வு நிலையில் வைக்கலாம் அதே சமயம் குளிர்ந்த உணவுகள் தொண்டைப்பகுதியில் உணர்ச்சியற்ற தன்மையை உண்டாக்கி வலியை குறைக்கும். எனவே தொண்டைப்புண் உள்ளபோது ஆச்சரியமாக, நல்ல தேர்வு செய்த குளிர்ந்த உணவுகளை உண்ணலாம். உதாரணமாக • ஐஸ் கிரீம் • மில்க் ஷேக் • ஜெலடின் • புட்டிங் • மிகக்குளிர (அ) உறைய வைத்த (frozen) பழங்கள் – வாழைப்பழங்கள் ப்ளூ பெரி • பனி சில்லுகள் போன்றவை வலியை கட்டுப்படுத்துகிறது அதே நேரம் இந்த வகை உணவுகளை நாம் மிக எளிதாக வலி இல்லாமல் உட்கொள்ள முடியும்.
 
நீரேற்றம் (Hyderation)
 
நாம் நல்ல நீரகாரங்களை உட்கொள்ளும்போது உடலில் நீர்ச்சத்து அதிகரித்து உடலுக்கு வலுவை கொடுக்கும் இதன் மூலம் உடலானது பாதிப்பிற்கு எதிராக போராடும் சக்தியை பெறுகிறது. இதற்க்கான சில குறிப்புகள் • நிறைய தண்ணீர் குடித்தல் • உறிஞ்சும் குழல் (straw ) கொண்டு தண்ணீர் (அ) மற்ற பானங்களை அருந்தும்போது அது தொண்டை நடுவில் இறங்குவதற்கு எளிதாகும் • எலுமிச்சை சாரு அல்லது மதுபானங்களை தவிர்க்கவும். எலுமிச்சை பழச்சாறு மெல்லிய தொண்டை புண் மேல் படும்போது வலியை அதிகப்படுத்தும். அதேபோல மதுபானங்கள் உண்மையில் உடலை உலர வைத்து (நீர்த்தன்மையை குறைத்து) உடலுக்கு மேலும் தீங்கு செய்யும்.
 
வலி நிவாரணிகள்
 
தொண்டை வலியில் இருந்து நிவாரணம் பெற நாம் மருந்துக்கடைகளில் கிடைக்கும் வலி நிவாரணிகளை பயன்படுத்தப்படலாம். இவற்றில் சில • ஐபூப்ருபன் – ibuprofen (அட்வில்-(Advil), மோட்ரின் (Motrin)) • அசெட்டமினோபென் – (acetaminophen) (டைலெனோல் – Tylenol) அல்லது • நாப்ரோக்ஸ்சின்- naproxen (அலீவ்- Aleve) ஆகியவை ஆகும். குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு ஆஸ்பிரின் போன்ற வலி நிவாரணிகளை கொடுக்ககூடாது இது மிக மோசமான உயிர் கொல்லும் ரெயீஸ் (Reye’s) நோயை உண்டாக்கலாம் இனிப்பு மிட்டாய்கள் (Lozenges): இனிப்பு மிட்டாய்கள் (Lozenges): மருந்துக்கடைகளில் கிடைக்கும் தெளிப்பான்கள் (Sprays) மற்றும் இனிப்பு மிட்டாய்கள் தொண்டைபுண் வலியில் இருந்து நிவாரணம் பெற உதவும். சில சமயம் சர்க்கரை (அ) சர்க்கரை இல்லாத சாக்லேட் (அ) மிட்டாய்கள் (அ) சர்க்கரை கலந்த மிட்டாயுடன் சில தெளிப்பான்கள் (அ) கீழ் கண்ட நிவாரணம் கொடுக்கும் பொருள் கலந்த சர்க்கரை கலந்த மிட்டாய் மற்றும் தெளிப்பான்கள் இவற்றை உபயோகிப்பதால் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
• மயக்கமருந்து (anaesthetics) – இது வலியை குறைக்கும்
• குளிவிப்பான்கள் (cooling agents)- இது தொண்டையை உணர்சியிழக்க செய்யும்
• அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (anti-inflammatory agents) – இது திசு வீக்கத்தை குறைக்கும்
• கிருமி நாசினிகள் (antiseptic agents) –
 
இது கெட்ட கிருமிகளின் வளர்ச்சியை தடுக்கும் தொண்டைப்புண் – நெகிழ்வாக்கிகள் (Decongestants)
தொண்டைப்புண் – நெகிழ்வாக்கிகள் (Decongestants) சில நேரங்களில் மூக்கு சொட்டு மருந்து தொண்டை எரிச்சலை உண்டாக்கலாம். அவ்வாறிருந்தால் நெகிழ்வாக்கி (Decongestants) தெளிப்பான்களையோ அல்லது மாத்திரைகளையோ, எரிச்சல் மற்றும் தொண்டை வலி பாதிப்புக்கு பயன்படுத்தலாம். சில பொதுவான நெகிழ்வாக்கி (Decongestants) ஸ்ப்ரேக்கள் மற்றும் மாத்திரைகளை கீழே காணலாம் • ஆபிரின் (Afrin) • கனடாக் (Contac) • முகைநெக்ஸ் (Mucinex) • சுடபெட் (Sudafed) (அ) சுபர்டரின் (suphedrine) • சைகாம் (Zicam) இவற்றை தேவையான அளவு மற்றும் தகுந்த முறையில் உபயோகிக்க வேண்டும், நீங்கள் வேறு எதாவது மருந்து எடுத்துகொள்பவராக இருந்தால் மருத்துவரை அணுகி அறிவுரை கேட்டுக்கொள்ள வேண்டும். தொடர்ச்சியான தொண்டைப்புண் பாதிப்பு தொடர்ச்சியான தொண்டைப்புண் பாதிப்பு ஆரம்ப மருத்துவ சிகிச்சைக்கு பதிலளிக்காத தொண்டை புண் வேறு நோய்களுக்கு அறிகுறிய இருக்கலாம், எடுத்துக்காட்டாக • மோனோநியூக்ளியோசஸ் – mononucleosis (ஒரு பாலியல் பரவும் நோய்) • தொண்டைக்கட்டிகள் – tumors • மூளைக்காய்ச்சல் – meningitis • அமில எதிர்ப்புத்தன்மை நீங்கள் ஸ்ட்ரெப் தொண்டைக்கு பாதிப்புக்கு மருந்து எடுத்துக்கொண்டும் மூன்று (அ) நான்கு நாட்களுக்குள் முன்னேற்றமோ (அ) குணமடையவில்லை என்றாலோ மருத்துவரை அணுகுவது சாலச்சிறந்தது.

%d bloggers like this: