Advertisements

தங்க நகைகளை பராமரிப்பது எப்படி…?

தங்கம் என்ற வார்த்தை 24கேரட் கட்டிப்பொன் என்பதையே குறிக்கும். இதை நகைகளாக, ஆபரணங்களாக மாற்றும் போது அதிகப்பட்சமாக 22 கேரட்தான் இருக்க முடியும். கட்டிப்பொன்னில் ஆபரணம் செய்ய முடியாது. கேரட் குறிப்பிடும் போது அதனுடன் சேர்த்த மற்ற உலோகங்களைத் தவிர்த்து குறிக்கப்படுகிறது. உதாரணமாக 22கேரட் எனக் குறிப்பிடும் போது, 2 கேரட் மற்ற உலோகங்கள்

சேர்ந்திருக்கின்றன என்று பொருள். 10கேரட் எனக் குறித்தால் மற்ற உலோகங்கள் 14கேரட் இருப்பதாகப் பொருள்.
22கேரட் என்பது 100சதவீத தரமானது. இதில் தங்கத்தின் அளவு 91.66 சதவீதமும் மீதம் மற்ற உலோகங்களும் அடங்கியிருக்கும். இந்த தங்கத்தில்மட்டுமே ஆபரணங்கள் செய்ய முடியும். 24கேரட் தங்கம் மென்மையானதும், வளையும் தன்மையும் கொண்டிருக்கும். உடன் சேர்க்கும் உலோகங்களால் தங்கம் வலுப்பெற்றுத்திகழும்.
தங்க நகை வாங்கும் போது விற்பவரின் முத்திரைகள் தங்க நகைகளில் இருக்கிறதா என்று சோதனை செய்ய வேண்டும். கல்பதித்த நகைகள் வாங்கும் போது கற்களின் எடையை ரசீதில் தெளிவாக குறிப்பிடச் சொல்ல வேண்டும். நம்பிக்கையான கடைகளிலேயே இவற்றை வாங்குவது நல்லது. ஹால்மார்க் முத்தியை பெற்றுள்ள தங்கநகைகளையே வாங்குவது இன்னும் சிறப்பு.
நகை வாங்கியாயிற்று… அவற்றை பராமரிப்பது எப்படி…!
பொருட்களின் ஆயுட்காலம் அதன் பராமரிப்பைப் பொறுத்தேஅமைகிறது. சிறந்த முறையில் பராமரிக்கப்படும் தங்க நகைகள் பல ஆண்டுகள் மெருகு அழியாமல் இருக்கும். நகைகளை தனித்தனியே துணிப்பைகளில் வைக்கும் போது நகைகள் ஒன்றோடொன்று உரசாமல் பாதுகாக்கப்படும். தங்க வெள்ளிப்பொருட்கள் மரப்பெட்டிகளில் வைக்கலாம். இரும்பு பீரோ அல்லது பெட்டியில் வைக்கும் போது ஆக்சிடேஷன் என்ற ரசாயன மாற்றத்தால் கறுத்துப் போவதற்கான வாய்ப்பு உள்ளது.
தங்கநகைகள் வியர்வைபட்டு உப்பு ஏறி அழுக்காகி விடுகிறது. இந்த உப்பையும், அழுக்கையும் போக்க ஊற வைத்த பூந்திக்கொட்டை நீரில் சுத்தம் செய்தால் பளிச்சென்று மாறிவிடும். வெளியில் கொடுத்து பாலிஷ் செய்யும் போது நம்பகமான கடைகளையே தேர்ந்தெடுப்பது அவசியம்.

Advertisements
%d bloggers like this: