Daily Archives: மே 5th, 2018

ஸ்டாலின் புது வியூகம்… மூன்றாவது அணியா?

செம வெயிட்டு’’ எனக் ‘காலா’ பாடலை உற்சாகமாகப் பாடிக்கொண்டு உள்ளே நுழைந்தார் கழுகார். ‘‘வெயிட்டான தகவல்களுடன் வந்திருக்கிறீர் போல… அந்தத் தகவல்களைக் கொட்டும்’’ என்றோம்.
‘‘முதலில் டெல்லியிலிருந்து ஆரம்பிக்கிறேன். மே 1-ம் தேதி டெல்லி சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைத் திடீரென சந்தித்தார். கொஞ்ச நாள்களாக தேசியச் செய்திகளில் முக்கிய இடம் பிடித்துள்ள மூன்றாவது அணி குறித்த குழப்பங்களை இந்தச் சந்திப்பு மேலும் அதிகமாக்கிவிட்டது.’’

Continue reading →

தசை வலிக்கு தனி சிகிச்சை

நம்மைச் செயல்படவிடாமல், முழுவதுமாக ஓர் இடத்தில் முடங்க செய்வது வலி. இந்த வலிக்கான முக்கிய காரணம் என்ன என்பது, நிறைய பேருக்கு இன்னும் தெரியாமல் உள்ளது. எனவே, உடலில் எங்கேயாவது வலி ஏற்பட்டால் தைலம் தேய்ப்பதையோ அல்லது உடனே எலும்பு மருத்துவரிடம் செல்வதையோ வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Continue reading →

கடவுளின் உணவு பெருங்காயம்!

நாற்றமடிக்கும் பிசின்’ என்று விலக்கி வைக்கப்பட்ட பெருங்காயம், பிற்காலத்தில் `கடவுளின் உணவு’ (Food of the god’s) என அழைக்கப்பட்டது இயற்கை நிகழ்த்திய விந்தை. தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் ‘பிசின்’ வகையைச் சார்ந்த `பெருங்காயம்’, நோய் போக்கும் அதன் குணத்தின் மூலம் உலகை வசீகரித்தது. 

Continue reading →

குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துமா ‘வெட் வைப்’கள்?!

மெரிக்காவின் சிகாகோவில் இருக்கும் ஃபெயின்பெர்க் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜோன் குக் மில்ஸ் தலைமையிலான குழு ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டது. பிறந்த குழந்தைகள் தாய்ப்பாலைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை. இருந்தும் அந்தக் குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை மற்றும் சரும ஒவ்வாமை ஏற்படுவதற்கான காரணத்தை அறிவதுதான் ஆராய்ச்சியின் நோக்கம்.

Continue reading →

கோடை காலம் நலமாகட்டும்!

தட்ப வெப்பநிலைக்கும் நமது உடல்நிலைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதனால் சூழ்நிலைக்கு ஏற்ப நம்முடைய வாழ்வியல் முறையையும், உணவுப் பழக்கத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டும். முக்கியமாக, முதுமை அடைந்தவர்கள் காலச்சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்’’ என்கிறார்

Continue reading →

கலகலத்த சசிகலா குடும்ப அரசியல்–நக்கீரன் 4.5.2018

கலகலத்த சசிகலா குடும்ப  அரசியல்–நக்கீரன் 4.5.2018

Continue reading →

தமிழ்நாட்டு மாணவர்களை ஏன் வேறு மாநிலத்துக்கு மாற்றினோம்? சிபிஎஸ்இ பதில்

தமிழ்நாட்டைத் தவிர, அனைத்து மாநிலங்களிலும் நீட் (NEET) தேர்வு எழுதுபவர்களுக்கு அந்தந்த மாநிலத்திலேயே தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ. 

இந்தத் தகவலை நேற்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ள சி.பி.எஸ்.இ நிர்வாகம், தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டில் 82,272 பேர் நீட் தேர்வை எழுதி உள்ளனர். இந்த ஆண்டு 10 சதவிகிதம் மட்டுமே அதாவது, 90,000 மாணவர்கள் மட்டும் நீட் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தோம். இதற்காக 170 தேர்வு மையங்களை ஏற்படுத்தி இருந்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகளவில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டை விட 25,206 பேருக்குக் கூடுதலாக தமிழ்நாட்டில் தேர்வு மையத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். இது கடந்த ஆண்டை விட 31 சதவிகிதம் அதிகம். 

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் 09.04.2018. ஆனால், உச்சநீதிமன்றம் ஆதார் இல்லாத மாணவர்களும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று நான்கு நாட்களை நீட்டித்தது. இதனால் எங்களுக்கு முன்னேற்பாடுகள் செய்ய போதுமான கால அவகாசம் குறைந்தது. இதனால் தமிழ்நாட்டில் கூடுதல் மையங்களை ஏற்படுத்த முடியவில்லை. நீண்ட தூரத்தில் உள்ள ராஜஸ்தானில் நாங்களாகத் தேர்வு மையத்தை ஒதுக்கவில்லை. மாணவர்களின் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்திருந்தால் மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்க முடியும். நாங்களாக எந்த மையத்தையும் ஒதுக்கீடு செய்யவில்லை. கணினி வழியாகவே எல்லா மையங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டில் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே 8 முதல் 10 சதவிகித கூடுதல் இடங்களுடன் இந்த ஆண்டுக்கான தேர்வு மையங்களை அமைக்க முடிவு செய்தோம். இதில் தேர்வு மையத்தின் உள்கட்டமைப்பு, போதுமான தேர்வு அறைகள், தேர்வு பணிக்கான ஆசிரியர்கள், சுற்றுச்சுவர் உள்ள பள்ளியின் அமைப்பு, போதுமான இருக்கைகள் என எல்லாவற்றையும் கணக்கீட்டுத்தான் மையத்தை ஏற்படுத்தி உள்ளோம். இதற்காக வரிசை எண், தேர்வுத்தாள் என அனைத்தையும் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்துக்கு அனுப்பி விட்டோம். 

இந்த ஆண்டு கால்நடை அறிவியல், மீன்வளம், சித்தா, ஹோமியோபதி எனப் பிற படிப்புகளுக்கும் நீட் கட்டாயம் என மாற்றி இருப்பதால் நிறைய மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தேர்வு மையங்களும் நிறைந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களை அருகில் உள்ள தேர்வு மையமாக எர்ணாகுளத்துக்கு மாற்றி உள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளது சி.பி.எஸ் இ. நீதிமன்றத்துக்குத் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களில் சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் நகரங்களில் மையங்களை அமைத்துள்ளோம். இதில் சென்னையில் 49 மையங்களில் 33,842 மாணவர்கள், கோவையில் 32 மையங்களில் 15,960 மாணவர்கள், மதுரையில் 20 மையங்களில் 11,800 பேர், நாமக்கல்லில் 07 மையங்களில் 5,560 பேர், சேலத்தில் 26 மையங்களில் 17,461 பேர், திருச்சியில் 12 மையங்களில் 9,420 பேர், திருநெல்வேலியில் 10 மையத்தில் 4,383 பேர், வேலூரில் 14 மையத்தில் 9,054 பேர் என மொத்தமாக 170 மையங்களில் 1,07,480 பேர் தமிழ்நாட்டில் தேர்வு எழுத உள்ளனர் என்று சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ளது. 

ராங் கால்–நக்கீரன் 4.5.2018

ராங் கால்–நக்கீரன் 4.5.2018

Continue reading →