Advertisements

Daily Archives: மே 6th, 2018

ரஜினியை சந்திக்கும் திவாகரன்?! – தினகரனுக்கு செக் வைக்க அதிரடி திட்டம்

நடிகர் ரஜினிகாந்தை சந்திப்பதற்கு அனுமதி கேட்டுள்ளனர் திவாகரன் தரப்பினர். ‘ இந்த சந்திப்பின் மூலம், தினகரனுக்கு செக் வைப்பதுதான் திவாகரனின் பிரதான நோக்கம். ‘டெல்டா மாவட்டங்களில் உள்ள செல்வாக்கை நிலைநிறுத்த ரஜினியுடனான சந்திப்பு அவசியம்’ என நினைக்கிறார் திவாகரன்’ என்கின்றனர் மன்னார்குடி வட்டாரத்தில். டி.டி.வி. தினகரனுடனான மோதலுக்குப் பிறகு அம்மா அணியாகச் செயல்பட்டு வருகிறார் திவாகரன். தொண்டர்களை சந்திப்பது, கட்சியின் அடுத்தகட்ட இலக்கு என பரபரப்பான அரசியல்வாதியாக வலம் வருகிறார்.

இணக்கத்திற்கு விருப்பம்

Continue reading →

Advertisements

ரஜினி கட்சி பெயர் அறிவிப்பு எப்போது?

அமெரிக்காவில் இருந்து, நேற்று இரவு, சென்னை திரும்பிய ரஜினி, அரசியல் பணிகளில் தீவிரம் காட்ட உள்ளார்.

மருத்துவ பரிசோதனைக்காக, ஏப்., 23ல், அமெரிக்கா சென்ற ரஜினி, அங்குள்ள மன்ற நிர்வாகிகள் கூட்டத்திலும் பங்கேற்றார். மேலும், அரசியல், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டவர்களுடன், கட்சி துவக்கம் குறித்தும் ஆலோசனை நடத்தினார். அமெரிக்காவில் இருந்து, நேற்று இரவு, துபாய் வழியாக, சென்னை திரும்பிய ரஜினி, புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

Continue reading →

அதிக சூடும் ஆபத்தில்லை!

நல்ல கொழுப்பு, ஹார்மோன்கள் சீராக சுரக்க உதவும். தேங்காய் எண்ணெய், நெய் இரண்டிலும் நல்ல கொழுப்பு உள்ளது. பல நுாற்றாண்டுகளாக இவை பயன்பாட்டில் இருந்தாலும், மிக குறைவாகவே இவற்றை நாம் உபயோகிக்கிறோம். இவற்றில் உள்ள கொழுப்பு அமிலம், எளிதில் செரிமானம் ஆகக் கூடியது; அதிகமான சூட்டில் சமைத்தாலும், எந்த பிரச்னையும் தராது.

Continue reading →

கசக்கிற வாழ்வே இனிக்கும் – ஏழே நாள்களில் எல்லாம் மாறும்

முன்பெல்லாம் சர்க்கரை நோயாளிகள்தான் ‘சர்க்கரையில்லா’ வாழ்க்கையை மேற்கொள்வார்கள். இன்றைக்கு `டயட்’ என்ற பெயரில் சாதாரணர்களும் சர்க்கரையை ஒதுக்கத் தொடங்கிவிட்டார்கள். இதற்குக் காரணம், `வெள்ளை உணவுகளைப்  பயன்படுத்தாதீர்கள்…’ என்ற பிரசாரம்தான். அப்படியானால், சர்க்கரையால் உடலுக்கு பயனே இல்லையா? இதுபற்றி விரிவாகப் பேசுகிறார் ஊட்டச்சத்து நிபுணர்

Continue reading →

ஜூஸ் எடுங்கள் கோடையைக் கொண்டாடுங்கள்

ழங்களைவிட ஜூஸ் சாப்பிடுவதையே குழந்தைகள் விரும்புவார்கள். ஏன், பெரியவர்களும் அப்படித்தான். ஆனால், ஜூஸாக அருந்துவது நல்லதா? பழமாகச் சாப்பிடுவது நல்லதா? என்பது தொடர்ந்து விவாதத்துக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது. பொதுவாக, பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நம் மரபு. காலப்போக்கில்

Continue reading →