Advertisements

ரஜினி கட்சி பெயர் அறிவிப்பு எப்போது?

அமெரிக்காவில் இருந்து, நேற்று இரவு, சென்னை திரும்பிய ரஜினி, அரசியல் பணிகளில் தீவிரம் காட்ட உள்ளார்.

மருத்துவ பரிசோதனைக்காக, ஏப்., 23ல், அமெரிக்கா சென்ற ரஜினி, அங்குள்ள மன்ற நிர்வாகிகள் கூட்டத்திலும் பங்கேற்றார். மேலும், அரசியல், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டவர்களுடன், கட்சி துவக்கம் குறித்தும் ஆலோசனை நடத்தினார். அமெரிக்காவில் இருந்து, நேற்று இரவு, துபாய் வழியாக, சென்னை திரும்பிய ரஜினி, புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

அதற்கு முன், தன் கட்சி பெயரை அறிவித்து விடுவது என, முடிவெடுத்துள்ளார். ஏற்கனவே, பெயர்கள் தயார் செய்யப்பட்டு உள்ளன. அதில் ஒன்றை, இமயமலை சென்றிருந்த நேரத்தில், தன் ஆன்மிக குரு வாயிலாக தேர்வு செய்துள்ளார். அந்த பெயரை, இம்மாதத்திற்குள் அறிவிக்க உள்ளார்.
இதற்கிடையே, வரும், 9ல், ரஜினி நடித்த காலா பட இசை வெளியீட்டு விழா, சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடக்கிறது. அவரது ரசிகர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே, பொது வெளியில், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரஜினி, ரசிகர்கள் மத்தியில், அரசியல் அறிவிப்புகளை வெளியிடுவார் என, நம்பப்படுகிறது. அதைத் தொடர்ந்து, 25ல், மக்கள் மன்ற நிர்வாகிகள் அனைவரையும், ரஜினி சந்திக்கிறார். அவர்களுடன் கட்சி பணிகள் குறித்து, ஆலோசிக்க உள்ளார்.ரஜினியின் கட்சி கொள்கை, புத்தக வடிவில் வெளியிடப்பட உள்ளது. கோவையில் மாநாடு நடத்தி, கட்சி பெயர், கொள்கையை அறிவிக்கவும், அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், புதுச்சேரி மாநில ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. ராஜசேகரன், முகமது ரபீக், கோபி உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்டோர், நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisements
%d bloggers like this: