தசை வலிக்கு தனி சிகிச்சை
நம்மைச் செயல்படவிடாமல், முழுவதுமாக ஓர் இடத்தில் முடங்க செய்வது வலி. இந்த வலிக்கான முக்கிய காரணம் என்ன என்பது, நிறைய பேருக்கு இன்னும் தெரியாமல் உள்ளது. எனவே, உடலில் எங்கேயாவது வலி ஏற்பட்டால் தைலம் தேய்ப்பதையோ அல்லது உடனே எலும்பு மருத்துவரிடம் செல்வதையோ வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தாய் – சேய் இணைக்கும் சர்க்கரை!
கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு கோளாறுக்கு, முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், குழந்தைக்கு, ‘டைப் 2’ நீரிழிவு கோளாறு வரும் வாய்ப்புகள் அதிகம்.
குழந்தைகள் அறை களேபரம் தவிர்ப்பது எப்படி?
குழந்தைகள் உள்ள வீடு கலகலப்பாக இருப்பதைப் போல களேபரமாகவும் இருக்கும். காலையில் நேர்த்தியாக அடுக்கப்பட்ட பொருள்கள் எல்லாம் அடுத்த அரை மணி நேரத்தில் வீடெங்கும் இறைந்துகிடக்கும். மடித்துவைத்த துணிகள் கலைந்து சிதறும். பென்சில் கிறுக்கல்கள் சுவர்களை நிறைக்கும். வீட்டைச் சுத்தப்படுத்தியே ஓய்ந்து போவார் அம்மா.
சத்தம் இல்லாத உலகம் வேண்டும்!
ங்ஙோஙாஜூ…” “கா..க்..ட்ட்…டாடா…” என்பன போன்ற சத்தங்களோடு அந்தச் சிறுமி சைகையில் ஏதோ சொன்னாள்.
“அவளுக்குப் படிச்சு பெரிய டாக்டரா வரணுமாம். அதான் அவளுடைய ஆசைன்னு சொல்றா…” என்று அந்த மொழியை நமக்கு விளக்கினார் அங்கிருந்த ஆசிரியை. அது, கோவை மாவட்டத்தில் இருக்கும் வாய் பேச முடியாதோர் மற்றும் காது கேளாதோர் பள்ளி .
“வாய் பேச முடியாததைக் கூட ஒருவகையில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், காது கேட்க முடியாது என்றால் அது ரொம்பவே கஷ்டமான விஷயமல்லவா? காற்றின் சத்தத்தை, நல்ல இசையைக்கூடக் கேட்க முடியாது. எந்நேரமும் ஒருவித நிசப்தத்திலேயே அவர்கள் இருக்க வேண்டுமல்லவா?” என்று பரிதாபப்பட்டுச் சொன்னேன்.
சொத்துக் காப்பீடு… லாப நஷ்டக் கணக்கு!
ஒரு லட்சம் ரூபாயை முதலீடு செய்ய மூன்று வாய்ப்புகள். முதலாவதில் ரூ.9,000 லாபம் நிச்சயம். இரண்டாவதில், ரூ.10,000 லாபமடைய 90% வாய்ப்பு; லாபமில்லாமல் போக 10% வாய்ப்பு – இப்படிப்பட்ட நிலையில் பெரும்பாலானோர் முதலாவது வழியையே தேர்ந்தெடுக்கிறார்கள்.