என்னை தொல்லை பண்ணாதீங்க” கர்ஜித்து கதறவிட்ட சின்னமம்மி! யாரையும் பார்க்காமல் எஸ்கேப் ஆன தினா!

எப்போதுமே சின்னமம்மியை பார்த்துவிட்டு உற்சாகமாக வெளியே வந்து ஒரு குட்டி பிரஸ்மீட் போட்டுவிட்டு செல்லும் தினா, இந்த முறை யாரிடமும் பேசாமல் வண்டியில் ஏறி எஸ்கேப்

ஆகிவிட்டார்.அக்ரஹாராவில் ஹாயாக இருக்கும் சின்ன மம்மியை மீட் பண்ண குட்டிக் கரணம் அடிக்காத குறையாக தொடர்ந்து மாமனும் மருமகனும் நேரம் கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில், அக்காள் மகன் தினா மற்றும் அவரது தரப்பிலிருந்து வெற்றி, தங்கம், பெங்களுரு புகழ், பழனி, பாலாஜி, டாக்டர் வெங்கட் தினகரன் என 7 பேரும் சசிகலாவை சந்திக்க விருப்பம் தெரிவித்து கடந்த வாரம் அக்ரஹாரா சிறைக்குக் கடிதம்கொடுத்தார்களாம்.

இன்னொரு பக்கம், ஆசைத்தம்பி, தம்பிமகன் ஜெய், இளந்தமிழன், கோவிந்தராஜ் என நான்கு பேரும் சசிகலாவை சந்திக்க விருப்பம் தெரிவித்து அக்ரஹாராவுக்கு அப்ளிகேஷன் போட்டார்கள். இந்நிலையில் நேற்று குடும்ப உறுப்பினர்களை மட்டும்சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தார் சின்னமம்மி.

இதனயடுத்தி இரண்டு கேங் உள்ளே நுழைந்தது, அப்போது சின்னமம்மியை பார்த்த அவர்கள் சிரித்துள்ளனர், ஆனால் சின்னமம்மியோ டெரராக முகத்தை வைத்துக் கொண்டு ‘நான் எதெல்லாம் நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அதெல்லாம் நடந்துடுச்சு. அக்கா இல்லாமல் போனதும் இந்தக் கட்சி சிதைந்து சின்னாபின்னமாக உடைய நம் குடும்பமே காரணமாகிடுச்சு என்பதை நினைக்கும்போதுதான் எனக்குவருத்தமாக இருக்கு என கர்ஜித்துள்ளார். இதனையடுத்து அக்காள் மகனை பார்த்த சின்னமம்மி நீ ஆரம்பத்துல இருந்தே நான் சொன்னதை கேட்கலை. கேட்டிருந்தா இந்த பிரிவு வந்திருக்காது’ ஒரு குட்டு வைத்தாராம்.

டென்ஷனில் தாம்தூம் என குதித்த அண்ணியை நடராஜனின் சகோ பழனிவேல்தான் கூல் செய்திருக்கிறார். ‘இவ்வளவு நாளா குடும்பம் ஆதிக்கம் செலுத்துறோம்… நம்ம குடும்பத்த மன்னார்குடி மாஃபியா என்றெல்லாம் வாய்கிழிய வருத் தெடுக்குறாங்க. நம்ம குடும்பத்துல ஒருத்தரையேகட்சியில் சேர்க்கலை. பொறுப்பும் கொடுக்கலை. அதனால் அவரு விலகி போயிருக்காரு. ஆனால் இது நமக்கு தான் நல்ல விஷயம்’ என பேச்சை வேற ரூட்டுக்கு கொன்று சென்றிருக்கிறார் மச்சினன்.

‘நீங்க என்னதான் காரணம் சொன்னாலும் இப்போ தினா ஆரம்பிச்ச கட்சி உடைஞ்சிடுச்சுன்னுதானே பேசுவாங்க… இதெல்லாம் துரோகிகளுக்கு  கொண்டாட்டமாக இருக்கும். அதன் டீமில் இருந்தும் என்னை பார்க்க பார்க்க நேரம் கேட்டுட்டு இருக்காங்க. அவரையும்நான் பார்த்துதான் ஆகணும். யாரைப் பார்த்தாலும் என்ன செஞ்சாலும் நான் எதுவும் இப்போ வாய் திறக்கப் போறது இல்லை. நீங்களே பேசி முடிவுக்கு வாங்க… என்னை தொல்லை பண்ணாதீங்க…’ என்று ருத்ரதாண்டவம் ஆடினாராம் சின்னமம்மி.

சுமார் மணிநேரத்துக்கு மேல போன இந்த அக்ரஹாரா அலும்பல்கள், கடைசியாக குட்டி குட்டி அட்வைஸ் குடுத்து அனுப்பினாராம் சின்னமம்மி. ஆனால் என்ன பேசியும் சின்னமம்மி சமாதானம் ஆகவே இல்லையாம். எதுவாருந்தாலும் ‘நான் யோசிச்சிட்டு சொல்றேன்…’ என சொல்லி எல்லோரையும் திருப்பி அனுப்பிவிட்டாராம். எப்போதுமே அக்ரஹாராவில் சித்தியை பார்த்துவிட்டு மலர்ந்த புன்னகையோடு  உற்சாகமாக வெளியே வந்து பேசும் அக்காள் மகன் தினா, இந்த வாட்டி  யாரிடமும் பேசாமல் வண்டியில் ஏறிப் எஸ்கேப் ஆகிவிட்டார்
asianetnews.com

%d bloggers like this: