நாவல் பழம் சீசன் ஆரம்பிச்சிடுச்சு… யார் சாப்பிடலாம்?… யார் சாப்பிடக்கூடாது?…

நம்மில் பலருக்கு நாவல் பழத்தின் நம்மை பற்றி தெரிந்திருக்காது. அது பார்க்க சிறியதாக இருந்தாலும் பெரும் நன்மையை கொண்டது. இது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் போன்ற மாதங்களில் கிடைக்கும்.

இது மிரட்டாசிஏ குடும்பத்தை சேர்ந்தது. நாவல் பழம் ஊதா நிறத்தை கொண்டது. மேலும் இது கசப்பு மற்றும் இனிப்பு கலந்து ஒரு தனி சுவையை தரும். நாவல்பழத்தின் சில அற்புதமான நன்மைகள் இதோ உங்களுக்காக!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீரிழிவு

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நாவல்பழம் பெரும் பயனை அளிக்கிறது. இதிலுள்ள குறைந்த அளவிலான கிளைசெமிக் குறியீட்டால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதிலும் நாவல்பழக் கொட்டையை வெயிலில் காயவைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு, தண்ணீர் மற்றும் பாலில் கலந்து குடித்து வரலாம்.

இரும்புச்சத்து

இதில் இரும்புச் சத்து நிறைந்திருக்கிறது. நாவல் பழம் இயற்கையாகவே இரத்தத்தை சுத்திகரிக்கப் பயன்படுகிறது. மேலும் இரத்த ஓட்டத்தையும் நிலையாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

வைட்டமின்

இதில் வைட்டமின் A மற்றும் வைட்டமின் C அதிக அளவில் உள்ளதால் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் வைத்துக்கொள்ள உதவுகிறது

கண்கள்

நாவல் பழம் கண்களுக்கும் நல்ல பயனை தருகிறது. கண் பார்வையைத் தெளிவாக்கும். நாவல் பழம் மட்டுமின்றி, அதன் விதை, இலைகள் மற்றும் பட்டை அனைத்தும் பல விதங்களில் பயன் அளிக்கிறது. நாவல் பழத்தில் வேர் முதல் கொட்டை வரை அத்தனையும் மருந்தாகப் பயன்படுகிறது.

சிறுநீரக கற்கள்

நாவல் பழம் சர்க்கரை நோயை மட்டும் தான் கட்டுப்படுத்தும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சிறுநீரகக் கற்களையும் இது இருந்த இடம் தெரியாமல் கரைத்துவிடும். தயிருடன் நாவல் பழ கொட்டையின் பவுடர் சேர்த்து சாப்பிட்டு வர கிட்னி ஸ்டோனை உடைக்க பயன்படுகிறது.

வயிற்றுப்போக்கு

நாவல் பழ கொட்டையின் பவுடர் உடன் பால் கலந்து தடவி வர முகப்பருவை போக்கும். நாவல் மரப்பட்டை மற்றும் நாவல் பழக்கொட்டை, அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற சிகிச்சைக்கு பயன்படுகிறது.

இந்த பழத்தில் பல நற்குணங்கள் உள்ளன. இதன் சாறு நினைவாற்றலை அதிகரிக்கப் பயன்படுகிறது. மேலும் அனீமியா, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுகிறது. அது மட்டுமின்றி பற்கள் மற்றும் ஈறுகளுக்கு நல்லது.

சாப்பிடும் முறை

நாவல் பழத்தில் வெள்ளை மற்றும் பிளாக் சால்ட் தூவி சாப்பிடலாம். சந்தையில் பல வடிவங்களில் இது கிடைக்கும் – ஜாமுன் ஜாம், முரப்பா ஜெல்லீஸ், மற்றும் இன்னும் பல வகைகளில் நாவல் பழத்தில் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருள்கள் உள்ளன. அவற்றை ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளலாம்.

யார் சாப்பிடக்கூடாது?

அறுவை சிகிச்சைக்குப் போகும் நோயாளிகள் இந்த பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில், இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும். பிறகு லோ சுகராகிவிடும்.

வெறும் வயிற்றில் நாவல் பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

பால் சாப்பிடுவதற்கு, ஒரு மணி நேரத்திற்கு முன்பும் பின்பும் இந்த பழத்தை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

மேலும் இந்த பழத்தின் மூலம் ஏற்படும் கரை விரைவில் போகாததால் கவனமாக சாப்பிடுவது நல்லது. சாப்பிட்ட பின் பல் துலக்குவது நல்லது.

%d bloggers like this: