Advertisements

காலையில எழுந்ததும் இப்படி செஞ்சா அப்புறம் வெயிட் போடாம என்ன பண்ணும்?

உடல் பருமன்

இதய நோய், பக்கவாதம், டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் போன்ற ஒபிசிட்டி சார்ந்த நிலைமை தான் தடுக்கக்கூடிய மரணங்களுக்கு முன்னனி காரணங்களாக அமைகிறது.

ஒபிசிட்டியை தடுப்பதனால் நாம் பல ஆபத்தான நோய்களிலிருந்து விடுபட்டு ஒரு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழமுடிகிறது.

சீரான உணவும், வழக்கமான உடற்பயிற்சியும் செய்து வர உடல் எடையை வேகமாக குறைக்கலாம். இவ்வாறு செய்தும் உங்கள் உடல் எடை குறையவில்லை என்றால் உங்களின் காலை வழக்கத்தில் எதாவது தவறு இருக்கலாம்

உடல் எடையை குறைப்பதில் உங்கள் காலை வழக்கம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தவறான வழக்கத்தில் உங்கள் காலையை தொடங்கினால் பின்பு அது உங்கள் எடையை அதிகரிக்குமே தவிர உங்கள் எடையை கூட்டாது.

தினமும் காலை எழுந்தவுடன் உடல் எடை இழக்க சில நல்ல பழக்கங்களை பின்பற்ற வேண்டும்.

அதிக தூக்கம்

நாம் இரவு சீக்கிரம் தூங்கி காலை சீக்ரம் எழுந்து வர நம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதிக நேரம் தூங்குவதால் நம் உடல் எடை கூடும்.

PLOS ONE இல் வெளியிடப்பட்ட ஒரு 2014 ஆய்வில், 24671 பெரியவர்களில் அதிக தூக்க அபாயங்கள் காணப்பட்டுள்ளன

இரவில் 10 மணிநேரத்திற்கு மேல் தூங்குபவர்களை, ஏழு முதல் ஒன்பது மணிநேரம் தூங்கினவர்களுடன் ஒப்பிடும்போது அதிக நேரம் தூங்குபவர்களுக்கு அதிக பி.எம்.ஐ. இருக்கக்கூடும்.

அதேநேரம், சரியான தூக்கமின்மை தூக்கமின்மையும் உடல் எடையை கூட்டும் . ஏனெனில், இது உங்கள் பசியின்மையை அதிகரித்து, அதிகமாக சாப்பிடக்கூடிய தன்மையை ஏற்படுத்துகிறது.

தினமும் இரவுகளில் ஏழு முதல் ஒன்பது மணிநேரம் தூக்கம் கிடைக்க வேண்டும் என்று நேஷனல் ஸ்லீப் பவுண்டேஷன் பரிந்துரைக்கிறது

காலை உணவை தவிர்க்கிறது

வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் எப்போதும் உங்கள் காலை உணவை சாப்பிட வேண்டும். நீங்கள் காலை உணவை தவிர்த்தால், உங்கள் எடை இழப்பு இலக்கை அடைவதில் நீங்கள் வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது.

ஆரோக்கியமான காலை உணவு சாப்பிடும் போது, ​​உங்கள் ஆற்றல் நிலையை அதிகரித்து, உங்கள் உடலில் உள்ள செயல்பாடுகளை செயல்படுத்துவதற்கும் குளுக்கோஸ் அளவை உறுதிப்படுத்துவதற்கும் பயன்படுகிறது.

கூடுதலாக, காலை உணவு சாப்பிடுவதால், உங்கள் இரத்தத்தில் உள்ள கார்டிசோல் அளவு குறைகிறது.

கிராமப்புற மருத்துவத்தில் இதழில் வெளியான ஒரு 2014 ஆய்வில் கண்டறியப்பட்டது என்னவென்றால், காலை உணவை தவிர்ப்பது, இடுப்பு சுற்றளவு மற்றும் பிஎம்ஐ ஆகியவற்றில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

விழித்த பிறகு காலை உணவு சாப்பிடுவதை தாமதித்தால், உங்கள் வயிற்றில் அமிலப் பழச்சாறுகளின் உற்பத்தி அதிகரிக்கிறது மற்றும் இரைப்பை அழற்சியின் அறிகுறிகளைத் தூண்டும்.

எனவே, எழுந்த சில மணி நேரங்களுக்குள் ஒரு ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுவது நல்லது

பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுவது

காலை உணவை தவிர்ப்பது எடையை அதிகரிக்கும். ஆனால் தவறான உணவு உங்கள் உடலுக்கும் எடைக்கும் மோசமாக அமையும்.

ஆரோக்கியமற்ற உணவு உங்களுக்கு ஒரு மந்தமான உணர்வை ஏற்படுத்துவதோடு உடல் எடை மற்றும் கிரோனிக் டிசீஸ் ஆபத்தை அதிகரிக்கிறது.

2016 இல் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பதப்படுத்தப்பட்ட உணவு சாப்பிடுவது எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனுக்கு அதிக வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

எடை இழக்க மற்றும் ஒரு ஆரோக்கியமான எடை பராமரிக்க, நீங்கள் பைபர், கார்போஹைட்ரெட்ஸ், ப்ரோட்டீன், மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளடக்கிய ஒரு ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடவேண்டும்.

ஆரோக்கியமான காலை உணவுகளில் சில நட்ஸ், பழங்கள், கிரீன் டீ, கீன்வா, ஸ்மூத்திஸ், தூய தயிர் ஆகியவை அடங்கும்.

பேன்கேக்ஸ், டோனட்ஸ், பாஸ்டரிஸ், பேக்கேஜட் ஜூஸ், இனிப்பு சார்ந்த உணவு ஆகியவற்றிலிருந்து விலகி இருக்கவும்.

சூரிய ஒளியை தவிர்ப்பது

காலை எழுந்ந்தவுடன் வீட்டிற்கு உளளேயே இல்லாமல் வெளியில் சென்று காலை வெயிலை ரசிக்க வேண்டும். காலை வெயில் உடல் எடை குறைப்பிற்கு உதவும்.

சூரிய ஒளி உங்கள் வளர்சி வீதத்தை வேகமாக அதிகரிக்க உதவுகிறது. நீரிழிவு நோய்க்கு ஒரு 2014 ஆய்வில் கண்டறியப்பட்டது என்னவென்றால், அல்ட்ரா வயலட் (UV)கதிர்வீச்சு உடல் பருமன் மற்றும் மெட்டபாலிக் சின்றோம் அறிகுறியை அடக்குகிறது.

PLOS ONE இல் வெளியிடப்பட்ட ஒரு 2014 ஆய்வில், அதிகாலை சூரிய ஒளியில் உள்ள நீல நிற அலைகள் உங்கள் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உங்கள் உடல் எழுந்திருக்க உதவுகிறது. எனவே, காலையில் எழுந்தவுடன், யோகா அல்லது வாக்கிங் போவது நல்லது. 20 முதல் 30 நிமிடங்கள் சூரிய ஒளி உங்கள் BMI ஐ பாதிக்க போதுமானது. சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்ட 2011 ஆய்வில், இயற்கை சூழலில் உடற்பயிற்சி செய்வது, புத்துயிர், அதிகரித்த ஆற்றல் போன்றவற்றை தருவதோடு புத்துணர்ச்சி, குழப்பம், கோபம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றை குறைக்கிறது.

தண்ணீர் குடிக்காமல் இருப்பது

நீங்கள் காலை எழுந்தவுடன் காபீ அல்லது டீ குடிக்கும் முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் அல்லது லெமன் வாட்டர் குடிக்க வேண்டும்.

தண்ணீர் உட்கொள்ளல் உங்கள் உடலில் சரியான வெப்பநிலை மற்றும் ஊட்டச்சத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. இது செரிமானத்திற்கும் உதவுகிறது. மேலும், தண்ணீர் விரைவாக வயிற்றை நிரப்புவதால், காலை உணவு அதிகமாக சாப்பிடுவதை தடுக்கிறது.

2010 ஆம் ஆண்டில் உடல் பருமன் தொடர்பாக வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வெளிவந்த தகவல் என்னவென்றால், உணவிற்கு முன் 500 மில்லி தண்ணீரை உட்கொள்ளும் போது அதிக எடை இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு உணவிற்கு முன் தண்ணீர் குடிப்பது அதிக அளவில் எடை குறைய காரணமாக இருந்திருக்கிறது.

2013 இல் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், தனி நபர்களின் எடை இழப்பு அல்லது பராமரிப்பிற்கான உணவுப் பழக்கம் உள்ளவர்கள் மத்தியில், அதிக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் எடை குறைக்கும் விளைவு பற்றிய சிறப்பம்சங்கள் கூறப்பட்டுள்ளன.

எனவே, நீங்கள் எடை இழக்க விரும்பினால், தினமும் காலை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் ஹனி கலந்து குடிக்கவும். இவ்வாறு செய்வது உங்கள் வயிற்றில் அதிக ஆல்கலீன் சூழலை உருவாக்கி எடை குறைய உதவும்.

உடற்பயிற்சி தவிர்ப்பது

காலையில் உடற்பயிற்சி செய்வது உடல் எடையை குறைக்க ஓர் நல்ல வழி.

பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு 2013 ஆய்வில், காலை வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் 20% சதவிகிதம் உடல் கொழுப்பை எரிக்க முடிகிறது.

ஆனால், உங்கள் உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன்பு, உங்கள் எடையைக் கண்காணிக்க வேண்டும். தினமும் காலை தங்கள் எடையை கண்காணிக்கும் மூலம் நம்மால் எளிதில் எடையை குறைக்க முடியும் என்று ஜர்னல் ஆஃப் ஒபெஸிட்டி பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு 2013 ஆய்வில் தெரிவிக்கின்றன.

தினசரி அடிப்படையில் உங்கள் எடையைக் கண்காணிக்கும் போது, ​​உங்களுக்கு எதனால் எடை ஏற்படுகிறது என்று அறிவீர்கள். நீங்கள் உடற்பரயிற்சி செய்ய ஜிம் போக வேண்டிய அவசியமில்லை. ஓடுவது, ஜாகிங், நீச்சல், அல்லது பைக்கிங் செய்யலாம். மேலும், நீங்கள் உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன் ஸ்ட்ரெட்சிங் செய்ய மறக்க வேண்டாம். ஸ்ட்ரெட்சிங் தசைகளை தளர்த்து, மனதை தெளிவாக்கி, உங்கள் உடலை தயாராக்குகிறது.

Advertisements
%d bloggers like this: