ப்ரோட்டீன் உணவுகள் அதிகம் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பது உண்மையா?

ப்ரோட்டீன் :

வழக்கமாக சொல்கிற ஜங்க் ஃபுட், சர்க்கரை உணவுகளை தவிர்க்க வேண்டும் ஆகியவற்றை தவிர்த்து இன்னொரு முக்கியமான விஷயம் அடிக்கடி சொல்லப்படுவது என்ன தெரியுமா? ப்ரோட்டீன் உணவுகள்.

ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளை உங்களுடைய டயட்டில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறையும் என்பது. ப்ரோட்டீன் உணவுகள் செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். அதனால் அதிக நேரம் உங்களுக்கு பசியெடுக்காது, கலோரியை எரிக்க உதவிடும், தசைகளை குறைக்க உதவிடும், மேலும் நாக்கில் உள்ள சுவை நரம்புகளை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவிடும்.

அதனால் உடல் எடையை குறைக்க விரும்புவோர் அதிகமான ப்ரோட்டீன் உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள்.

இது உண்மை தானா?

உண்மையில் இந்த விஷயங்கள் நடக்கிறது என்றாலும், அவை உங்களுடைய உடல் எடையை குறைப்பதில் எந்த அளவிற்கு பங்கு வகிக்கிறது…. ப்ரோட்டீன் உணவுகள் என்றால் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்வது,அதனை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாமா?? இப்படியான பல கேள்விகள் உங்கள் மனதில் எழுகின்றனவா? அப்படியென்றால் நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை தொகுப்பு இது.

இந்த எல்லா கேள்விகளுக்கும் அடுத்தடுத்து பதில்கள் வருகிறது.

உடல் எடை :

உடல் எடை என்பது பல்வேறு விஷயங்களை தொடர்பு கொண்டது ஆகும். உங்களுடைய வயது, மரபணு, வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், மருத்துவ காரணிகள், ஸ்ட்ரஸ்,தனிப்பட்ட குணம் ஆகியவற்றை சார்ந்தது இந்த உடல் எடை.

இவற்றில் எதையும் மாற்றாமல் வெறும் ப்ரோட்டீன் உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்வேன். உடனே உடல் எடை குறைந்து விட வேண்டும் என்று சொன்னால் அது நிச்சயம் நடக்காது.

கொழுப்பும் எடையும் :

முதல் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். கொழுப்பும் உடல் எடையும் வேறு வேறு. நீங்கள் உடலில் இருக்கிற கொழுப்பினை கரைக்க வேண்டுமா? அல்லது உடல் எடையை குறைக்க வேண்டுமா என்பதை முதலில் முடிவு செய்திடுங்கள். கொழுப்பினைத் குறைத்தால் உடல் எடை தானாக குறைந்திடும்.

நீங்கள் குறைக்க வேண்டியது கொழுப்பினைத் தான்.

ஒரு நாளைக்கு :

உங்களுடைய உடல் எடையைப் பொருத்து ஒரு நாளைக்கு 0.5 கிராம் முதல் 1 கிராம் வரையில் ப்ரோட்டீன் எடுத்துக் கொள்ளலாம். தற்போது உங்களுடைய எடை 120 பவுண்ட் என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்படியென்றால் நீங்கள் 60 முதல் 120 கிராம் வரையிலான ப்ரோட்டீன் எடுத்துக் கொள்ளலாம்.

இது தொடர்ந்து உடல் உழைப்பு செய்கிறவர்களுக்கு, உடல் உழைப்பு அதிகமாக செய்யாதவர்கள் என்றால் 60 முதல் 80 கிராம் ப்ரோட்டீன் வரை எடுத்துக் கொண்டால் போதுமானது.

இரண்டு மாதங்கள் :

ப்ரோட்டீன் உணவுகள் கொண்ட டயட்டினை கடைபிடிப்பவர்கள் இரண்டு மாதங்கள் அல்லது மூன்று மாதம் வரை மட்டுமே அந்த டயட் இருக்க வேண்டும். தொடர்ந்து அதே டயட் முறையை பின்பற்றினால் உங்களுக்கு ஆர்த்ரைட்டீஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சுறுசுசுறுப்பு :

என்ன தான் டயட் முறையை நீங்கள் பின்பற்றினாலும் உடல் உழைப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்று, டயட் மட்டும் இருந்துவிட்டு உடல் உழைப்பு சுத்தமாக இல்லை என்று சொன்னால் அது எந்த வித பலனையும் கொடுக்காது.

ப்ரோட்டீன் டயட் இருப்பவர்கள் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ப்ரோட்டீன் எடுத்துக் கொண்டு அதனை எரிக்க நீங்கள் கட்டாயமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால் ப்ரோட்டீன் குளுக்கோஸாக மாறிடும். அந்த குளுக்கோஸ் நாளடைவில் கொழுப்பாக சேரும். உடல் எடை குறைக்க வேண்டும் என்ற நிலைமை மாறி உடல் எடை அதிகரிக்க துவங்கிடும்.

பசி :

ப்ரோட்டீன் உணவுகள் எடுத்துக் கொள்ளுவதால் cholecystokinin என்ற ஹார்மோன் தூண்டப்பெறும். இது ப்ரோட்டீனையும் கொழுப்பையும் ஜீரணிக்க உதவிடுகிறது. அது மட்டுமின்றி இந்த ஹார்மோன் அதிகம் சுரந்தால் அடிக்கடி பசியுணர்வு ஏற்பட்டு கண்ட உணவுகளையும் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

தொடர்ந்து அதிக கலோரிகள் எடுப்பது குறைவது, அதே நேரத்தில் உடலில் இருக்கிற கொழுப்பும் கரைவதினால் உடல் எடை கணிசமாக குறையும்.

மெட்டபாலிசம் :

நீங்கள் உடல் எடையை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருக்கும் போது, உடலிலிருந்து கொழுப்பு மட்டுமல்ல தசைகளும் குறையத் துவங்கும், இதனால் உடலின் மெட்டபாலிசம் குறைந்திடும்.

தசைகள் ப்ரோட்டீனால் ஆனது, ப்ரோட்டீன் அதிகமிருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வதினால் தசைகளுக்கு வலுவூட்டுவதுடன் உடல் எடையை குறைக்கவும் உதவிடுகிறது.

கலோரி :

நீங்கள் ஒரு உணவினை எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் அந்த உணவு ஜீரணிக்க வேண்டும், அதிலிருந்து சத்துக்கள் உடலுக்கு சென்று சேர வேண்டும், மிக முக்கியமாக அந்த உணவிலிருந்து நமக்கு எனர்ஜி கிடைக்க வேண்டும். அந்த எனர்ஜியினால் தான் நாம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறோம். இதனைத் தான் உணவின் தெர்மிக் எஃபக்ட் என்பார்கள்.

ப்ரோட்டீனில் அதிக தெர்மிக் எஃபக்ட் இருக்கிறது. கொழுப்பு உணவுகள்,கார்போஹைட்ரேட் உணவுகள் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் ப்ரோட்டீனில் அதிகப்படியான தெர்மிக் எஃபக்ட் இருக்கிறது.

டயட் :

உதாரணத்திற்கு நீங்கள் தற்போது பத்து கலோரி அளவுள்ள ப்ரோட்டீன் எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் மூன்று கலோரி செரிமானத்திற்கு, உடலின் மெட்டபாலிசத்திற்கு சென்றுவிடும். மீதமிருக்கும் ஏழு கலோரி வரை எனர்ஜியாக பயன்படுத்தப்படும். அதோடு இந்த தெர்மிக் எஃபக்ட் அதிகமிருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வது உடலில் பிற உணவுகளிலிருந்து சேர்கிற அதிகப்படியான கலோரியை குறைக்க உதவிடுகிறது.

%d bloggers like this: