Advertisements

ரசிகர்களுக்கு ரஜினி அடுக்கடுக்காக கட்டளை

அ.தி.மு.க., – தி.மு.க., கட்சிகளை மிஞ்சும் வகையில், ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, ஓரிரு மாதங்களில், 1.5 கோடியை தாண்ட வேண்டும்’ என, மன்றத்தின் நிர்வாகிகளான, தன் ரசிகர்களுக்கு, ரஜினி அடுக்கடுக்காக கட்டளை பிறப்பித்துள்ளார்.

 

நடிகர் ரஜினி, விரைவில், அரசியல் கட்சியை அறிவிக்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளில், தீவிரம் காட்டி வரும் அவர், இம்மாதம், 10ம் தேதி, மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அடுத்தகட்டமாக, தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின், இளைஞர் அணி மாவட்ட செயலர்களுடன், நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை, போயஸ் தோட்டத்தில் உள்ள, அவரது இல்லத்தில் இந்தக் கூட்டம் நடந்தது.
மாநில செயலர் ராஜுமகாலிங்கம், பொறுப்பாளர் வி.எம்.சுதாகர் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள், 33 பேர் பங்கேற்றனர். ஆலோசனையின் போது, மன்ற நிர்வாகிகளான,

தன் ரசிகர்களுக்கு, அவர் அடுக்கடுக்காக கட்டளை பிறப்பித்துள்ளார்.

அதன் விபரம்:

* ரஜினி மக்கள் மன்றத்தில், உறுப்பினர் சேர்க்கையை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். பூத் வாரியாக, குறைந்தபட்சம், 30 பேரை உறுப்பினராக்க வேண்டும்; அதில், இளைஞர்கள், மகளிர் அதிக அளவில் இடம் பெற வேண்டும்
* ஓரிரு மாதத்திற்குள், அ.தி.மு.க., – தி.மு.க.,வை மிஞ்சும் வகையில், ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை, 1.5 கோடியாக உயர்த்த வேண்டும்; அதற்கேற்ப விரைந்து பணியாற்றுங்கள்
* பிற கட்சியினர் குறித்தோ, அரசியல் கூட்டணி தொடர்பாகவோ, யாரும் எந்த கருத்தும் தெரிவிக்கக்கூடாது
* மாவட்டம், நகர அளவில் உள்ள பிரச்னைகளை, தலைமையின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்; அதற்கு எந்த வகையில் தீர்வு காணலாம் என்ற தகவல்களையும் அனுப்ப வேண்டும். மக்களுக்கு அத்தியாவசிய சேவைகள், சரியாக கிடைப்பதில், உரிய கவனம் செலுத்துங்கள்.
இவ்வாறு, ரஜினி கட்டளை பிறப்பித்ததாக, கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், கோவை மண்டலத்தில், மாநாடு நடத்தி, அதில், கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்வது குறித்தும், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அடுத்த தாக ஒன்றிய செயலர்கள், மகளிர் அணியினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

பா.ஜ.,வுடன் கூட்டணி?

‘பிரதமர் மோடியின் ஆளுமையும், ரஜினியின் செல்வாக்கும் ஒன்று சேரும் போது, தமிழகத்தில் உருவாகியுள்ள வெற்றிடத்தை நிரப்ப முடியும்’ என, ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி கருத்து தெரிவித்தார். அவரது கருத்துக்கு, ரஜினி இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. ஆனால், ரஜினியின் அரசியல் ஆலோசனை குழுவில் இடம் பெற்றுள்ள, தமிழருவி மணியன், ‘பா.ஜ.,வுடன் ரஜினி சேர்ந்தால், நான் சகித்துக் கொள்வேன்’ என, கூறியுள்ளார். பா.ஜ., மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான இல.கணேசன், ‘குருமூர்த்தி தெரிவித்த கருத்தை மறுப்பதற்கு இல்லை. ரஜினி ஆன்மீக அரசியலை விரும்புகிறார். எனவே, பா.ஜ.,வுடன், ரஜினி இணைந்து செயல்படுவது குறித்து, காலம் பதில் சொல்லும்’ என, தெரிவித்துள்ளார். எனவே, ரஜினியுடன் கூட்டணி அமைக்க, பா.ஜ., காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், எந்த பதிலையும் கூறாமல், ரஜினி மவுனம் காத்து வருகிறார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: