Advertisements

வேக வைத்தால் எடை குறையும்!

தொடர்ந்து, எட்டு வாரங்கள் காலை உணவாக, வேக வைத்த, இரண்டு முட்டைகளை மட்டும் சாப்பிட்டு வந்தால், எடையை கணிசமாகக் குறைக்க முடியும். இது, என் அனுபவத்தில் தெரிந்து கொண்ட விஷயம்.
அதிக எண்ணெய், மசாலா, வெங்காயம், காய்கறிகள், சீஸ், வெண்ணெய் என, நாம் விரும்பியபடி எதை வேண்டுமானாலும் சேர்த்து, நிறைய விதங்களில் முட்டையை சமைக்க முடியும்.

இப்படி செய்வதால், அதிக கலோரியைச் சேர்க்கிறோம். வேக வைத்த முட்டை அல்லது கொதிக்கும் நீரில், முட்டையை அப்படியே உடைத்து ஊற்றி, நன்கு வெந்த பின், எடுத்து சாப்பிடுவது நல்லது.
ஆனால், எடை குறைய வேண்டும் எனில், வேக வைத்த இரண்டு முட்டைகளை மட்டும், தொடர்ந்து எட்டு வாரங்கள் சாப்பிட வேண்டும்.
சுபத்ரா சுந்தர்
நியூட்ரிஷனிஸ்ட், கோவை.
subathraasundar@gmail.com

Advertisements
%d bloggers like this: