Daily Archives: மே 15th, 2018

ராங் கால்–நக்கீரன் 14.5.2018

ராங் கால்–நக்கீரன் 14.5.2018

Continue reading →

ராங் கால்–நக்கீரன் 13.5.2018

ராங் கால்–நக்கீரன் 13.5.2018

Continue reading →

எடபாடியை மிரட்டும் மோடி–நக்கீரன் 13.5.2018

எடபாடியை  மிரட்டும் மோடி–நக்கீரன் 13.5.2018

Continue reading →

கோடைக்கு உகந்த உணவுகள்…

கோடையில் பலரும் சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று, `டீஹைட்ரேஷன்’’ எனப்படும் உடல் வறட்சி. நம்மில் பலர், இதை தடுப்பதற்கு எந்த முயற்சியும் எடுப்பதில்லை. இதை தடுக்க சில டிப்ஸ்… குழந்தைகள் மற்றும் முதியோரை இது அதிகம் பாதிக்கும். கோடையில் தளர்வான பருத்தி உடைகளை அணிவது நல்லது.

Continue reading →

மேபோகிராம்’ எடுக்க ஏற்ற வயது!

உடலுக்கு எக்ஸ் – ரே போன்று, மார்பக பரிசோதனை செய்ய பயன்படும் பிரத்யேக கருவி, ‘மேமோகிராம்!’
மார்பகத்தில் கட்டி அல்லது வேறு ஏதாவது பிரச்னை இருந்தால், தெரிந்து கொள்ள செய்யப்படுவது, ‘டயாக்னாஸ்டிக் மேமோகிராம்!’
ஏதாவது இருக்குமோ என்ற சந்தேகத்தில், டாக்டரிடம்

Continue reading →

குரல் காக்கும் பனங்கற்கண்டு!

னைமரத்தில் இருந்து பெறப்படும் பதநீரைப் பதமாகக் காய்ச்சித் தயாரிக்கப்படுவதே பனங்கற்கண்டு. இதில், நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன.

Continue reading →

தொடர் வருமானம்… டிவிடெண்ட் Vs எஸ்.டபிள்யூ.பி எது பெஸ்ட்?

நீங்கள் சம்பாதிக்கும் காலத்தில், உங்களின் சம்பளமே உங்கள் குடும்பச் செலவுக்குப் போது மானதாக இருக்கும். ஆனால், ஓய்வுக்காலத்தில்..? உங்கள் தேவைகளை நிறைவேற்ற நீங்கள் உங்களின் முதலீடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய  நிலை ஏற்படும். 

Continue reading →

வினைகள் தீர்க்கும் வேலவன் தரிசனம்!

முருகப் பெருமானின் அவதாரத் திருநாளாம் வைகாசி விசாக நன்னாளில், அவரின் மகிமையைச் சொல்லும் சில திருத்தலங்களின் சிறப்புகளைத் தெரிந்துகொள்வோமா?

* கையில் தாமரை ஏந்திய முருகனை ஆவூர் தலத்தில் காணலாம். கனககிரி திருத்தலத்தில் முருகப் பெருமான், கிளி ஏந்திய நிலையில் தரிசனம் தருகிறார். திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் கையில் மாம்பழத்துடன் இருக்கும் வேலவனை தரிசிக்கலாம்.

கரூர் மாவட்டம் வெங்கமேடு ஆலயத்தில் வேலாயுதமும், தேவியர் இருவரும் இன்றி தனித்து அருளும் முருகப்பெருமானை தரிசிக்கலாம்.

வஜ்ராயுதம் ஏந்திய முருகனை சுவாமிமலை மற்றும் திருவிடைக்கழி ஆகிய தலங்களில் தரிசிக்கலாம்.

திருமயிலாடி, அனந்தமங்கலம், வில்லுடை யான்பட்டு, சாயக்காடு, திருக்கடவூர் மயானம் ஆகிய தலங்களில் வில்லுடன் காட்சி தருகிறார் முருகப் பெருமான். வில்- அம்பு ஏந்தி, வேட்டைக்குச் செல்வது போல் முருகன் காட்சி தரும் தலம் திருவையாறு.

செம்பனார்கோவிலில், ஜடா மகுடத்துடன்- தவக் கோலத்தில் அருள்புரிகிறார் முருகப்பெருமான். புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள ஒற்றைக் கண்ணூர் எனும் தலத்தில், ஜப மாலையுடனும், சின் முத்திரையுடன் காட்சி தருகிறார்.

திருச்சி- உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவ நாதர் கோயிலில், தனிச் சந்நிதி கொண்டிருக்கும் முருகப்பெருமான், ஆவுடையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

குடந்தையில் உள்ள வியாழ சோமநாதர் ஆலயத் தில்… காலில் பாதரட்சையுடன் காட்சி தருகிறார் கந்தப் பெருமான்.

நாகர்கோவிலிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள வேளிமலை குமாரகோவிலில், வள்ளிதேவியுடன் மட்டுமே காட்சி தருகிறார் முருகப் பெருமான்; அருகில் தெய்வானை இல்லை. முருகனுக்கும் வள்ளிக்கும் இடையே காதல்வேள்வி நடந்த இடம் என்பதால் இவ்வூருக்கு வேள்வி மலை என்றும் பெயர் உண்டு.