Advertisements

கோடையிலும் ஃப்ரெஷ்ஷாக இருக்கலாம்!

ருமம் எண்ணெய்ப் பசையுடன் இருக்கும் கோடைக்காலத்தில் அதற்கேற்ற க்ளென்சர், டோனர், மாய்ஸ்ச்சரைஸரைப் பயன்படுத்த வேண்டியது சரும ஆரோக்கியத்துக்கு அவசியம்” என்று சொல்லும்

அழகுக்கலை நிபுணர் வசுந்தரா, அதைப் பற்றி விளக்கினார்.
ஜெல் டைப் க்ளென்சர்
“சருமத் துவாரங்களில் படிந்துள்ள அழுக்குகளை நீக்கும் க்ளென்சர்… பேஸ்ட், லோஷன், ஜெல் என மூன்று விதங்களில் கிடைக்கும். வெயில் காலத்தில், சருமத்தின் எண்ணெய்ப்பசையுடன் வியர்வையும் சேரும் போது பிசுபிசுவென்று இருக்கும். இதற்கு ஜெல் டைப் க்ளென்சர் அல்லது pH மதிப்பு 4.5 முதல்  5.5 வரையுள்ள ஃபேஸ்வாஷை உபயோகிப்பது நல்லது.

சாமந்தி டோனர்
க்ளென்சர் மற்றும் ஃபேஸ்வாஷ் பயன்படுத்தும்போது திறந்துகொள்ளும் சருமத் துவாரங்களை மூடி பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படாமல் டோனர் தடுக்கிறது. ஸ்கின் ஃப்ரெஷ்னர், ஸ்கின் டானிக், அஸ்ட்ரின் ஜென்ட் என மூன்று வகையான டோனர்கள் உண்டு. மைல்டான, மிகக் குறைந்த அளவு கிளிசரின் மற்றும் 10% ஆல்கஹால் கலந்திருப்பது, ஸ்கின் ஃப்ரெஷ்னர்.
20% ஆல்கஹால் கொண்டது, ஸ்கின் டானிக். அஸ்ட்ரின்ஜென்ட் வகையில் 20% – 60% ஆல்கஹால் கலந்திருக்க வாய்ப்புண்டு. இவற்றில், கோடைக்காலத்துக்கு, சாமந்தி பூ அல்லது ரோஜா கலந்துள்ள ஸ்கின் ஃப்ரெஷ்னர் ஏற்றது. சிறிதளவு பஞ்சை டோனரில் நனைத்து முகம் முழுவதும் லேசாக ஒற்றியெடுத்து ஐந்து நிமிடங்கள் உலரவிட்ட பின்னர் மாய்ஸ்ச்சரைஸர் பயன்படுத்தவும்.

ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் மாய்ஸ்ச்சரைஸர்
சருமத்தின் எண்ணெய்த் தன்மை மற்றும் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் மாய்ஸ்ச்ச ரைஸர்… க்ரீம் டைப், லோஷன் டைப், ஜெல் டைப் என மூன்று வகைகளில் கிடைக்கின்றன. இவற்றில் ஜெல் டைப் கோடைக் காலத்துக்கு ஏற்றது. குறிப்பாக, கற்றாழை மாய்ஸ்ச்சரைஸர் சிறந்தது.
சன்ஸ்க்ரீன் எஸ்.பி.எஃப் எவ்வளவு?
வெயிலின் தாக்கத்தில் இருந்து சருமத்தைக் காக்கும் சன்ஸ்க்ரீன், கோடைக்கு அவசியத் தேவை. ஆயிலி ஸ்கின் உடையவர்கள் ஜெல் டைப் சன்ஸ்க்ரீனையும், நார்மல் ஸ்கின் கொண்டவர்கள் லோஷன் டைப் சன்ஸ்க்ரீனையும், அதிகம் வியர்க்கும் சருமம் உடையவர்கள் வாட்டர் ப்ரூஃப் சன்ஸ்க்ரீனையும் பயன்படுத்தலாம். எஸ்.பி.எஃப் (Sun Protection Factor) அளவு 15 உள்ள சன்ஸ்க்ரீன், வெயிலில் இருந்து ஒரு மணி நேரம் சருமத்தைக் காக்கும். நம் ஊர் வெயிலின் தாக்கத்துக்கு, எஸ்.பி.எஃப் 30 தேவைப்படும்.
இவை தவிர, தினமும் இரவு ஒரு ஃபேஸ் பேக் போட்டுக் கொள்வது நல்லது. இரண்டு ஸ்பூன் முல்தானிமட்டியுடன் 10 சொட்டு இளநீர், 10 சொட்டு ரோஸ் வாட்டர் கலந்து பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால், வெப்பத்தால் ஏற்பட்ட அன்றைய நிறமாற்றத்தைச் சரிசெய்யலாம்.”

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: