டிடர்ஜெண்ட் வாங்கும்போது எப்பவாவது இந்த லேபிளை பார்த்திருக்கீங்களா?… இனியாவது பாருங்க…

டிடெர்ஜென்ட், இந்த வார்த்தையினை நாம் சர்ஃப் எக்சல், ரின் சோப், டைட் சோப் பவுடர் போன்ற விளம்பரங்களில் அதிகமாக கேள்விப்பட்டு இருப்போம்.

 

Detergent Label

டிடெர்ஜென்ட் என்றால் தண்ணீரில் கரைந்து துணிகளில் உள்ள அழுக்கை நீக்க உதவும். துணி துவைக்க உதவும் சோப்பு, சோப்பு பவுடர் மற்றும் லிக்விட்களும் டிடெர்ஜென்டின் ஒரு வகையே ஆகும்.

லேபிள்கள்

லேபிள்கள்

இந்த டிடெர்ஜென்ட் பொருட்களைப் பல நிறுவனங்கள் தயாரித்து வரும் நிலையில் அவர்கள் அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் எளிமையாக லேபிள்களில் குறிப்பிடுகின்றனர். எனவே டிடெர்ஜெண்ட் என்று இல்லாமல் எந்த ஒரு தயாரிப்பை நாம் வாங்கிப் பயன்படுத்தும் முன்பும் அதன் லேபிள்களை ஒரு படிப்பது நல்லது. நாம் இதனைச் செய்வதில்லை என்றாலும் மிக முக்கியமானது லேபிளில் உள்ள விவரங்களைப் படிப்பது ஆகும்.

நன்மைகள்

ஒரு தயாரிப்பின் லேபிளில் உள்ளவற்றைக் கவனமாக படித்து பயன்படுத்துவதன் மூலம், வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதன் மூலம் அந்த தயாரிப்பின் முழுமையான நன்மையினையும் பெற முடியும். லேபிள்களில் நாம் பயன்படுத்தும் பொருட்களால் விபத்துகள் ஏதேனும் ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருப்பார்கள் எனவே நேரத்தை வீண் அடிக்காமல் ஒரு தயாரிப்பின் லேபிள்ளை படிப்பதன் மூலம் எளிமையாக அதனை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்துகொள்ளலாம். இங்கு கீழே அளிக்கப்பட்ட வாசகங்கள் டிடெர்ஜென்ட் மற்றும் வீட்டை சுத்தம் செய்யும் பொருட்களின் லேபிள்களில் இருந்து தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இவற்றைப் படித்து சோப் பவுடர், சோப் போன்ற பொருட்களை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

டிப்ஸ் 1

டிப்ஸ் 1

குழந்தைகளிடமிருந்து தூரமாக வைக்கவும். அந்த லேபிளிலேயே குழந்தையின் படம் வரையப்பட்டிருக்கும். அதாவது குழந்தையின் கைக்கு எட்டாத வகையில் சற்று உயரமான இடத்தில் வைக்க வேண்டும். அப்போதான் நாம் அருகில் இல்லாத நேரத்தில் கூட குழந்தைக்கு அதனால் ஆபத்து எதுவும் நேராது.

டிப்ஸ் 2

டிப்ஸ் 2

கண்களுக்குப் படாமல் கவனமாக இருங்கள். குழந்தைகள் மட்டுமல்ல. பெரியவர்கள் நாள் என்று சொன்னாலும் நமக்கும் பல நேரங்களில்கவன் குறைவு உண்டாகும். அதனால் சற்று தொலைவில் வைக்கலாம். வைக்கும்முன் டைட்டாக மூடியிருக்கிறோமா என்று ஒரு முறை பரிசோதித்துக் கொள்வது நல்லது.

தவறு நடந்தால் என்ன செய்ய வேண்டும்?

ஒருவேளை அவசரத்திலோ அல்லது கவனக் குறைவாலோ சரியாக மூடாமல் வைத்திருக்கலாம். அப்படி ஏதேனும் சந்தர்ப்பங்களில்

1) ஒருவேலைக் கண்களில் பட்டாலும் சுத்தமான தண்ணீரில் கண்களை நன்றாகக் கழுவுங்கள்.

2) டிடெர்ஜென்ட் பயன்படுத்திய பிறகு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை

1) மிகவும் சென்சிட்டிவான அல்லது தோலில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் பயன்படுத்த வேண்டாம்.

2) ஒருவேளைப் பயன்படுத்தி தோலில் பாதிப்பு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.

3) பிற சேமிப்பு கொள்கலன்களில் டிடெர்ஜென்ட் பொருட்களை மாற்ற வேண்டாம்.

4) பிற தயாரிப்புகளுடன் கலக்க வேண்டாம்.

செய்ய வேண்டியவை

1) பயன்படுத்திய பிறகு நன்றாகக் காற்று செல்லும்படி அறையைத் திறந்து வைக்கவும்.

2) ரீஃபில் பாக்கெட்கள் வாங்கும் போது அசல் தயாரிப்பு டப்பாக்களில் மட்டுமே நிரப்பி வைக்க வேண்டும்.

3) உலர்ந்த கைகளில் பயன்படுத்தவும்,

4) மூடியைச் சரியாக மூடவும்.

5) பையைச் சரியாக மூடவும்.

6) ஓட்டை உள்ள அல்லது உடைந்த டப்பாக்களில் டிடெர்ஜென்ட் பொருட்களை நிரப்ப வேண்டாம். வீட்டை அல்லது ஆடைகளைத் துவைக்கும்போது நாம் மற்றும் நம்மைச் சுற்றி உள்ளவற்றை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வது எப்படி என்று தெரிந்துகொண்டு இருப்பீர்கள்.

%d bloggers like this: