Advertisements

புத்தகங்களும் ஆரோக்கியமும் 

சிலர் வீட்டில் எண்ணற்ற புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பார்கள், ஆனால் சிலருக்கு ஓரிரு பக்கங்கள் படித்தாலே தூக்கம் வந்துவிடும்! நீங்கள் இரண்டாம் வகையறா என்றால், நீங்கள் பல நன்மைகளை

இழக்கிறீர்கள் என்று தான் கூற வேண்டும்! உண்மைதான், இன்னும் தெளிவாகக் கூறுவதானால், வாசிப்பது – அதாவது உண்மையான புத்தகங்கள், பத்திரிகைகள், மின்-புத்தகங்களை வாசிப்பதைப் பற்றியே கூறுகிறோம். முகநூலிலோ இன்ஸ்டாகிராம் ஃபீடில் படிப்பதைப் பற்றிக் கூறவில்லை!வாசிப்பதால் என்னென்ன நன்மைகள் உள்ளன என்று இங்கு பார்ப்போம். இவற்றைத் தெரிந்துகொண்டால் உங்களுக்கும் நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று ஆர்வமும் ஊக்கமும் வரக்கூடும்.

உங்கள் மனதைத் தூண்டி நன்கு செயல்பட வைக்கிறது (Stimulates your mind)

வாசிப்பது உங்கள் மனதிற்கு ஒரு பயிற்சியாகிறது எனலாம். புத்தகங்களை வாசிப்பது உங்கள் மனதை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது, ஏனெனில், புத்தகங்களில் பக்கங்களில் இருக்கும் சொற்களைப் படித்துப் புரிந்துகொள்வது மட்டுமின்றி காட்சிகளையும் கற்பனை செய்துபார்க்கிறீர்கள், கருத்தளவில் சில முடிவுகளுக்கும் வருகிறீர்கள். அல்சீமர் முதுமை மறதி நோய் (டிமென்ஷியா) போன்ற நோய்களின் பாதிப்பையும் குறைக்க வாசிப்பு மறைமுகமாக உதவுகிறது.

நினைவாற்றலை மேம்படுத்துகிறது (Improves memory)

நீங்கள் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது, ஒவ்வொரு பக்கத்தை நீங்கள் புரட்டும்போதும் முந்தைய பக்கங்களில் படித்தவற்றை சிலவற்றை நினைவில் நிறுத்துகிறீர்கள், கதையை தொடர்ந்து கவனித்து வரவும், எல்லாக் கதாப்பாத்திரங்களையும் நினைவில் வைத்துக்கொள்ளவும் இந்த நினைவாற்றல் உதவுகிறது. இப்படி நீங்கள் செய்வதால் நினைவாற்றல் எப்படி மேம்படும் என்று நீங்கள் கேட்கலாம்! இப்படிச் செய்யும்போது உங்கள் நினைவாற்றல் அதிகரித்து, மூளையில் பல புதிய நினைவுத்திறன் பாதைகளும் முடிச்சுகளும் உருவாகின்றன. முன்பே நினைவில் இருக்கும் தரவின் நினைவை பலப்படுத்தவும் வாசிப்பு உதவுகிறது, இதனால் எப்போது வேண்டுமோ அப்போது அவற்றை எளிதில் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள முடிகிறது.

சலிப்புணர்வில் இருந்து விடுபட உதவுகிறது (Reduces boredom)

படிப்பது என்பது ஒருவித தூண்டுதல், இது சலிப்பிலிருந்து உங்களை விடுவிக்கக்கூடியது. ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும் உடல்ரீதியாக எவ்வித அசைவுகளும் இல்லாமல், பல்வேறு காட்சிகளையும் முகங்களையும் கதாப்பாத்திரங்களையும் உருவாக்குகிறீர்கள், இதிலேயே உங்கள் முழு கவனமும் செலுத்தப்படுகிறது. வாசிப்பால் புதிய சிந்தனைகள், கருத்துகள், பொழுதுபோக்குகளும் உருவாகும்.

நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது (Helps you sleep better)

எளிய ஒரு புத்தகத்தை வாசிப்பது உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவும். வாசிப்பது, மன அழுத்தத்தைக் குறைக்கவும் எல்லா பிரச்சனைகளையும் மறக்கவும் உதவுகிறது, இதனால் நீங்க தூங்க முயலும்போது உங்களை அலைக்கழிக்கும் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் படிப்படியாகக் குறையும். டேப்லட், மொபைல் போன்ற தூக்கத்திற்கு தொந்தரவு ஏற்படுத்தும் சாதனங்களைத் தவிர்க்கவும் புத்தக வாசிப்பு உதவுகிறது. புத்தகத்திலேயே மூழ்கிவிட்டால், காலை வரை விழித்திருப்பீர்கள், கவனமாக இருங்கள்!

பிறரிடம் பேசும், கருத்தைப் பரிமாறிக்கொள்ளும் திறனை மேம்படுத்த உதவுகிறது (Helps you communicate better)

வாசிப்பால் உங்கள் அறிவும், நினைவாற்றலும் அதிகரிக்கிறது. மொழியின் அழகும், நளினமும் பற்றி மேலும் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. இதனால் அந்த மொழியில் நீங்கள் எழுதுவதும் பேசுவதும் மேம்படுகிறது. வாசிப்பு உங்களை பரந்த மனப்பான்மை கொண்டவராக்கும், இதனால் ஒத்த மனப்பான்மை கொண்டவர்களிடம் சிறப்பான உறவைப் பராமரிக்கவும் இது உதவுகிறது. நீங்கள் ஒப்புக்கொள்ளாத கருத்தையும் தகுந்த முறையில் கண்ணியமாக காதுகொடுத்துக் கேட்டு முறையாக உங்கள் கருத்தை முன்வைக்கும் திறனையும் வழங்குகிறது.

பிரபல அமெரிக்க எழுத்தாளரான டாக்டர். சீயஸ் “வாசிப்பு அதிகமாக அதிகமாக நீங்கள் அதிகம் தெரிந்துகொள்கிறீர்கள்.தெரிந்துகொள்வது அதிகமாக அதிகமாக, மேலும் மேலும் உயரங்களை அடைவீர்கள்!” என்று கூறியது சரிதான்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: