மாசில்லா முகம் – பாசிப்பருப்பு தினம்.

முகத்தை அழகுபடுத்த நம் முன்னோர்கள் வீட்டில் பயன்படுத்திய பொருட்களில் ஒன்று தான் பாசிப்பருப்பு.

நம்மில் பலருக்கு பாசிப்பருப்பின் குணங்கள் பற்றி தெரியாத காரணத்தால், தற்போது பாசிப்பருப்பை முகத்திற்கு பயன்படுத்துவது குறைவடைந்துள்ளது.

மஞ்சளைப் போலவே  பாசிப்பருப்பிற்கு முகத்தை அழகுபடுத்தும் குணம் உள்ளது. இந்த பாசிப்பருப்பு  எப்படி முகத்தை அழகுபடுத்துகிறது  எனப் பார்ப்போம் 

முகப்பரு

அரை தேக்கரண்டி பாசிப்பருப்புப் பொடியை எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். பின்னர் 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள்.

பகல் வேளைகளில் தினமும் இரு வேளை அல்லது இரவில் தினமும் இப்படி செய்து வந்தால் ஒரே வாரத்தில் முகப்பருக்கள் மறைந்துவிடும்.

 கருமைக்கு

சூரிய ஒளியால் கருமையாகிப் போன சருமத்தை மாற்ற பாசிப்பருப்பால் முடியும். அரை தேக்கரண்டி பாசிப்பருப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல் இரண்டையும் கலந்து கொள்ளவும்

கெட்டியாக இருந்தால் சிறிது நீர் கலந்து முகத்தில் தடவுங்கள். இது விரைவில் கருமையை போக்கி முகத்தை பளிச்சென்று மாற்றும்.

 சீரற்ற சருமம்

வயது செல்லச் செல்ல சருமத்தில் மேடு பள்ளங்கள் போன்று தோன்றுவதுடன், முகம் சீரில்லாத நிறத்துடனும் இருக்கும்.

இதற்கு பாசிப்பருப்பின் மூலம் தீர்வு காணலாம். பாசிப்பருப்பை பொடி செய்து கொள்ளுங்கள். தினமும் ஒரு தேக்கரண்டி பாசிப்பருப்பு பொடியை எடுத்து அதனுடன் சிறிது ஒலிவ் எண்ணெயை கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள்.

இது மிக மென்மையான சருமத்தையும், அழகையும் தரும்.

நிறம் 

1 தேக்கரண்டி பாசிப்பருப்பு பொடியுடன் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் மாஸ்க் போல் போடுங்கள். 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

வறண்ட சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறுக்கு பதிலாக பால் கலந்து கொள்ள வேண்டும்.

மிருதுவான சருமம்

1 தேக்கரண்டி பாசிப்பருப்பை பாலாடையுடன் கலந்து முகம், கழுத்து, போன்ற பகுதிகளுக்கு தடவுங்கள். காய்ந்ததும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

இது பட்டு போன்ற மிருதுவான சருமத்தை தரும். வாரம் இருமுறை இவ்வாறு செய்வது உத்தமம்

%d bloggers like this: