கேசம் காப்போம்

கேசத்தின் ஆரோக்கியமும் உறுதித்தன்மையும் மேம்பட, கூந்தலை அலசும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களைச் சொல்கிறார், அழகுக்கலை நிபுணர் முத்துலட்சுமி.

கூந்தலை வெந்நீரில் அலசுவதைத் தவிர்க்கவும். அதேபோல, கூந்தலை உலர்த்துவதற்கு ஹேர் டிரையர் பயன்படுத்து வதையும் தவிர்க்கவும்.

ரப்பதமுள்ள கூந்தலில் சிக்குகளை நீக்கும்போது முடி வலுவிழந்து உடையும். எனவே, பெரிய பற்கள்கொண்ட சீப்பால் சிக்குகளை நீக்கிவிட்டுக் கூந்தலை அலசுவது நல்லது. அதேபோல, ஈரம் உலர்ந்த பின்னரே கேசத்தைச் சீப்பால் வார வேண்டும்.

ஷாம்புவில் கலந்திருக்கும் ரசாயனங்கள் பல. அதை நேரடியாகத் தலையில் தேய்க்கும்போது, அதிலுள்ள அமிலத்தன்மை வினைபுரிந்து பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ஷாம்புவை எப்போதும் சிறிதளவு தண்ணீரில் கலந்துதான் பயன்படுத்த வேண்டும்.

முடிஉதிர்வு, பொடுகு, நுனிப்பிளவு, வறட்சி என, உங்கள் கூந்தலின் தன்மைக்குத் தேவைப்படும் ஷாம்பு ரகத்தைத் தேர்ந்தெடுக்கவும். ஷாம்புவின் ph அளவு 4.5-க்குள் இருப்பது நன்று.

ண்டிஷனர் பயன்படுத்தும்போது அதை மண்டைப்பகுதியில் தடவாமல், கூந்தலில் மட்டுமே அப்ளை செய்யவும். 3-5 என, எத்தனை நிமிடங்களில் அலசச் சொல்லி கண்டிஷனரில் குறிப்பிடப் பட்டுள்ளதோ, அந்த நிமிடங்களுக்குள் அலசிவிட வேண்டும். கண்டிஷனர், கூந்தலை மிருதுவாக்கும்.

%d bloggers like this: