Advertisements

ஆன்லைன் ஃபைனான்ஷியல் மோசடிகள்… சிக்காமல் தப்பிப்பது எப்படி? கே.எஸ்.தியாகராஜன்

ன்லைன் ஃபைனான்ஷியல் மோசடிகள் தற்போது அதிகளவில் நடந்து வருகின்றன. இதில் குறிப்பாக, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ஆகியவற்றின் மூலமாக அதிகளவில் நடக்கிறது. நம் நாட்டில் தற்போது இன்டர்நெட் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் நாம் ஏமாற்றுக்காரர்களின் கைகளில் சிக்கும் அபாயமும், வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கிறது.  ஏமாற்றுக்காரர் களின் வலையில் தெரியாமல் விழும் தனிநபர்களும், நிறுவனங்களும் கடுமையாகப்  பாதிக்கப்பட்டு, பெரும் பணத்தை இழக்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது.

ஆன்லைனில் நடைபெறும் முக்கியமான மோசடி, தனிநபரின் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்கள் திருடப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப்படுவதுதான். ‘நாங்கள் வங்கியிலிருந்து பேசுகிறோம் என்று சொல்லி, உங்களின் டெபிட் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு குறித்த விவரங்களை  யாராவது கேட்டால், தயவுசெய்து சொல்லாதீர்கள். வங்கிகள், எந்த வாடிக்கை யாளரிடமும் அப்படிக் கேட்பதில்லை’ என்றெல்லாம் டிவியிலும், செய்தித் தாள்களிலும் அடிக்கடி விளம்பரம் வெளிட்டாலும், இப்படி நடக்கும் மோசடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டுதான் வருகிறது.

சமீபத்தில் இப்படி ஏமாற்றப்பட்ட வர்களில் ஒருவர்தான் சிவசக்திவேல். சொந்தமாகச் சிறிய சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். ஏதோ ஒரு பரபரப்பில் இருந்தவரிடம் முன்பின் தெரியாத சிலர்  பேச, அவருக்கு கிரெடிட் கார்டு, வழங்குவ தாகவும் அதற்கு வங்கிக் கணக்கு விவரங்கள் தேவைப்படுவதாகவும் சொல்லியிருக்கின்றனர். அவரோ, அவர் தன்னிடம் ஏ.டி.எம் டெபிட் கார்டு உள்ளது என்று சொல்லியிருக் கிறார். உடனே அந்த ஏ.டி.எம் கார்டின் எண்ணைச் சொல்லும்படி கேட்க, அவரும் கொடுத்தார். சிறிது நேரம் கழித்து அவருடைய போன் நம்பருக்கு ஒரு ‘ஓடிபி’ (OTP) எண் வர, அதையும் நைஸாக பேசி வாங்கியிருக் கின்றனர். அதைக் கொடுத்த உடனே ரூ.10,000 டெபிட் ஆகியுள்ளது. 

பின்பு, அந்த மர்ம நபர்கள் மீண்டும் போன் செய்ய, ‘‘என்  சேமிப்புக் கணக்கில் ரூ.10,000 எடுத்துள்ளதாகக் காட்டு கிறதே!’’ என்று கேட்டார்.  அதற்கு அவர்கள், ‘‘அந்தப் பணம் கிரெடிட் கார்டில் வரவு வைக்கப்படும்’’ என்று சொல்லியிருக்கின்றனர்.

மீண்டும் அவர்களே போன் செய்து, ‘‘இப்போது உங்கள் போன் நம்பருக்கு ஒரு ‘ஓடிபி’ நம்பர் வந்திருக்கும். அதைச் சொல்லுங்கள்’’ என்று கேட்டிருக்கிறார்கள். அவரும் அந்த நம்பரைச் சொல்ல, மீண்டும் ரூ.10,000 எடுத்திருக் கின்றனர்.

அப்போதுதான் அவர் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. மறுநாள் வங்கிக்குச் சென்று கேட்டபோது, அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து பணம் புனேவில் எடுக்கப் பட்டதும், அந்தப் பணத்தைக் கொண்டு அவர்கள் பொருள் கள் வாங்கியதும் தெரியவந்தது. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும், அவரால் அந்தப் பணத்தைத் திரும்பப் பெறவே முடியவில்லை. 

இதுபோன்ற பல மோசடிகள் ‘ஓடிபி’ எண் மூலம் நடக்கின்றன. இதுகுறித்து சைபர் க்ரைம் தடுப்பது குறித்து வங்கிகள் மற்றும் நிறுவனங் களுக்குப் பயிற்சி அளிக்கும் இன்ஃபைசெக் நிறுவனத்தைச் சேர்ந்த கார்த்திக்கிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

‘‘ஆன்லைன் பணப் பரிமாற்றம் தற்போது சாதாரண விஷயமாக மாறியுள்ளது. பேடிஎம், மொபைல் பேங்க், மணி பேங்க் போன்றவை பிரபலமாகி வருகின்றன. மத்திய அரசும்   ஆன்லைன் பணப் பரிமாற்றத்தை நன்கு ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில், ஆன்லைன் பணப் பரிமாற்றத்தில் முறைகேடு களைத் தவிர்க்க, பல்வேறு வழிமுறைகளை வங்கி களுக்கு ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது.

இதன்படி, வங்கிப் பணியாளர்களுக்கு சைபர் க்ரைம் தொடர்பாகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், வங்கிகள் அவர்களின் உள்கட்டமைப்பை மிகவும் பலப்படுத்தும்படி ரிசர்வ் வங்கி கேட்டுள்ளது. அதாவது, வங்கியின் நெட்வொர்க்கை எந்த ேஹக்கர்களும் ேஹக் செய்ய முடியாதபடி பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது. 

ேஹக்கர்கள் வங்கியின் நெட்வொர்க்கை ேஹக் செய்ததை வெளியில் சொல்லிவிட்டால், வாடிக்கையாளர்கள் பயந்துவிடுவார்கள். எனவே, அந்த விவரத்தை வங்கிகள் வெளியில் சொல்வதில்லை. இது மாதிரி நடக்கும் பல பெரிய வங்கி மோசடிகளினால் வங்கிகள்  பாதிக்கப்பட்டுள்ளன. 

உதாரணமாக, வங்கி நெட்வொர்க்கைப் பாதுகாக்க ஒரு ‘கோட்’ (code) இருக்கிறது என்று வைத்துகொள்வோம். அந்த ‘கோட்’ உலக அளவில் மிகவும் பாதுகாப்பானதாக இன்று இருக்கலாம். ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி  காரணமாக நாளை அது ஒரு சாதாரண ‘கோடாக’ மாறிவிடும். எனவே, வங்கிகள் நவீன தொழில் நுட்பத்திற்கேற்ப தங்கள் நெட்வொர்க்கை பலப் படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது. 

வங்கிகள் தாங்கள் பயன்படுத்தும்  தொழில்நுட்பத்தைப் பலப்படுத்த தவறும்போது, வங்கிகள் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க நேர்கின்றன. ஆன்லைன் பணப்பரிமாற்றம் ஒரே ஒரு அப்ளிகேஷனை மட்டும் சார்ந்து நடப்ப தில்லை. மொபைல் பேங்கிங், ஆன்லைன் பேங்கிங் உள்ளிட்ட பல வழிகளில் பணப் பரிமாற்றம் நடப்பதால், இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் தொடர்ந்து வருகின்றன.

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு களில் ஒரு ‘மேக்னட்டிக்் கோட்’ இருக்கும். இதில் நம்முடைய அனைத்துத் தகவல்கள், கார்டு குறித்த விவரங்கள் பதிவு செய்து சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இந்த கார்டை பொருள்கள் வாங்கப் பயன்படுத்தும் போது, அதிலுள்ள விவரங்கள் அப்படியே அந்த ஸ்வைப் (Swipe) மெஷினில் பதிவாகிவிடும். இந்த விவரங்களைத் திருடித்தான்  மோசடிகள் நடக்க வாய்ப்புள்ளது. இதைத் தடுக்கத்தான் ரிசர்வ் வங்கி அனைத்து கார்டுகளுக்கும் பின்நம்பர் அவசியம் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 

இதே கார்டுகளை நாம் ஆன்லைனில் இந்திய வெப்சைட்டுகளில் பயன்படுத்தும்போது, ஓடிபி அல்லது பின்நம்பர் கேட்பதால் வாடிக்கையாளர் களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. அதேசமயம், அமெரிக்க வெப்சைட்டுகளில் நம் கார்டுகளைப் பயன்படுத்தும்போது, பின்நம்பர் எதுவும் கேட்பதில்லை. வெளிநாட்டு வெப்சைட்டு களில் மட்டுமல்ல, வெளிநாடுகளுக்கு நாம் செல்லும்போது நம் நாட்டு வங்கி கார்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அதையும் மீறி சிலர் கார்டை ஆக்டிவேட் செய்கின்றனர். இது எப்போதும் ஆபத்துதான்.

எனவே, தேவையில்லாமல் நம்முடைய கார்டு குறித்த தகவல்களை நாம் யாருக்கும் தெரியப் படுத்தக்கூடாது. இதில் குறிப்பாக, நம்முடைய டெபிட் கார்டு, பின்நம்பர் ஆகியவற்றை ஆபிஸ் பையனிடம் கொடுத்து, பணம் எடுத்து வரச் சொல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. வங்கியிலிருந்து கேட்டாலும் சரி, எந்த நிறுவனத்திலிருந்து கேட்டாலும் சரி, நமது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு குறித்த தகவல்களைச் சொல்லவே கூடாது. 

மேலும், இ-மெயில் மூலமாகவும் அதிகளவில் மோசடிகள் நடக்கின்றன. குறிப்பாக, போலி இ-மெயில் ஐடி-கள் மூலமாக அதிகளவில் மோசடிகள் நடக்கின்றன. நம்முடைய இ-மெயில் ஐடி போன்றே மற்றொரு இ-மெயில் ஐடி-யை உருவாக்கி மோசடி நடக்கவும் வாய்ப்புள்ளது. நம்முடைய இ-மெயில் ஐடி-யை ேஹக் செய்து, அதிலிருந்து நாம் அனுப்புவதுபோல், மெயில் அனுப்பவும் வாய்ப்புள்ளது. எனவே, இ-மெயில் வந்தால், அதுகுறித்த சம்மந்தப்பட்ட வர்களிடம் உறுதி செய்துவிட்டு பணப் பரிமாற்றம் செய்வது  நல்லது.

அதேபோல், நாம் மொபைலை மிக மிகக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். இப்போது அனைத்து நடவடிக்கைகளும் மொபைல் மூலமாகவே நடக்கின்றன. மொபைலில் சில நடவடிக்கைகள் தானாகவே ‘ஓடிபி’-யை ஆக்டிவேட் செய்ய வாய்ப்புண்டு. தவிர,  மொபைலில் உள்ள ஆப் மூலம் மொபைலின் இரண்டுபக்க கேமராக்களையும் ஆன் செய்து நம்முடைய அனைத்து நடவடிக்கை களையும் கண்காணிக்க முடியும். எனவே, நாம் இன்டர்நெட்டில் தேடும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், நமக்கு அவசியமே இல்லாத ஆப் டவுன்லோட் ஆகி வினையாக அமைந்துவிடும். அப்படி ஏதாவது அப்ளிகேஷன் டவுன்லோட் ஆகிவிட்டால், நமக்கு வரவேண்டிய ‘ஓடிபி’ எண் ேஹக்கர்களுக்கு சென்றுவிட வாய்ப்புள்ளது. எனவே, நமது மொபைலுக்கு ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர் போடுவது மிகவும் அவசியம்’’ என்றார்.

நம்மிடம் இருக்கும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் தொடர்பான விவரங்களை நம்மைத் தாண்டிச் செல்ல முடியாதபடிக்குப் பத்திரமாக வைத்திருப்பதுடன், ஆன்லைனில் ஈடுபடும்போது  கவனமாகச் செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற சிக்கல்களில் சிக்காமல் நம்மால் தப்பிக்க  முடியும் என்பதில் சந்தேகமில்லை!

Advertisements
%d bloggers like this: