பாடி பாசிடிவிட்டி vs. பருமன்: ஏற்றுக்கொள்வதா மூடத்தனமா?

உங்களது உடல் அழகானது.

#பாடிபாசிடிவிட்டி என்ற இயக்கம், மக்கள் தங்களது உடலில் உள்ள குறைகளை அது அவர்களுக்கு மட்டுமே தனித்துவமானது என்பதால் அதனை குறையாக நினைக்காமல் ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறது. பருமனோ, ஒல்லியோ அல்லது பூசினாற்போன்றோ, கருப்போ, வெள்ளையோ அல்லது பழுப்பு நிறமோ இப்படி எதுவாக இருந்தாலும் உங்களது உடல் அழகானது. சூப்பர் மாடல் போன்ற சைஸ் ஜீரோ உடலமைப்பு மட்டுமே கவர்ச்சிகரமானது என்ற குறுகிய எண்ணத்தை உடைத்தெறிவதே இதன் நோக்கமாகும்.

எனினும், பாடி பாசிடிவிட்டிக்கும் பருமனுக்கும் இடையே ஒரு மெல்லிய இடைவெளி தான் உள்ளது. பாடி பாசிடிவிட்டி ஒரு ஆரோக்கியமான உடல் என்பது எந்த வடிவிலும் தோற்றத்திலும் இருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்வதாகும். எனினும் அது இரண்டாவதாக சொல்லப்படும் பருமனை ஆமோதிப்பது அல்ல. பாடி பாசிடிவிட்டி என்ற போர்வையில் உடல் பருமனை ஏர்றுக் கொள்வது என்பது குண்டாக இருப்பதால் ஏற்படும் சிக்கல்களையே அதிகப்படுத்தும்.

ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது அவசியம் என்பதை உணர வேண்டும். ஆரோக்கியமான உடல் எடையை அடைந்த பின்னர், உங்களது உடல் எந்த வடிவில் இருந்தாலும் அதனை கொண்டாடி மகிழலாம்.

ஆரோக்கியமான உடல் எடையை எப்படி நிர்ணயிப்பது?

ஆயுர்வேதத்தில், ஒரு ஆரோக்கியமான எடை என்பது உடலுக்கு அது வழங்கும் பலத்தை (சரியான வலிமை) அடிப்படையாக கொண்டது என கூறப்படுகிறது.

லீவர் ஆயுஷ் ஆயுர்வேத நிபுணரான *டாக்டர். மஹேஷ் கூறுகிறார், பலம் என்பது **சுஷ்ருத ஸம்ஹிதா அதாவது “இதன் காரணமாக ஒருவர் ஊட்டசத்து மற்றும் உறுதியான மாம்ச தாடூ, அதாவது பல வேலைகளை சிறப்புற செயல்படுத்த முடிவது, தெளிவான மற்றும் இனிமையான குரல், நிறத்துடன் அனைத்து பாகங்களும் நன்றாக செயல்படுத்தல், அது வெளிப்புற உறுப்புகள் அதாவது ஜின்யானேந்திரியா அல்லது கர்மேந்திரியா அல்லது உள்ளுறுப்புகளான மனஸ், ஆத்மா ஆகியவற்றை உள்ளிட்டது.”

புகைப்பட ஆதாரம்: Brainly.in

இப்போது, பிஎம்ஐ 18-25 க்குள் அல்லாமல் அதை விட 30% அதிகமான பருமன் உடல்வாகு கொண்டவராக நீங்கள் இருந்தால், கவலை வேண்டாம். உடல் எடையை குறைக்க நீங்கள் மிக கடுமையான டயட்டை பின்பற்றவோ அல்லது கடினமான உடற்பயிற்சியை மேற்கொள்ளவோ தேவையில்லை. உங்களது உடல் பூசினாற்போன்றோ, அகலமாகவோ அல்லது குறுகலாகவோ எப்படி இருந்தாலும் உடலுக்கும் அதன் தாங்கும் திறனுக்கும் மரியாதை கொடுக்க கற்றுக்கொடுக்கும் முழுமையான வாழ்க்கை முறையை நீங்கள் பின்பற்றினாலே உங்களின் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.

பிஎம்ஐ யை எவ்வாறு அளவிடுவது?

பிஎம்ஐ = நிறை (கிலோகிராம்) / உயரம்2 (m2)

அதற்கு நீங்கள் அயுர்வேதத்தின் கொள்கைகளை பின்பற்றலாம். ஆயுர்வேதம் 5000-ஆண்டு பழமையான மருத்துவ அறிவியlலாகும். இந்திய துணை கண்டத்தில் தோன்றிய அது, உங்களது உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஒரு முழுமையான லைஃப்ஸ்டைல் அணுகுமுறை மூலம் குணப்படுத்தி தூய்மையாக்குகிறது. ஆயுர்வேதம் எனபதன் பொருளே “வாழ்வின் அறிவியல்” என்பதாகும் (ஆயுர் – வாழ்க்கை, வேதம் – அறிவியல்).

அதன் அடிப்படையில், நீங்கள் பின்பற்ற வேண்டிய முறைகள் மற்றும் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள் முழுக்க முழுக்க தனித்துவமான உங்களது உடல்கூற்றை பொருத்தே அமையும். அது பல்வேறு கோணங்களான, உங்களது மருத்துவ பின்னணி, பழக்கவழக்கங்கள் மற்றும் உடலமைப்பை அடிப்படையாக கொண்டது. வழக்கமான மருந்தின், அனைவருக்கும் பொருத்தமான ஓரே அளவு என்ற அணுகுமுறைக்கும மாற்றாக அது அமைகிறது. பாடி பாசிடிவிட்டி என்பது ஃபேஷன் தொழிலில் அழகு என்பதன் கடுமையான தர நிர்ணயத்துக்கு மாறுதலான அணுகுமுறை என்பதை போன்றதாகும்.

உடற்பருமனும் ஆயுர்வேதமும்

Picture Courtesy: EasyAyurveda.com

ஆயுர்வேத அறிவியலானது வாதம், பித்தம், கபம் என்ற மூன்று முதன்மை உயிர் ஆற்றல் அல்லது தோஷங்களால் ஆன நமது உடலை பற்றி விவரிக்கின்றது. இவை ஒருவரது உடலில் சரியான அளவில் இருந்தால் அவர் ஆரோக்கியமாக வாழலாம். ஒருவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்படுகின்றது என்றால் இந்த தோஷங்களின் அளவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளதால் இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட தோஷம் அதிகமாகவோ அல்லது மிக குறைவாக உள்ளதன் விளைவாக இருக்கும்.

“அதிகளவு சத்துணவுகளை உண்பதால் ஏற்படும் ஒரு நோயே உடற்பருமன் ஆகும் (சந்தார்பணா), இன்றைய லைஃப்ஸ்டைல் குறைபாட்டின் காரணத்தால் அது ஏற்படுகிறது.”

“அதிக ஊட்டச்சத்தினால் கூடுதலான மேதா தாது உருவாகுதல் (வளர்சிதை மாற்ற அக்னி). இது பல்வேறு கூறுகளின் இயக்கங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. அது மறைமுகமாக வாத தோஷத்தை, குறிப்பாக வயிற்றுப்பகுதியில் அதிகரித்து, பசியை தூண்டி, கேடினை அதிகரிக்கும் முடிவற்ற வட்டத்தினை உயர்த்துகிறது.”

எனவே, உடற்பருமனுக்கான தீர்வு வாத, பித்த தோஷத்தினை சமன் செய்யும் அதிலும் குறிப்பாக அக்னி மற்றும் கபத்தினை கட்டுப்படும் டயட்டை பின்பற்றுவதாகும். அது உடலில் கொழுப்பு படியும் சேனல்களை பல்வேறு மூலிகை பொடிகள் மற்றும் கட்டுப்பாடான டயட் மூலம் சுத்தம் செய்யும் முறையாகும்.

பெரும்பாலான வியாதிகள் நமது பழக்க வழக்கங்களால் (லைஃப்ஸ்டைல்) ஏற்படுகின்றன. அதனை எளிமையான முறையில் சரி செய்யலாம் என டாக்டர். மஹேஷ் கூறுகிறார். அவர் அலிகரில் உள்ள ஜீவன் ஜோதி ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை சேர்ந்த த்ரவ்யகுணா பிரிவின் விரிவுரையாளர் மற்றும் எச்ஓடி ஆவார்.

பாடி பாசிடிவிட்டி மற்றும் ஆயுர்வேதம்

பாடி பாசிடிவிட்டி என்பது நமது உடலை அதன் குறைகளுடன் ஏற்றுக்கொள்வதாகும். ஏனெனில் மனிதர்கள் பல வகையான உடலமைப்பு, அளவு மற்றும் வடிவங்களில் பிறக்கின்றனர். அதனை (பருமன் போன்ற) நோய்களை ஏற்றுக்கொள்ளுதல் என்ற பொருளில் எடுத்துக் கொள்ள கூடாது. ஏன் என்றால் உடற்பருமன், நாம் வேண்டுமென்றே பின்பற்றும் லைஃப் ஸ்டைலினால் (அதிகமாக உண்ணுதல்) ஏற்படுகிறது. யாருமே பிறக்கும்போதே பருமனாக பிறப்பதில்லையே.

ஆயுர்வேத வாழ்க்கை முறை, பாடி பாசிடிவிட்டியை ஆதரிக்கிறது ஏன் என்றால் அது ஒவ்வொருவரும் தனித்துவமானவர் எனபதையும் ஆரோக்கியம் என்பது ஒவ்வொருக்கும் மாறுபடும் என்பதையும் நமக்கு கற்றுக்கொடுக்கிறது.

“வாழ்க்கை என்பது ஒரு விலை மதிக்க முடியாத பரிசாகும். எனவே அதனை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வதால் நமக்கு எல்லையற்ற நிம்மதியும் அமைதியும் கிட்டும். நாம் வாழும் முறையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் நம் அனைவருக்கு உண்டு ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை நாம் முடிவு செய்ய முடியாது,” என்ற பாடத்தினை டாக்டர். மஹேஷ் அனைத்து வாசகர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்

**சுஷ்ருதா சம்ஹிதா என்பது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பற்றிய மிக முக்கியமான சமஸ்கிருத ஏடாகும். இதுவே அயுர்வேதத்தின் அடிப்படையாகவும் கருதப்படுகிறது. அது மஹரிஷி சுஷ்ருதாவால் உருவாக்கப்பட்டதாகும்.

%d bloggers like this: