Advertisements

பாலிருக்கும் பலமிருக்கும்!

பாலில் இருக்கும் அளவில்லாத ஊட்டச்சத்துகளின் விவரம் நாம் எல்லோரும் அறிந்ததே. `தினமும் ஒரு டம்ளர் பால் அருந்தினால் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; நோய்கள் நம்மை நெருங்காமல் காக்கும்’ என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. வெறும் பாலை குடிக்கப் பிடிக்கவில்லையென்றால், தயிர், வெண்ணெய், பனீர், ஐஸ்க்ரீம் என உட்கொள்ளலாம்.

* பாலில் பெரும்பாலும் நீர்ச்சத்துதான் இருக்கிறது. க்ரீம் வடிவில் வைட்டமின்கள், புரதங்கள், கார்போஹைட்ரேட்கள், கொழுப்பு போன்றவை கலந்திருக்கின்றன.

* குளிர்ந்த பால், வயிற்றில் அசிடிட்டி ஏற்படாமல் காக்கும். சளித் தொல்லை ஏற்படும் பிரச்னை இல்லையென்றால், ஐஸ்க்ரீம்கூடச் சாப்பிடலாம்.

* சோயா பவுடர் கலந்த பால் அல்லது சோயா பால் குடித்தால் உடலை ஃபிட்டாக வைத்திருக்கலாம். ஒரு டம்ளர் சோயா பாலில் கொஞ்சமே கொஞ்சம் கலோரிகள், குறைந்த அளவில் சோடியம், சர்க்கரை, சாச்சுரேட்டட் கொழுப்பு ஆகியவை இருந்தாலும், ஒரு டம்ளர் வெறும் பசும்பாலைவிடச் சிறந்தது.

* பாலில் ட்ரிப்டோபன் (Tryptophan) என்கிற புரதம் அதிகமிருக்கிறது. இது, தூக்கத்தை வரவழைக்கும் மெலடோனின் ஹார்மோனைத் தூண்ட உதவும். தினமும் 500-600 மி.லி பால் குடித்தால், இரைப்பைப் பிரச்னைகளைத் தடுக்கலாம்.

* பால் பொருள்களில் இருக்கும் லினோலிக் (Linoleic) என்ற அமிலம், உடலிலிருக்கும் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும் சக்திவாய்ந்த துணைப்பொருள்.

Advertisements
%d bloggers like this: