இரண்டே நிமிடங்களில் ஆரோக்கியம்
இப்போதான் தேதி இருபதாகுது. அதுக்குள்ள பட்ஜெட்ல பள்ளம்…’ மாதச் சம்பளம் வாங்கு பவர்களில் பெரும்பாலானவர்கள் புலம்புகிற வாசகம். ஆனால், இதைவிடப் பெரிய பிரச்னை ஒன்றும் இருக்கிறது. பணம் அல்ல, மாதம் முழுவதுமே நாம் எதிர்கொள்ளும் பிரச்னை. அது, ‘நேரமின்மை.’
கர்நாடகா ரிசல்ட் – மனம் மாறிய மோடி!
கர்நாடக மாநிலத் தேர்தல் நிலவரங்கள் கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலையே அதிரடித் திருப்பங்களுக்கு உள்ளாக்கப்போகின்றன. பிரிந்து கிடந்த அகில இந்திய எதிர்க்கட்சிகளை இணைத்தது மட்டுமல்ல, ‘முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரலாமா?’ என்று யோசித்து வந்த நரேந்திர மோடியின் மனதைக் கர்நாடக நிலவரம் மாற்றிவிட்டதாகவும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.
மலர்’ எடப்பாடி… ‘முள்’ பன்னீர்
ஓரங்கட்டப்படும் ஓ.பி.எஸ் என்று செய்தி பரவி வருகிறதே உண்மையா?” என்று கழுகாருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பிவிட்டுக் காத்திருந்தோம். அடுத்த நொடி நம்முன் அவர் ஆஜராகியிருந்தார். “உமக்கு அனுப்பிய மெசேஜ்ஜில் இருந்து தொடங்கும்” என்றோம். தலையாட்டியபடியே ஆரம்பித்தார்.
‘‘எடப்பாடிக்கும் பன்னீருக்குமான மோதல் புதிதல்ல. நாளுக்கு நாள் அது அதிகமாகிவருகிறது என்கிறார்கள். மனசுக்குள் இருந்த கசப்புகள் இப்போது வெளிப்படையாக வெடிக்க ஆரம்பித்துள்ளன என்று சொல்கிறார்கள்.”