சூரிய ஒளி சிகிச்சை

பஞ்ச பூதங்களில் முதன்மையான நெருப்பை அடிப்படையாகக் கொண்ட பழங்கால சிகிச்சை முறை ஒன்று உண்டு. அதுதான் சூரிய சிகிச்சை. இந்த சிகிச்சை மூலம், நோய்களைக் குணப்படுத்த முடியும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் முடியும். நம் முன்னோர் வெயில் மழை பாராமல் கடுமையாக உழைத்தார்கள். அதனால், நோய்களை வென்று நெடுங்காலம் வாழ்ந்தார்கள். ஆனால் நாகரிக

வாழ்க்கை நம் உடலில் வெயில் படுவதைக் குறைத்துவிட்டது. இந்தியா வெப்பமண்டலப் பிரதேசமாக இருந்தபோதிலும் இங்கு  ‘வைட்டமின் டி’ குறைபாடுகளும் அதனால் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis), எலும்புத் தேய்மானம் போன்றவையும் அதிகம். போதிய அளவு  நம் உடலில் சூரிய ஒளி படாததாலேயே இத்தகைய பிரச்னைகள்  ஏற்படுகின்றன.
இன்றைய சூழலில் நம் உடலில் சூரிய ஒளிபடுவது குறைந்து `மெட்டபாலிக் டிஸ்ஆர்டர்’ (Metabolic Disorder) ஏற்படுகிறது. வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் இந்தப் பிரச்னையால் உடலியக்கத்தில் குறைபாடுகள் உண்டாகும்.

நம் உடலில் உள்ள சில உறுப்புகள் மட்டும் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் செயல்பட வேண்டியிருக்கும்.  உதாரணமாக, உணவு செரிமானமாக சில உறுப்புகள் தொடர்ந்து செயல்படும். இதை ‘பயாலஜிக்கல் ரிதம்’ (Biological Rhythm) என்பார்கள். செரிமானமாகவும் மலம் மற்றும் வியர்வையை வெளியேற்றவும் இரவு பகலாக நடைபெறும் இந்தச் செயல்பாடுகளின்போது மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரக்க வேண்டியது அவசியம். இந்த மெலட்டோனின் சுரப்பி சரிவர இயங்க, சூரிய ஒளி அவசியம். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில்  மனச்சோர்வு, கோபம், படபடப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படும். இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட மெலட்டோனின் போதிய அளவுக்கு சுரக்காததே காரணம். அதனால்,  போதிய அளவு சூரிய ஒளியில் நம் உடல் படவேண்டும். குறைபாடு ஏற்படும்பட்சத்தில், சூரிய சிகிச்சை மூலம் அதைச் சரி செய்து கொள்ளலாம்.
உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் செரட்டோனின் என்ற ஹார்மோன் சுரக்கவும் சூரிய ஒளி தேவை.  மன அமைதி, நேர்மறையான எண்ணங்கள் ஏற்படவும் இந்த ஹார்மோன் உதவும். மெலட்டோனின், செரட்டோனின் என்ற ஹார்மோன்கள் ஒன்றையொன்று சார்ந்தவை. மெலட்டோனின் அதிகமாகச் சுரந்தால்தான் செரட்டோனின் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும். இவை இரண்டும் சீராகச் சுரந்தால்தான் ஆழ்ந்த தூக்கம், மனநிம்மதி கிடைக்கும். கொழுப்புச்சத்து கட்டுப்பாட்டில் இருக்கவும், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் வராமல் தடுக்கவும் இவை தேவை. போதுமான அளவு சூரிய ஒளி நம் உடல்மீது படாமல்போனால் ‘வைட்டமின் டி’ குறைபாடு ஏற்பட்டு, ‘ரிக்கெட்ஸ்’ நோய்  ஏற்படலாம்.  வளர்சிதை மாற்றத்துக்கும், தசை, எலும்புகள் சீராக இயங்கவும் வைட்டமின் டி,  கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் மிகவும் முக்கியம்.  

`மல்ட்டிபுள் ஸ்க்லெரோசிஸ்’ (Multiple Sclerosis) எனப்படும் கடுமையான ஆளுருக்கி நோய்  வைட்டமின் டி பற்றாக்குறையால் ஏற்படுகிறது. சூரிய ஒளி சிகிச்சை மூலம்  இதைச் சரிசெய்யலாம். வைட்டமின் டி குறைபாட்டால் ஏற்படும்  இன்சுலின் சுரப்பு பாதிப்பையும் சூரிய ஒளி சிகிச்சையால் சரி செய்யலாம்.  சூரிய ஒளி மூலம் அல்ட்ரா வயலட் ரேடியேஷனும் (Ultra Violet Radiation) கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, பரம்பரை நோய்களைத் தடுக்க இது உதவும்.
சூரிய ஒளி சிகிச்சையில் கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள் உண்டு.  குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே நம் உடல்மீது சூரிய ஒளி படவேண்டும். சூரிய ஒளி படுவதால் மெலனின் என்ற கறுமைநிறப் படிவம் நமது சருமத்தில் உருவாகும். இது,  சருமத்துக்குப் பாதுகாப்பு தரும் ஒருவித அரண்.  இதைப் போக்க லோஷன்களைத் தடவினால் மெலனின் சுரப்பு தடைபடும். சருமத்தில் பாதிப்பு ஏற்படும்.  அதிகநேரம் சூரிய ஒளியில் இருந்தால் வைட்டமின் டி அதிகமாகக் கிடைக்கும் என்பதும் உண்மையல்ல. காலை மற்றும் மாலை நேர சூரிய ஒளி நம் உடலில் படுவது நல்லது. உச்சி வெயிலைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

%d bloggers like this: