Advertisements

மூட்டுவலி போக்கும் முருங்கைக்கீரை!

சிக்குரு, கிரஞ்சம், கிழவீ, சோபாஞ்சனம் எனப் பல பெயர்களைக் கொண்ட முருங்கை மரத்தை ‘கற்பக விருட்சம்’ என்று சொல்லலாம். இதன் இலை (கீரை), காம்பு, பூ, காய், பிசின், பட்டை என அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. முருங்கையில் காட்டு முருங்கை, கொடி முருங்கை, தவசி முருங்கை எனப் பல வகைகள் உள்ளன.

* முருங்கைக்கீரையில் இரும்பு, தாமிரம், கால்சியம், வைட்டமின் உள்ளிட்ட சத்துகள் இருக்கின்றன. இந்தக் கீரையை நெய் விட்டு வதக்கிச் சாப்பிட்டால் ரத்தச்சோகை நீங்கும். பற்கள் கெட்டிப்படுவதுடன் சரும நோய்கள், பார்வைக் கோளாறுகள் நீங்கும். மாலைக்கண் பிரச்னை சரியாகும். மலச்சிக்கல் நீங்கும்.
* முடி உதிர்தல் பிரச்னைக்கு முருங்கைக்கீரை நல்ல தீர்வு. வாரத்தில் மூன்று நாள்களேனும் இந்தக் கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் தாய்ப்பால் சுரப்பு மேம்படும்.
* முருங்கை இலையுடன் சம அளவு மிளகு சேர்த்து நசுக்கிச் சாறு எடுத்து, தலைவலி உள்ள இடத்தில் பற்றுப் போட்டால் நிவாரணம் கிடைக்கும். வெறும் இலையை அரைத்து வீக்கத்தின்மீது தடவினால் வீக்கம் விலகும்.
* முருங்கைக்கீரைச் சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்துப் பிசைந்து தொண்டையில் பூசினால் தொண்டைக்கட்டு, தொண்டைக் கரகரப்பு விலகி, சளிப் பிரச்னைகள் நீங்கும்.

* முருங்கைக்கீரை, மிளகு, சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்த ரசத்தைச் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்.
* முருங்கைக்கீரையைப் பொடியாக நறுக்கி அதனுடன் துருவிய கேரட், பசு நெய், கோழி முட்டை, உப்பு, காரம் சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டால் உடல் பலம் கிடைக்கும்.

Advertisements
%d bloggers like this: