அந்நியச்சூழல் பயம் (Xenophobia)

அறியாத விஷயங்கள் குறித்த பயம் மனிதர்களுக்கு எப்போதுமே உண்டு. தெரியாத ஒரு நபர் அல்லது குழு அல்லது தங்களுக்கு அந்நியமான கருவிகள் மற்றும் சூழ்நிலைகளாலும் சிலருக்கு  பயம் ஏற்படுகிறது.  இந்த பயத்துக்கு Xenophobia என்று பெயர். Xenos-அந்நியம்; Phobia-பயம். தெரியாத சூழல்கள் மற்றும் அந்நியர்கள் பற்றி பயப்படுவது சாதாரணம். ஆனால் இந்த பயம் அதிகரிக்கும்போது சிலர் மன அழுத்தத்துக்கு ஆளாகலாம். அது அவர்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும். அவர்களால்

மகிழ்ச்சியாக வாழ முடியாமலும், ஆரோக்கியமான உறவுகளை உருவாக்க முடியாமலும் போகலாம். இந்த பயம் தனிமனிதர்களுக்குத்தான் வரவேண்டும் என்றில்லை. ஒட்டுமொத்த சமூகத்துக்கேகூட வரலாம். இன்னொரு குழுவைப் பார்த்து அந்தச் சமூகம் முழுவதுமே பயம் கொள்ளலாம்.

அறிகுறிகள்: அதிகரிக்கப்பட்ட இதயத்துடிப்பு, வாய் வறட்சி, முறையற்ற சுவாசம், தெரியாத அல்லது வித்தியாசமான சிந்தனைகளால்  ஏற்படும் பீதி, அழுகை, நடுக்கம், மயக்கம் போன்றவை.
சிகிச்சைகள்: மனத்தளர்ச்சியைச் சமாளிக்கவும் பீதியைக் குறைக்கவும் சிலவகை மருந்துகள் உதவும்.
தியானம்: ஒருவருடைய சிந்தனைகளையும் கற்பனைகளையும் மாற்றுவதில் தியானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுய உதவி நுட்பங்கள் மற்றும் நியூரோலிங்கிஸ்டிக் புரோகிராம்கள் (NLP) ஒருவரின் நம்பிக்கையை உயிர்ப்பிக்க உதவும். எதிர்மறையான அனுபவங்களை ஒதுக்கித் தள்ளுவதற்குப் பதில் இலக்குகளின்மீது கவனம் செலுத்துமாறு நிபுணர்கள்

%d bloggers like this: