பாக்டீரியாவை பெருக்கும் ஊறுகாய்!

வீட்டிலேயே புளிக்க வைத்த உணவில், ‘புரோபயாடிக்’ எனப்படும், நன்மை தரும் பாக்டீரியா அதிகம் உள்ளது.
பல நுாற்றாண்டுகளாக, காலை உணவாக இருந்த, நீர் ஊற்றிய பழைய சாதத்தை மறந்து விட்டோம்.

காலை உணவாக பழைய சாதமும், சின்ன வெங்காயமும் சாப்பிடுவது, ஆரோக்கியத்திற்கு நல்லது. பாரம்பரிய முறையில், வீட்டிலேயே செய்த எலுமிச்சை, மாங்காய், இஞ்சி ஊறுகாய் செரிமானத்திற்கு தேவையான என்சைம்களை, போதுமான அளவு சுரக்கத் துாண்டும்.
ஜீரண மண்டலத்தில் நல்ல பாக்டீரியா குறைந்து, கெட்ட பாக்டீரியா அதிகரிக்கும் போது ஏற்படும், செரிமான கோளாறுகளை பழைய சாதம், ஊறுகாய் போன்ற வீட்டில் புளிக்க வைத்த உணவுகள் சரி செய்யும்.
செரிமானம் மட்டுமல்ல, எதிர்ப்பு சக்தி, மூளையின் செயல்பாடு அதிகரிக்கும். நரம்பு செயல்பாடுகளைத் துாண்டும், ‘செரடோனின்’ ஹார்மோன் சுரப்பு அதிகரித்து, நல்ல துாக்கத்தை தரும்.
ஹேமா ரத்தனம்
ஹோலிஸ்டிக் நியூட்ரிஷனிஸ்ட், டொரான்டோ.
info@melliyal.com

%d bloggers like this: