ஜெயலலிதா என்னென்ன உணவுகளை உண்டார்… டயட் சார்ட் இதோ…

ஜெயலலிதா அதிகாலை 5 மணி முதல் இரவு 7.15 மணி வரை என்னென்ன சாப்பிடுவார் என்பது குறித்து அவர் கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 75 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி என்ற ஒரு நபர் கமிஷனை தமிழக அரசு அமைத்தது. இதனிடையே ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் எந்த நிலையில் இருந்தார் என்பது குறித்தும் கடந்த செப்டம்பர் மாதம் தகவல்கள் வெளியாகின.

சுயநினைவு இல்லை

ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்படும் முன் அவருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 500 எம்ஜியாக இருந்தது. அவரது ஆக்ஸிசன் அளவு 49 சதவீதமாக இருந்தது. அவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது ஹும் ஆம் என்ற ஓரிரு வார்த்தைகளை மட்டுமே பேசியிருந்தார் உள்பட பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.

காலை முதல் இரவு

இந்நிலையில் காலை முதல் இரவு வரை ஜெயலலிதா என்னென்ன உணவுகளை உட்கொண்டிருந்தார் என்பது குறித்து அவர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி டைரியில் தன் கைப்பட எழுதியிருந்தது தற்போது வெளியாகியுள்ளது. அதில் காலை முதல் இரவு வரை அவருக்கு என்னென்ன வழங்க வேண்டும் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலை டிபன்

ஜெயலலிதாவின் எடை கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 106.9 கிலோவாக இருந்ததாக அவரே எழுதியுள்ளார். பின்னர் அதிகாலை 4.55 மணிக்கு தாமரை தண்டில் செய்யப்பட்ட ஜூஸ், 5 மணிக்கு சர்க்கரை அளவு பரிசோதனை செய்ய வேண்டும். காலை 5.05 மணி முதல் 5.35 மணிக்குள் ஒன்றரை இட்லி, 4 துண்டு பிரட், காபி 400 எம்எல், இளநீர் 230 எம்எல், 5.45 மணிக்கு கிரீன் டீ ஆகியவற்றை வழங்க வேண்டும்.

ஆப்பிள்

பின்னர் 8 மணிக்குள் ரிவைவ் தண்ணீர் 200 எம்எல், 8.55 ஆப்பிள், அதன் பின்னர் 9.40 மணிக்கு காபி 120 எம்எல், போர்பான் பிஸ்கட் 5 எண்ணிக்கையும் வழங்கப்பட வேண்டும். 11.35 மணிக்கு பாஸ்மதி சாதம் ஒரு கப் வழங்க வேண்டும்.

மதிய உணவில் காய்

மதியம் 2 மணி முதல் 2.35 மணிக்குள் மதிய உணவை ஜெயலலிதா முடித்துவிடுவார். அவருக்கு ஒன்றரை கப் பாஸ்மதி அரிசியால் செய்யப்பட்ட சாதமும், யோகர்ட் ஒரு கப்பும், முலாம் பழம் அரை கப்பும், 2.45 மணிக்கு ஜனூவியா 50 எம்பி மாத்திரை வழங்கப்பட வேண்டும். 5.45 மணிக்கு 200 மில்லி காபி வழங்க வேண்டும்.

பிரட் , பால், உலர் பழங்கள்

இரவு உணவை 6.30 மணி முதல் 7.15 மணிக்குள் முடித்துவிடுவார். வால்நட் மற்றும் சில டிரை ப்ரூட்கள் அரை கப், இட்லி உப்புமா ஒரு கப், தோசை ஒன்று, பிரட் 2 துண்டுகள், பால் 200 எம்எல், ஆகியவற்றுடன் மிக்நார் 25 எம்ஜி மாத்திரையும் வழங்க வேண்டும். பின்னர் 7.25 மணிக்கு ஜனூவியா 50 எம்ஜி மாத்திரை வழங்கப்பட வேண்டும் என்று அந்த பட்டியலில் தெரிவித்துள்ளார்.

%d bloggers like this: