விக்கல் ஏன் ஏற்படுகிறது…?

குரல்வளை முகப்பும், உதரவிதானமும் எதிர்பராதவேளையில் சுருங்குவதால் காற்றுக்குழாயில் வந்து சென்றுகொண்டிருக்கும் காற்று தடுக்கப்படுகிறது. இதன்விளைவாக விக்கல் ஏற்படுகிறது. சில நேரங்களில் அதுவே சரியாகிவிடும். சில நேரங்களில் உடல் செயல்பாடுகளில் இடையூறு ஏற்பட்டால் அதற்கான அறிகுறியாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

உதாரணமாக இது வயிற்றுக்கோளாறுகளினாலே ஏற்படுகிறது. எளிதில் ஜீரணிக்க இயலாத உணவுகள் அல்லது வறுக்கப்பட்ட பொருட்கள், எண்ணெய், நெய் அதிகமுள்ள உணவுகளை உண்ணுதல் போன்றவற்றினால் செரிமானக்கோளாறு ஏற்படலாம். டைபாய்ட் காய்ச்சல், பெருங்கட்டிகள் உடலில் தோன்றும் போதும் விக்கலை அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். உடலை மெலியச்செய்து சோர்வுறச் செய்யும் நோய்களின்போதும் இதுபோன்ற விக்கல்கள் தோன்றலாம். தொடர்ந்து கடுமையான விக்கல்கள் அடிக்கடி ஏற்பட்டால் உடன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

%d bloggers like this: