Advertisements

சருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | 

ஒரு துணியில் ஐஸ் கட்டிகளை வைத்துக் கட்டி, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்க்க வேண்டும். 

இதனால் ஐஸ் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். எப்போதும் ஐஸ் கட்டிகளை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தாதீர்கள். 

அதுவும் சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் இப்படி செய்யக்கூடாது. இப்படி தினமும் ஒருமுறை ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்தால், சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

ஒரு கப் க்ரீன் டீயைத் தயாரித்து, குளிர வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அந்த க்ரீன் டீயை முகத்தில் தடவுங்கள். 

இப்படி தினமும் செய்தால், சருமம் புத்துணர்ச்சியுடன் பிரகாசமாக காட்சியளிப்பதோடு, சருமத்தில் உள்ள சுருக்கங்களும் மறையும்.

பப்பாளியை அரைத்து பேஸ்ட் செய்து . பின் அதை தினமும் முகத்தில் போட்டு  5 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவுங்கள். 

பப்பாளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி-யுடன், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. இது சருமத்திற்கு புத்துயிர் அளித்து பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும்.

Advertisements
%d bloggers like this: