மழையும் வெயிலும் மாறிமாறி அடிக்கிற இந்த சமயத்தில் ஏன் தினமும் ஜல்ஜீரா குடிக்கணும்?

ஜல்ஜீரா செய்வது எப்படி

ஜல்ஜீராவை குளிர்ச்சியாக வைத்துக் கொடுப்பதற்காக துணியால் மூடப்பட்டிருக்கும் பெரிய பானைகளில் சேமித்து வைக்கப்படுகிறது, மேலும் புதினா, கொத்தமல்லி இலைகள் மற்றும் சில மசாலாக்கள் சேர்த்து அலங்கரிக்கப்படுகிறது. இது புத்துணர்ச்சி மற்றும் அதிக ஆற்றலை உடனடியாகத் தந்து உங்களை ஊக்கமடையச் செய்கிறது.

சீரகம்தான் இந்த பானத்தின் முக்கிய அத்தியாவசிய பொருட்களில் ஒன்று, அதனால் நீங்கள் சீரகத்தண்ணீரை இதனுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது. ஜல்ஜீரா என்பது வறுத்த சீரகத் தூள், இஞ்சித்தூள், கொத்தமல்லி மற்றும் புதினா, கரம் மசாலா, மிளகாய்த் தூள், மிளகு, கருப்பு உப்பு ஆகியவற்றைக் கலந்த ஒரு பானம். சிறிது புளிப்பு சுவையை கொடுக்க, சிலர் புளி அல்லது உலர்ந்த மாம்பழத்தூளை உபயோகிக்கிறார்கள்.

நன்மைகள்

பாரம்பரியமாக கோடையில் ஜல்ஜீரா விற்பனை செய்யப்படுகிறது. இதை உணவுக்கு முன் குடிப்பதால் பசியைத் தூண்டி, உங்கள் சுவை மொட்டுகள் மற்றும் இரைப்பையிலுள்ள செரிமானச் சாறுகளை விழிப்படையச் செய்கிறது. இந்த மழையும் வெயிலும் மாறிமாறி அடித்து நொறுக்குகிற கோடை வேளையில் ஏன் நாம் கட்டாயமாக ஜல்ஜீரா குடிக்க வேண்டும். அதன் அவசியம் என்ன?

இயற்கைக் குளிர்விப்பான் (Coolant)

கோடையில் உங்கள் உடலை உறிஞ்சும் வெப்பத்தைத் தடுக்கவும், வெப்பம் காரணமாக அதிகமான வியர்வை ஏற்படாமலிருக்கவும் இந்த பானம் பயன்படுகிறது . இத்தகைய சூழல்களில் இயற்கைக் குளிர்விப்பானாக ஜல்ஜீரா பெரிய உதவியாக அமைகிறது. ஒரு இயற்கைக் குளிர்விப்பானாக இருப்பதன் காரணமாக உங்கள் உடலின் நீர்ப்பற்றாக்குறையைக் கவனித்துக்கொள்கிறது. மேலும், உடலில் உள்ள எலக்ட்ரோலைட் மற்றும் திரவங்களைச் சமப்படுத்துகிறது.

துணை ஊட்டச்சத்து (supplement)

ஒரு இயற்கையான நச்சுத்தன்மை நீக்கியான ஜல்ஜீரா , இயற்கையான குளிர்ச்சியுடனும், எலக்ட்ரோலைட் பேலன்சருமாக இருப்பதுடன், ஒரு இயற்கை ஊட்டச்சத்துத் துணையாகும். இது மெக்னீசியம், தாமிரம், இரும்பு, கால்சியம், மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம் போன்ற சில முக்கியமான அத்தியாவசிய கனிமங்களைக் கொண்டுள்ளதால் உடலின் ஊட்டச்சத்து நிரப்பல் அளவை எந்தவித பின்விளைவுகளுமின்றி பராமரிக்க உதவுகிறது.

நச்சுத்தன்மை நீக்கி (Detoxifier):

உங்கள் உடலைச் சுத்திகரிக்கும் பண்பைக்கொண்ட இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் ஜல்ஜீராவும் ஒரு இயற்கையான நச்சுத்தன்மை நீக்கியாகும். உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதில் இந்த பொருட்கள் உதவுகின்றன, எனவே ஜல்ஜீராவை ஒரு இயற்கை நச்சுத்தன்மைநீக்கியாகவும் பயன்படுத்தலாம். மிளகுத்தூள், கொத்தமல்லி, இஞ்சி மற்றும் கருப்பு உப்பு ஆகியவை ஜல்ஜீராவை தயாரிக்க பயன்படும் சில பொருட்களாகும், அவை இயற்கையான உடல் சுத்தப்படுத்திகளாக இருப்பதால் ஜல்ஜீரா இயற்கையான நச்சுத்தன்மை நீக்கியாக உருவெடுக்கிறது.

செரிமானம்

ஜல்ஜீரா பானத்தில் சேர்க்கப்படும் கருப்பு உப்பு செரிமானத்திற்கு மிகவும் நல்லது. சீரகமானது, குடல் வாயு, அமிலத்தன்மை மற்றும் இதய எரிச்சல் ஆகியவற்றைத் தடுக்க உதவுகிறது. மேலும் செரிமானத்தை ஊக்குவிக்கும். மிளகுப்புதினா, இஞ்சி மற்றும் கொத்தமல்லி பேஸ்ட் போன்ற இதர பொருட்கள் ஜல்ஜீராவில் பயன்படுத்தப் பயன்படுகின்றன. எனவே, கோடை காலத்தில் செரிமானப் பிரச்சினைகளை அனுபவிக்கும் போதெல்லாம், சாப்பிட்ட ஒரு மணிநேரத்திற்கு பிறகு ஜல்ஜீராவைக் குடியுங்கள். நிமிடங்களில் உங்கள் செரிமான பிரச்சனை குணமாவதை உணரலாம்.

வயிற்றுப்பிரச்னைகள்

ஜல்ஜீரா தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இஞ்சி அல்லது இஞ்சிப் பொடி, வெப்பம் காரணமாக சிலருக்கு ஏற்படும் குமட்டலுக்கு ஒரு பெரிய தீர்வாகும். அஜீரணம் காரணமாக உருவாகும் வயிற்றுப் புண்களுக்கு சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது. ஜல்ஜீரா உங்கள் செரிமானத்தை மேம்படுத்துவதில் அதிசயங்களைச் செய்கிறது, ஏனென்றால் நீங்கள் பானத்தைப் பருகியவுடன் அதிலுள்ள அனைத்து மசாலாப் பொருட்களை உங்கள் உடல் எளிதில் கிரகித்துக்கொள்வதால் சவ்வூடுபரவல் மூலம் உங்கள் இரைப்பையால் உறிஞ்சப்பட்டு அதிலுள்ள அனைத்து நுண்ணுயிரிகளையும் கொல்லுகிறது. ஆனால், இந்தப் பானத்தில் உப்பு அதிகமாக உள்ளதால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மிதமாக எடுத்துக்கொள்வது சிறந்தது.

பசியை தூண்டும் (Appetizer) :

கோடைகாலத்தில், பெரும்பாலோருக்கு பசித்தல் திறன் குறைந்துவிடுகிறது. ஆனால் இது மிகவும் குறைந்துவிடக்கூடாது , ஏனெனில் உங்கள் உடல் செயல்படுவதற்கு குறைந்தபட்சம் உணவுகளைச் சாப்பிடுவது அவசியம். சீராக விதையிலுள்ள நறுமண எண்ணெய், பசியை அதிகரிக்க உதவுகின்றது. இந்த நறுமண எண்ணெய் இரைப்பை சுரப்பு மற்றும் பசியைத் தூண்டுகிறது. எனவே, இந்தக் கோடையில் பசியின்மை ஏற்பட்டால், சில நொடிகளில் உங்கள் இழந்த பசியை மீட்க காலையில் ஜல்ஜீராவைக் குடிக்கவும்.

நோய் எதிர்ப்பு மருந்து

கோடையில் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு குறையும்போது மலச்சிக்கல் ஏற்படுவது பொதுவானது. மேலும், வாந்தி மற்றும் நீரிழப்பு ஆகியவையும் கோடைகாலத்தில் அதிகப்படியான வியர்வை காரணமாக நேரிடும் திரவ ஏற்றத்தாழ்வு காரணமாக ஏற்படக்கூடும். சூரியக் கதிர்களின் வெப்பத்தாக்குதலால் கோடை காலத்தில் காய்ச்சலும் மிகவும் பொதுவானது. இது போல பல சிக்கல்கள் கோடையில் உங்கள் உடலைத் தாக்குகின்றன, ஆனால் அவை அனைத்திற்கும் ஒரு தீர்வு ” ஜல்ஜீரா” ஆகும். இயல்பாகவே நோயெதிர்ப்புத் தன்மை கொண்ட மிளகு, கொத்தமல்லி சாறு, இஞ்சி ஆகிய இயற்கைப் பொருள்களால் உருவாக்கப்படுவதால் இது சாத்தியமாகிறது.

எடை குறைப்பு

ஜல்ஜீரா உயர்தர கலோரி கொண்ட கார்பனேட்டட் பானங்களுக்கு ஒரு ஆரோக்கியமான மாற்று ஆகும். இந்த பானம் கலோரிகளை எரிக்க உதவுகிறது. குறைந்த கலோரி உள்ளடக்கம் கொண்டிருப்பதால் , எடை இழக்க விரும்பும் அல்லது கலோரி பற்றிய புரிதலுள்ள மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.உங்கள் பசியை போக்குவதன் மூலம் எடையைக் குறைக்க உதவுகிறது மற்றும் குறைவாகச் சாப்பிட ஏதுவாகிறது. எனவே, அதிக கலோரி கார்பனேட்டட் பானங்களை ஒதுக்கி இந்த இயற்கையாகவே குறைந்த கலோரி கொண்ட பானத்தால் நாள் முழுவதும் எனர்ஜெட்டிக்காக இருங்கள்.

அனீமியா

ஆமாம், ஜல்ஜீரா பானம் இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது என்பது உண்மை.சீரகம் விதைகள் இருப்பதே அதற்குக் காரணம். சீரகம் இரத்த சோகையைத் தடுக்க அல்லது சிகிச்சையளிக்க உதவுகிறது, ஏனெனில் அது அதிகளவில் இரும்புச் சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு 100 கிராமுக்கும் சுமார் 66 மில்லிகிராம் இரும்புச் சத்தைக்கொண்டுள்ளது. இதை எடுத்துக்கொள்வதால் உங்கள் உடலில் உங்கள் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும். சீரகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உங்கள் உடலை குளிர்ச்சியாக வைக்கவும் கூட உதவுகிறது. இது செரிமான பிரச்சினைகள், சோர்வு, புலனுணர்வு செயலிழப்பு, கவலை போன்ற இரத்த சோகையின் அறிகுறிகளைத் தடுக்கிறது.

வைட்டமின் சி பற்றாக்குறை

ஜல்ஜீராவில் வைட்டமின் சி அதிகமாக உள்ள உலர்ந்த மாங்காய்த் தூள் அல்லது “ஆம்சூர்” உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் ஸ்கர்வி நோயை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இதய நோய் பாதுகாப்பு , நோய் எதிர்ப்பு அமைப்பு குறைபாடுகள், கர்ப்பகால சுகாதாரப் பிரச்சினைகள்,கண் நோய், மற்றும் தோல் சுருக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு ஆகியவை வைட்டமின் சி-யின் மற்ற பயன்களாகும். இது ஒரு சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும்.மேலும் இது உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் இணைப்புத் திசுக்களைப் பராமரிக்கிறது.

%d bloggers like this: