ஜலதோஷத்தை விரட்டணுமா? – பாட்டு கேளுங்கள்!

கோடை, குளிர்காலம் என்கிற பருவ வித்தியாசம் பார்க்காமல், குழந்தை, பெரியவர் என்கிற வயதுப் பாகுபாடு குறித்துக் கவலைப்படாமல் எல்லோரையும் பாதிப்பது ஜலதோஷம்! இது ஏற்பட்டால், மூக்கடைப்பு, தும்மல் எல்லாம் சேர்ந்துகொண்டு நம்மைப் பாடாகப்படுத்திவிடும். மருந்து, மாத்திரையைத் தேடி ஓடாமலேயே ஜலதோஷப் பிரச்னையிலிருந்து எளிதாக விடுபட்டுவிடலாம், தெரியுமா?

இசை
50 நிமிடங்களுக்கு நன்கு நடனம் ஆடத் தூண்டுவது போன்ற பாடல்களைக் கேட்பவர்களுக்கு, கார்ட்டிசால் ஹார்மோனின் (Cortisol) (ஒருவகை ஸ்டீராய்டு ஹார்மோன். ஸ்ட்ரெஸ் ஹார்மோன் என்றும் சொல்லலாம்) அளவு குறையும். முக்கியமாக சளித் தொந்தரவை விரட்டும் நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும் என்று ஓர் ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
நடைப்பயிற்சி
நடைப்பயிற்சி மேற்கொண்டால் நன்றாக சுவாசிக்க முடியும். மேலும், உங்களின் சைனஸ் பாதை திறக்கவும் நடைப்பயிற்சி உதவும்.
ஓட்டப்பயிற்சி
மூக்கடைப்பைத் தீர்ப்பதற்கான இயற்கை மருந்து ஓட்டப்பயிற்சி.
ஜிம்முக்குப் போக வேண்டாம்
ஜலதோஷம் இருக்கும்போது வெயிட் தூக்கக் கூடாது. இதனால் சைனஸும் தலைவலியும் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. சளி, காய்ச்சல் இருக்கும்போது ஜிம்முக்குப் போவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், ஜலதோஷம் ஏற்படுத்தும் கிருமிகள் உடற்பயிற்சி செய்யும் எந்திரங்களின் மூலம் எளிதாகப் பரவும் வாய்ப்பு உண்டு.

%d bloggers like this: