தினம் தினம் தக்காளி!

காலை உணவிற்கு, மூன்று அல்லது நான்கு தக்காளி சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு, தேவையான சத்துகளும் கிடைக்கும். மேலும், வைட்டமின் இ, சி, ஏ, தையாமின், நியாசின், மெக்னீஷியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற நுண்ணுாட்டச் சத்துகள் உள்ளன.

‘லைக்கோபின்’ என்ற ஆன்டி ஆக்சிடென்டும், ‘காமா அமினோ பியூட்ரிக்’ அமிலமும் உள்ளது. இது, ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும்; புதிய செல்கள் உருவாக்கத்திற்கு உதவும்;
இதய செயல்பாட்டை ஆரோக்கியமாக்கும்.
தக்காளிக்கு பதில், முட்டைக்கோசை சமைக்காமல் சாப்பிடலாம். இதில், ‘டார்டாரிக்’ அமிலம் உள்ளது. பொதுவாக, கார்போஹைட்ரேட்டும், சர்க்கரையும் சேர்ந்தால், கொழுப்பாக மாறி விடும். ஆனால், கோசில் உள்ள அமிலம், சக்தியாக மாற்றி, கழிவாக வெளியேற்றி விடும்; உடம்பில் கொழுப்பு சேராது.
டாக்டர் ஒய்.தீபா, ‘நேச்சுரோபதி’ சென்னை.
sakshaayaan@gmail.com

%d bloggers like this: