பசித்தால் மட்டும் சாப்பாடு!

நெருங்கிய வட்டாரங்களில், யாரேனும் ஒருவருக்காவது, நீரிழிவு பிரச்னை இருக்கும். அந்த அளவிற்கு இந்தப் பிரச்னை பொதுவான ஒன்றாகி விட்டது. இதற்கு முக்கிய காரணம், வாழ்வியல் குறைபாடு. குறிப்பாக, சாப்பிடுவதில் நாம் பின்பற்றும் தவறான பழக்கம். நான்கு விஷயங்களில் கவனமாக இருந்தால், இப்பிரச்னை வராது.
பசி என்ற உணர்வு


முதலில் பசித்து சாப்பிட வேண்டும். பசி இருக்கிறதோ, இல்லையோ, அவசர அவசரமாக, என்ன சாப்பிடுகிறோம் என்றே தெரியாமல், கிடைத்ததை விழுங்கி விட்டு, அரக்கப் பரக்க ஓடுகிறோம். சாப்பிட்ட உணவு நன்கு செரித்து, சத்துகள் எல்லாம் உறிஞ்சப்பட்ட பின், கழிவுகள் வெளியேற வேண்டும்.
பசிக்காமல் சாப்பிட்டால், தேவையான அளவு ஜீரண அமிலம் சுரக்காது; உணவு முழுமையாக செரிமானம் ஆகாது; உணவில் உள்ள சர்க்கரை, ரத்தத்தில் கலக்காது.
கழிவுகளை வெளியேற்றும் சிறுநீரகம், செரிமானம் ஆகாத உணவையும், கழிவு என, நினைத்து வெளியேற்றும்; அதனால் தான் ரத்தத்திலும், சிறுநீரிலும் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது.
உணவை நன்கு மெதுவாக மென்று, அதன் ருசி முழுவதும் கரையும் வரை வாயில் வைத்திருந்து விழுங்க வேண்டும். உணவில் உள்ள சர்க்கரையை செரிமானம் செய்யும் முதல் சுரப்பி, உமிழ் நீர். சாப்பிடும் போது, கவனம் முழுவதும், மொபைல் போன், ‘டிவி’ என இருக்கிறது.
என்ன சாப்பிடுகிறோம் என்பதையே, பல நேரங்களில் கவனிப்பதில்லை. சாப்பிடும் போது, புலன் உறுப்புகளின் ஒத்துழைப்பு அவசியம். மென்று சாப்பிடா விட்டால், உணவு செரிக்காது;
அஜீரணக் கோளாறுகள் வரும். இதன் அடுத்த கட்டம், நீரிழிவு பிரச்னை. உணவைப் பார்த்து, வாசனையை நுகர்ந்து, ருசித்து சாப்பிடும் போது, சுரக்கும் செரிமான அமிலத்திற்கு, உணவை மருந்தாக்கும் சக்தி உள்ளது.
சாப்பிடும் போது, தண்ணீர் குடிக்கவே கூடாது. சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பாகவோ, சாப்பிட்ட பின் ஒரு மணி நேரம் கழித்தோ தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது, உணவுக்கு இடையிடையே குடிப்பது, செரிமான அமிலத்தை நீர்க்கச் செய்யும். புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் வருவதற்கு இதுவே காரணம்.
வைட்டமின், ‘டி’
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க, வைட்டமின், ‘டி’ மிகவும் அவசியம். இந்த குறைபாடு, நீரிழிவைக் காட்டிலும் பலருக்கு அதிகமாக உள்ளது.
சூரிய ஒளியிலிருந்து, நம் தோல் நேரடியாக வைட்டமின், ‘டி’யை உற்பத்தி செய்து கொள்ளும். தினமும் காலை, 7:00 – 8:00 அல்லது மாலை 3:00 – 5:00 மணிக்கு, 20 நிமிடம் நன்றாக சூரிய ஒளி படும்படி இருக்க வேண்டும்.
‘ஏசி’ பயன்பாடு தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆனாலும், வெளிக்காற்றே வராதபடி, அறையை மூடாமல், சிறிதளவாவது ஜன்னல் கதவை திறந்து வைக்க வேண்டும்.
அறையில் உள்ள காற்றை ஒழுங்குபடுத்துவது தான், ‘ஏசி’யின் வேலை வெளிக்காற்று உள்ளே வராவிட்டால், பல நோய்கள் வருவதற்கு வாய்ப்பாக அமையும்.
டாக்டர் பி.யுவபாரத்
ஹோலிஸ்டிக் வெல்னெஸ்,
சென்னை.
yuvapr@gmail.com

%d bloggers like this: