ஓ.பி.எஸ்ஸைக் கேள்வி கேட்ட இளைஞன்!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு யார் காரணம் என்று கடந்த இதழில் நீர் குறிப்பிட்டிருந்த விவரங்கள் சமூகவலைத் தளங்களில் வைரலாகப் பரவியது. அதுபோல், எல்லா வாட்ஸ்-அப் குரூப் களிலும் ஃபார்வேர்டு செய்யப்பட்டது. அதைக் கவனித்தீரா?” என அலுவலகம் வந்த கழுகாரிடம் கேட்டோம். “ஆமாம்” என்று தலையசைத்த கழுகார், நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.
வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்
பணிக்குச் செல்லும் பெண்களின் முதன்மைச் சவால்கள் மற்றும் பாலியல் தொந்தரவுகள் பற்றியும், அவற்றைப் பற்றி அந்தப் பெண்களின் குடும்பத்தினர் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் சென்ற இதழில் பார்த்தோம். இந்த இதழில், ஒரு நிறுவனத்தில் பெண்களின்
அசத்தல் லாபம் கொடுக்கும் ஆவாரம்பூ!
மதிப்புக் கூட்டலில் மூலிகைப் பொருள் களுக்கு முக்கியமான இடம் உண்டு. தமிழ்நாட்டு மூலிகைகளுக்கு மருத்துவக் குணங்கள் நிறையவே உண்டு. பலவிதமான மூலிகைகள் மதிப்புக் கூட்டல் செய்யப்பட்ட பொருளாக விற்கப்பட்டு வருகிறது.
முடக்கு வாதம் வெறும் எலும்பு தொடர்பான நோய் அல்ல… கவனம்!’ – விளக்கம் சொல்லும் மருத்துவம்!
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று, மக்கள்-மருத்துவர் உறவை மேம்படுத்துவதற்கான விழிப்பு உணர்வு கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில், பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் பங்கேற்று பல்வேறுவிதமான நோய்கள், அவற்றுக்கான அறிகுறிகள், சிகிச்சைகள் குறித்து விளக்கமளிப்பார்கள். அந்த வகையில், 28.5.2018 அன்று மூட்டு, தசை, இணைப்புதசைத் துறை சார்பில் கலந்துரையாடல் நடந்தது. இதில், அந்தத் துறையின் இயக்குநரும் பேராசிரியருமான இரா.ரவிச்சந்திரன் பங்கேற்று, முடக்கு வாத நோய்கள் குறித்து விவரித்தார்.
நம்பரும் போயிடும்… பணமும் திருடப்படும்!” – டிஜிட்டல் திருடர்களின் புதிய வழி
தொழில்நுட்ப வளர்ச்சியால், டிஜிட்டல் உலகில் நன்மைக்கு ஈடாகப் பல தீமைகளும் நாள்தோறும் நிகழ்கின்றன. டெக்னாலஜியை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் குற்றவாளிகள் தற்போது புதிதாக `சிம்-ஸ்வாப்’ (SIM-SWAP) என்னும் முறையைக் கையாள்கின்றனர்.
ஹைதராபாத் சைபர் க்ரைம் காவல் நிலையம் சில நாள்களுக்கு முன்பு ஃபேஸ்புக் பதிவில் தகவல் ஒன்றை வெளியிட்டது. அதில் தற்போது சிம்-ஸ்வாப் என்ற புது வழியில் குற்றங்கள் நடைபெறுவதாகவும், அது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைத் திருடிப் பண மோசடியிலும் அவர்கள் ஈடுபடுவதாக அதில் குறிப்பிட்டு அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறியுள்ளனர்.
`சிம்-ஸ்வாப் ‘ மூலம் மோசடி எவ்வாறு நிகழ்கிறது?
தலைமுடி பராமரிப்பில் மருதாணியின் பங்கு….!
முடி கொட்டுதலை நிறுத்தி மேலும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறத. ஹென்னாவின் இயற்கை பண்புகள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இதன் தூளை வழக்கமான முடி எண்ணெயுடன் கலந்து 5 முதல் 6 நிமிடங்கள் கொதிக்கவைக்கவும். இந்த எண்ணெய் குளிர்ந்ததும், இதனை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம். இது முடி உதிர்தலைத் தடுக்கும் மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.