ஊதாதே’ தம்பி ‘ஊதாதே’ ‘ஊதிப்புட்டு’ பின்னாடி ஏங்காதே!

நல்ல பொழுதையெல்லாம் ‘ஊதி’ கழிப்பவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்…’ என மாற்றிப் பாடலாம்.

அந்த அளவுக்கு -புகையிலை பழக்கம் இளைஞர்களை பாடாய் படுத்துகிறது. புகையிலை பாதிப்பு குறித்து

ம், அதன் பயன்பாட்டினை குறைக்க வலியுறுத்தியும் ஆண்டுதோறும் மே 31ம் தேதி, உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ‘புகையிலை மற்றும் இதய நோய்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. புகைப்பதால் உடல்நலனுக்கு தீங்கு ஏற்படுகிறது. வருமானம் வீணடிக்கப்படுகிறது. சமூகத்தில் மரியாதை குறைகிறது. குடும்பமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. 
பிரேசில், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் தான் அதிகளவில் புகையிலை விளைவிக்கப் படுகிறது. உலகில் அதிகளவில் புகையிலை விளைவிக்கும் நாடாக சீனா உள்ளது.இதய நோய்புகையிலை பயன்பாடு, மாரடைப்பு, இதய நோய் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு அடிப்படை காரணமாக அமைகிறது. உலகின் உயிரிழிப்புகளில் முதல் இடத்தை வகிப்பது, இதய நோய் தொடர்பான மரணங்கள் தான். 
இதய நோய் ஏற்படுவதற்கு, 12 சதவீதம் புகையிலை பயன்படுத்துவதுதான் காரணம். யோகாபுகையிலை பாதிப்பை ஏற்படுத்துகிறது என, இதனை பயன்படுத்துபவர்களில் 40 சதவீதம் பேர் தெரிந்துள்ளனர். அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்பது பற்றி, அவர்களுக்கு தெரியவில்லை. இவர்களுக்கு கவுன்சிலிங், யோகா மற்றும் தியானம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். 
50புகைப்பவர்களில், 50 சதவீதம் பேர் உயிரிழப்பை சந்திக்கின்றனர். 70 லட்சம் புகையிலை பயன்பாட்டால் உலகளவில் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் பலியாகின்றனர். இதில் 9 லட்சம் பேர் புகைப்பவர்களின் அருகே சுவாசிப்பவர்கள். 80 சதவீதம் பேர் ஏழை மற்றும் நடுத்தர நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

6இந்தியாவில் 10 – 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களில், 6.25 லட்சம் பேர் தினமும் சிகரெட் புகைக்கின்றனர். 

உலகநாடுகள் 78

உலகின் 78 நாடுகளில், புகையிலை பாக்கெட்டுகளில், அதன் தீங்கு குறித்து பெரிய அளவில் எச்சரிக்கை விளம்பரம் இடம்பெற்றுள்ளது. 

4000 வேதிப்பொருட்கள்

சிகரெட்டில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள் தான், புகைப்பவர்களை அடிமையாக்கு கிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இதில் 250 தீங்கு விளைவிப்பன மற்றும் 50, புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியவை.

32 நாடுகள்

32உலகளவில் புகையிலை பயன்பாட்டை குறைக்க வேண்டுமெனில், இதற்கு விதிக்கப்படும் வரியை அதிகப்படுத்த வேண்டும். 32 நாடுகள் தான் புகையிலை சில்லரை விலையில் 75 சதவீதத்தை வரியாக வசூலிக்கிறது.10ல் 1 சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களில் 10ல் ஒன்று, சட்ட விரோதமான முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

23 கோடி இளைஞர்கள்

உலகளவில் புகையிலை பயன்படுத்தும் 23 கோடி இளைஞர்கள் ஏழ்மையில் வாழ்கின்றனர்.
10உலகில் ஏழை நாடுகளில் 10 சதவீத குடும்பங்களில் வருமானத்தை விட 10 சதவீதம் அதிகமாக புகையிலைக்கு செலவழிக்கின்றனர். இதனால் உணவு, கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கு வருமானம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.1000 கோடி உலகில் தினமும் ஆயிரம் கோடி சிகரெட் பயன்படுத்தப்படுகிறது.

%d bloggers like this: