ஆப்பிள் ரோல், பிஸ்தா இட்லி, பனங்கற்கண்டு சப்பாத்தி… குட்டீஸூக்கான 10 குவிக் லன்ச் ரெசிபிகள்!

து ஸ்கூல் ரீஓபன் காலம். குழந்தைகள் சப்புக்கொட்டி சாப்பிட, ருசியான லன்ச் பாக்ஸ் பேக்  செய்ய வேண்டும் அல்லவா? இதோ, சத்துகள் நிறைந்த 10 க்விக் ரெசிப்பிகளைச் சொல்லித் தருகிறார் சமையல் கலைஞர் லஷ்மி சீனிவாசன்.

வைட்டமின் ஈ சப்பாத்தி!

லன்ச்
பொடித்த பனங்கற்கண்டில் வெண்ணெய்விட்டுக் குழைத்து, அதைச் சப்பாத்தியில் தடவி ரோல்செய்து கொடுத்தால், `இன்னும் ஒரு சப்பாத்தி ப்ளீஸ்’ என்பார்கள் குட்டீஸ்கள்.

கால்சியம் பூரி!

பூரி
குட்டிக் குட்டி பூரிகளின் மேலே பன்னீரைத் துருவிவைத்துத் தந்தால், குழந்தைகளுக்கு ருசியும் கிடைக்கும், சத்தும் கிடைக்கும்.

சத்தான ஜாம் சாதம்!

ஜாம்
ஹோம் மேடு ஃப்ரூட் ஜாம் அல்லது கடையில் கிடைக்கும் தரமான ஜாமை சாதத்தில் போட்டுக் கலந்து கொடுத்தால், சடுதியில் காலியாகும் லன்ச் பாக்ஸ். (தேவைப்பட்டால் வதக்கிய காய்கறிகள், நட்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்)

வைட்டமின் ‘ஏ’ சாண்ட்விச்!

பிரெட்
கேரட், உருளைக்கிழங்கு இரண்டையும் துருவி, உப்புத் தூவி வதக்கி, வெண்ணெய் தடவிய இரண்டு பிரெட் ஸ்லைஸ்களுக்கு இடையில் வைத்தால், சாண்ட்விச் ரெடி.

இரும்புச்சத்து சாண்ட்விச்!

தேன்

பீட்ரூட் அல்லது கேரட் துருவலை வதக்கி, சுத்தமான தேனில் கலந்தும் பிரெட் சாண்ட்விச் செய்யலாம்.

டாக்டரைத் தள்ளி வைக்கும் ரோல்!

ரோல்

பொடிதாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகள், மாதுளை முத்துகள், பொடித்த பனங்கற்கண்டு மூன்றையும் கலந்து, சப்பாத்தி ரோல் செய்து லன்ச் பாக்ஸில் வைத்து அனுப்பவும். (திரட்டிய சப்பாத்திக்குள் வைத்துப் பொரித்தும் எடுக்கலாம்)

கலோரி மினி இட்லி!

நட்ஸ்

மினி இட்லி ஊற்றி, ஒவ்வொன்றிலும் துண்டுகளாக உடைத்த பிஸ்தா, முந்திரி அல்லது பாதாம் பருப்பை வைத்து வேகவிட்டு எடுத்து சுட்டிக்குக் கொடுங்கள். அவர்களை ஆர்ம்ஸ் காட்டவைக்கும் கலோரி, புரொட்டீன் நிறைந்தது இந்த இட்லி.

எலும்புகளை வலுவாக்கும் நூடுல்ஸ்!

கேழ்வரகு
 

ராகி நூடுல்ஸ் அல்லது ராகி சேமியாவை வேகவைத்து, ஜில் தண்ணீரில் அலசி எடுக்கவும். இதனுடன் பொடித்த பனங்கற்கண்டு தூவித் தர, ‘நான் வளர்கிறேனே மம்மி’தான்!

ஸ்பைசி நூடுல்ஸ்!

நூடுல்ஸ்

கோதுமை நூடுல்ஸை வேகவைத்து வடித்து, இதனுடன் வதக்கிய காய்கறிகள், தக்காளி சாஸ் அல்லது தக்காளித் தொக்கு கலந்து தரலாம்.

ஒமேகா ஃபேட்டி ஆசிட் ரோல்!

ரோல்
 

தேங்காய்த்துருவலுடன் சர்க்கரை, நெய் சேர்த்துக் கலந்து தோசைக்குள் வைத்து ரோல் செய்து கொடுக்க, குழந்தையின் மூளை வளர்சிக்குத் தேவையான ஒமேகா ஃபேட்டி ஆசிட்டை கொடுத்துவிட்டீர்கள்… சபாஷ்!

%d bloggers like this: