Advertisements

ஆரோக்கியமான கர்ப்பத்துக்கு அவகேடோ

பார்ப்பதற்குப் பேரிக்காய் போன்ற வடிவத்திலிருக்கும் அவகேடோ பழம், பல அரிய மருத்துவக் குணங்களைக் கொண்டது. இந்தப் பழம் ‘பட்டர் ஃப்ரூட்’ என்றும் அழைக்கப்படுகிறது.

* மோனோ சாச்சுரேடட் கொழுப்பு அமிலம் நிறைந்ததால் நல்ல கொழுப்பை உறிஞ்சுவதற்குப் பயன்படுகிறது.

* மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

* நரம்பு மண்டலச் செயல்பாடுகளைச் சீராக்குகிறது.

* புற்றுநோய் செல்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

* வைட்டமின் கே அதிகமாக இருப்பதால் ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்கிற எலும்பு மென்மையாதல் நோயைக் குணப்படுத்த உதவுகிறது. ஒரு நாளைய வைட்டமின் கே தேவையில் 25 சதவிகிதத்தை, அரைப்பழத்தில்  பெறலாம்.

* கீமோதெரபி சிகிச்சையினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கிறது.

* இதய நோய், உடல் பருமன், சர்க்கரை நோய் வருவதைக் குறைக்கிறது.

* ஆரோக்கியமான கர்ப்பத்துக்கு உதவுகிறது. குறைப்பிரசவத்தையும் தவிர்க்க உதவுகிறது.

* செரிமானத்தைச் சீராக்கி மலச்சிக்கலைத் தவிர்க்கிறது.

* இதிலுள்ள ஸிசாந்தின் (Zeaxanthin) எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் பார்வைத்திறன் மேம்பட உதவுகிறது. புற ஊதாக் கதிர்களின் பாதிப்பில் இருந்து கண்களைப் பாதுகாக்கிறது.

Advertisements
%d bloggers like this: