நெய் செய்யும் மாயம்!

மூன்று வேளையும் உணவில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிடுவது, மிகவும் நல்லது. எந்த சந்தேகமும், பயமும், குற்ற உணர்வும் இல்லாமல் சாப்பிடலாம். உடலுக்குத் அவசியமான நல்ல கொழுப்பை அதிகரிப்பது, ரத்த சர்க்கரை அளவை சீராக வைப்பது, மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை

சரி செய்வது, தோலுக்கு பளபளப்பை தருவது, மூட்டு வலி ஏற்படாமல் தவிர்ப்பது, சீரான ஹார்மோன் சுரப்பு போன்ற அனைத்தையும் தருவது நெய். பிறந்ததில் இருந்து வாழ்நாள் முழுவதும் நெய் அவசியம்.
மதிய நேரத்தில் பலவீனமாக உணர்பவர்கள், மலச்சிக்கல், அஜீரணம், துாக்கமின்மை போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள், உணவில் இரண்டு டீஸ்பூன் நெய், மதியம், இரவு மட்டும் சேர்த்துக் கொள்ளலாம். நாட்டுப் பசுவில் இருந்து கிடைக்கும் நெய்யாக அது இருக்க வேண்டும்.
நெய் வேண்டாம் என நினைத்தால், அதே அளவு எள் சேர்த்துக் கொள்ளலாம்.
ருஐூதா திவேகர், நியூட்ரிஷனிஸ்ட், மும்பை.

%d bloggers like this: