சசிகலா குடும்பத்தின் 2 ஆவது கட்சி – புதுக்கடை திறந்த திவாகரன்

சசிகலாவின் சகோதரர் அண்ணா திராவிடர் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை அவரே ஏற்றுக்கொண்டுள்ளார். 

அதிமுக உள்கட்சி பிரச்னையில் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இணைந்த அணிக்கு இரட்டை இலையும், கட்சி பெயரும் கிடைத்த நிலையில் சசிகலாவின் சகோதரி மகன் டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.

தினகரன் இந்த அமைப்பை தொடங்கியதிலிருந்தே டிடிவி.தினகரனுக்கும் , திவாகரனுக்குமிடையே விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் மாறி மாறி ஊடகங்களில் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் கடந்த மே மாதம் திவாகரன் மன்னார்குடியில் தனிக்கட்சியையும் அதற்கான அலுவலகத்தையும் திறந்தார். திவாகரனின் இந்த செயல் சிறையில் உள்ள சசிகலாவுக்கு தெரியவந்தது. திவாகரன் கட்சியில் தனது பெயரையும் படத்தையும் பயன்படுத்தக்கூடாது என வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் சசிகலா. இதைத்தொடர்ந்து சசகலா இனி என் சகோதரி இல்லை என திவாகரன் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து திருவாரூர் மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழகம் என்ற தனது புதிய கட்சியின் பெயரையும் , கொடியையும் திவாகரன் அறிவித்தார். அந்த கொடியில் கருப்பு, சிவப்பு, வெள்ளை நிற கொடியின் நடுவே பச்சை நிறத்தில் நட்சத்திரம் இடம்பெற்றுள்ளது.

கட்சியை அறிவித்துவிட்டு பேசிய திவாகரன் அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை மட்டும் நான் ஏற்கிறேன் என தெரிவித்தார்.

%d bloggers like this: