குறைவான வட்டியில் வீட்டுக் கடன் பெற சூப்பரான வாய்ப்பு..!

வாடிக்கையாளர்களின் வங்கியியல் நன்னடத்தைக்கு வங்கிகள் வெகுமதி அளிக்கத் துவங்கிவிட்டன. பாங்க் ஆப் இந்தியா மற்றும் பாங்க் ஆ பரோடா வங்கிகள் ஏற்கனவே இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டிருந்த நிலையில், கடந்த செவ்வாயன்று ஐடிபிஐ வங்கியும் நல்ல வாடிக்கையாளர்களுக்கு வெகுமதி வழங்கும் விதமாக, அவர்களின் சிபில்/கிரிடிட் ஸ்கோரை பொறுத்து வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயிக்கப்போவதாக அறிவித்துள்ளன.

பலன்கள் அறுவடை

காரட் மற்றும் குச்சி கொள்கையின் அடிப்படையில் தான் பெரும்பாலான கடன் வட்டிகள் அமைகின்றன. இதில் நல்ல வாடிக்கையாளர்கள் அனைத்துப் பலன்களையும் அறுவடை செய்யலாம். மற்றவர்கள் களைந்தெறியப்படலாம் அல்லது அதிக வட்டி செலுத்த நேரலாம் என்கிறார் சிபில் சி.ஓ.ஓ ஹர்சாலா சான்டோர்கர்.

கடன் பணியகங்கள்

இந்தியாவில் உள்ள நான்கு கடன் பணியகங்களான (credit bureau) சிபில், இக்யூபேக்ஸ், எக்ஸ்பீரியான் மற்றும் சிஆர்ஐஎப் ஹைமார்க், பரவலாக எல்லாவற்றையும் கண்காணித்து, அனைத்து அடிப்படையிலும் ஆராய்ந்து, சரியான நேரத்தில் மின் கட்டணம் செலுத்துனீர்களா என்பது முதல் உங்களுக்குக் கல்லூரி படிக்கும் போது வாங்கித் தந்த இருசக்கர வாகனத்திற்கான தவணையைப் பெற்றோர் சரியாகச் செலுத்தினார்களா என்பது வரை,உங்கள் கடனுக்கான ஸ்கோரை பாதிக்க வைக்கின்றன.

தகவல் தொகுப்புகள்

கடந்த சில வருடங்களாக, வங்கியில்லா நிதி நிறுவனங்களும், சிறு நிதி நிறுவனங்களும் தங்களிடம் கடன் பெறுபவர்களின் தகவல்களைக் கடன் பணியகங்களுக்கு அனுப்புகின்றனர்.

அதனால் கடன் வழங்குபவர் மதிப்பீடு செய்ய ஏராளமான தகவல் தொகுப்புகள் உள்ளன. சிபில் தற்போது டிராயிடம் பேசி கைப்பேசி கட்டண தகவல்கள் மற்றும் பிற நிறுவன கட்டண விவரங்களைப் பெற முயல்வதால், இது மேலும் விரிவடையும்.

மதிப்பீடு

வாடிக்கையாளர் தரவுகளைச் சிபில் மதிப்பிடுவதற்கான ஒட்டுமொத்த காரணம், ஒரு கட்டத்தில் அதைப் பலன்களாக மாற்றுவது தான். பெருநிறுவனங்களின் கடன்கள் எப்போதும் மதிப்பீடு செய்யப்பட்டுப் பாதுகாப்பற்ற கடன், மாற்றக்கூடியவை AAA மற்றும் BB++ தரமதிப்பீடு தரப்படுகிறது. இதன் மூலம் அவர்களின் மதிப்பீடுகளை எளிதில் அறிந்துகொள்ளலாம்.

ஐடிபிஐ வங்கி

ஐடிபிஐ வங்கியை பொறுத்தவரை, சிபில் ஸ்கோர் 700ஐ விட அதிகமாக உள்ள வாடிக்கையாளர்களுக்கு 5-15 அடிப்படை புள்ளிகள்( 1 சதவீத புள்ளி= 100 அடிப்படை புள்ளி) மலிவாகக் கடன் வழங்கப்படுகிறது. கடன் நடத்தை மற்றம் திருப்பிச் செலுத்தும் வரலாறை பொறுத்துக் கிரிடிட் ஸ்கோர் 300 முதல் 900 வரை இருக்கும்.ஆகவே அதிக மதிப்பெண் இருந்தால், புதிய கடன் பெறும் வாய்ப்பும் அதிகம்.

பணி என்ன?

ஆனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள், கடன் பணியகத்தின் பணி என்ன?

வாழ்வில் எப்போதோ செய்ய ஒரு விசயம் பின்னாளில் பாதிக்குமா என்பதைப் பற்றித் தெரியாமலேயே உள்ளனர். இந்தியாவில் தகவல்களைத் திரட்டவும் ஒருங்கிணைக்கவும் பயன்படும் வழிமுறைகள் மிகவும் மலிவானவை. மற்றம் பெரும்பாலான நேரங்களில், நிதி நிறுவனங்களின் தேவைக்கும் அதிகமான கூடுதல் தகவல்களைப் பகிருவதற்கு முன்பாக உங்கள் அனுமதியே தேவைப்படாது.

%d bloggers like this: